PS-S1E3-பொன்னியின் செல்வன்/E3-விண்ணகரக் கோயில்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Vinnagara Koyil / Puthu Vellam episode artwork

EPISODE · Jul 20, 2022 · 15 MIN

PS-S1E3-பொன்னியின் செல்வன்/E3-விண்ணகரக் கோயில்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Vinnagara Koyil / Puthu Vellam

from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள்  விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி  இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள்  போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற  இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது. பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது. "அடே! இந்தக் குருதையைப் பாரடா!" என்றான் ஒருவன். "குருதை என்று சொல்லாதேடா! குதிரை என் சொல்!" என்றான் இன்னொருவன். "உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குருதையா  அல்லது கழுதையா என்று தெரிந்து கொள்ளுங்கள்!" என்றான் இன்னொருவன்  வேடிக்கைப் பிரியன். "அதையும் பார்த்து விடலாமடா!" என்று சொல்லிக் கொண்டு, அந்த ஆட்களில்  ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் மேல் தாவி ஏற முயன்றான். ஏறப்  பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை  தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றிக் கொள்ள மாட்டேன் என்று  முரண்டு பிடித்தது! "இது பொல்லாத குதிரையடா! இதன் பேரில் நான் ஏறக் கூடாதாம்!  பரம்பரையான அரசகுலத்தவன்தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர்  முத்தரையன் திரும்பி வந்துதான் இதன் மேல் ஏறவேண்டும்!" என்று அவன்  சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள். ஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசித்துப் போய் நூறு  ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்களின் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து  கொண்டிருந்தது. "குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால்,  செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற  தாண்டவராயனே மேல் என்பேன்!" என்றான் மற்றொரு வீரன். "தாண்டவராயா! உன்னை ஏற்றிக் கொள்ள மறுக்கும் குதிரை நிஜக்  குதிரைதானா என்று பார்த்துவிடு! ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த  பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம்!" என்றான் மற்றொரு பரிகாசப்  பிரியன். "அதையும் சோதித்துப் பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு  குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள  அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம்  பிடித்தது. "குருதை ஓடுகிறதடா! நிஜக் குருதை தானடா!" என்று அவ்வீரர்கள்  கூச்சலிட்டு, "உய்! உய்!" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும்  விரட்டினார்கள்!. குதிரை, திருநாள் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று. ஜனங்கள் அதன்  காலடியில் மிதிபடாமலிருப்பதற்காகப் பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து  கொண்டார்கள். அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு விழுந்தார்கள். குதிரை  நெறிகெட்டு வெறி கொண்டு ஓடியது. இவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில் நடந்து  விட்டது. அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை அவனுடைய குதிரை என்பதை  ஆழ்வார்க்கடியான் கண்டு கொண்டான். "பார்த்தாயா, தம்பி! அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த வேலையை!  என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே!" என்று குத்திக்  காட்டினான். வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனினும்  பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்தான். பழுவூர் வீரர்கள்  பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்குப்  போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக்  காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு,  அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள். குதிரை போன திசையை நோக்கி  வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று  விடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அதைப் பற்றி அவன்  கவலைப்படவில்லை. பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு புத்தி  கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.

Episode metadata supplied by the publisher feed · Published Jul 20, 2022

Embed this episode

NOW PLAYING

PS-S1E3-பொன்னியின் செல்வன்/E3-விண்ணகரக் கோயில்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Vinnagara Koyil / Puthu Vellam

0:00 15:21

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும்?

This episode is 15 minutes long.

When was this இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் episode published?

This episode was published on July 20, 2022.

Can I download this இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!