ஒலிவட்டம்

PODCAST · arts

ஒலிவட்டம்

பரபரப்பான ஒரு வேலை வேளையில் உங்களை பார்த்து டீ சாப்பிட போலாமா என்ற ஆசையை தூண்டி கடத்திவருகிறேன். பெரிய மழைக்கு முன் டீ கடையை அடைய சாரல் மழையில் சாலையை தாண்டி வந்த நமக்கு, பிடித்த சூடான ஸ்டார்ங்க் டீயுடன் பேசி களிக்க, ஆசுவாசம் அடைய எதுவும் இல்லாமலா போகும்? வாங்க பேசலாம்! History, Culture, Literature, Books, Food, Movies, Art etc..This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.

  1. 60

    S2E29: பழைய கதை

    Southindian inscriptions vol 3 Thank you Krishnavel for the recommendation

  2. 59

    S2E28: அதிரூபனே

    மத்தேயு 3:13-16அப்பொழுது இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு யோவானிடத்தில் வந்து அவரால் ஞானஸ்நானம் பெற விரும்பினார்… இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன் நீரிலிருந்து எழுந்தார்.

  3. 58

    S2E27: Real Threat

    அமெரிக்க மழைக்கு குடை பிடிக்கும் வரலாறு

  4. 57

    S2E26: குஞ்சரம்

    தாது வருடத்தின் கொடிய பசிப் பிணியை போக்க விறகுகளாக எரிந்த தெய்வம் காவல் கோட்டம்

  5. 56

    S2E25: ஈகை

    அல்லா துளியும் கருணை காட்டாமல் தண்டனையாகவே மயிலாசனத்தில் அமரவைக்கிறார். இடக்கை • எஸ் ரா

  6. 55

    S2E24: GIG

    Feb 12 Strike

  7. 54

    S2E23: தாய் மனம்

    Composer: Sushin ShyamMovie: Manjummel Boys

  8. 53

    S2E22: செவுரு

    மதுரையின் அதிகாரம் • அரண்

  9. 52

    S2E21: DemoCrazy

    எது ஜனநாயகம்?

  10. 51
  11. 50

    S2E19: Excuse

    A new year is a good excuse

  12. 49

    S2E18: typeCASTE

    For ex:1968 Kilvenmani1995 Kodiyankulam1999 Thamirabarani2023 Vengaivayal

  13. 48

    S2E17: Wrapped

    Book list of 2024

  14. 47

    S2E16: Makhfi

    Tell these longings to go dwell elsewhereWhat space is there for them in this besmirched heart? - Bahadur Shah II

  15. 46

    S2E15: Estate II - தாமிரபரணி

    1999 Thamirabarani Massacre of Manjolai Plantation workers

  16. 45

    S2E14: Estate

    Stories untold.

  17. 44

    S2E13: ஆலா

    இச்சா • ஷோபாசக்தி : எனக்கு இயக்கத்தில் சயனைட் குப்பி வழங்கியபோது அதை வாங்கி, மூன்று சாண்கள் நீளமுள்ள கறுப்புக் கயிற்றில் கட்டி எனது கழுத்தில் மாட்டிக்கொண்டேன். ஆனால் நான் ஒருபோதும் சயனைட் அருந்திச் சாகமாட்டேன் என்பது எனக்குத் தெரியும். இந்த உயிர் பேராற்றலுள்ளது. இந்த ஆற்றலைத் திருட்டு நாய் இருட்டில் கஞ்சி குடிப்பதுபோலச் சாவு குடித்துவிடக் கூடாது.

  18. 43

    S2E12: Music of Kadhal (2004)

    A reminder to find this gem back again in your playlists. Hats off Joshua Sridhar for such a fantastic end to end album with all the dimensions.

  19. 42

    S2E11: Madura Vijayam

    சொல்லப்படாத ஆயிரம் ஆயிரம் கதைகளின் தலைநகரம் மதுரை. எங்கோ சம்பந்தம் இல்லாத நிலத்தில், கலாச்சாரத்தில், மொழியில், பண்பில் இருந்த ஒரு துருக்கிய பேரரசு தென் கோடியில் உள்ள மதுரையை போரிட்டு வெல்ல காரணம் என்ன? பாண்டியர்கள், டெல்லி சுல்தானேட் படையெடுப்பு, குமார கம்பண்ணாவின் கைப்பற்றுதல், பாளையங்கள், ஆங்கியேலர்களின் சூழச்சி, மருதுப்பாண்டியர்கள், கடைசி அரசர் வேங்கை வரை.

  20. 41

    S2E10: Thaniyavarthanam

    Season 2 Episode 10: தலைமுறைக்கு ஒரு ஆண் பித்து பிடித்து சாகும்வரை சங்கிலியில் இருக்கும் சாபத்துடன் ஒரு குடும்பத்தில் அடுத்த தலைமுறையின் ஆண்மகனாக பாலன் இருக்கிறான். பழியோ சாபமோ சாமியோ அல்ல சமூகம் என்ற பேய்தான் பெரும்பாலம் இவற்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. Thank you @sudeshhhhhhhh for such an impactful conversation on this cult classic.

  21. 40

    S2E9: உதவி இயக்குநர்

    ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒரு சினிமாவின் பின்னனியில் இருக்கும் உழைப்பும், களிப்பும், கவலைகளும், போட்டியும், பொறாமையும், அடுத்த இலக்கிற்க்கான எதிர்ப்பார்ப்புகளும், தயார்படுத்துதலும் அவ்வளவு எளிதில் பேசிவிட முடியாதது. ஓர் இயக்குநரின் படை எத்தனை பொறுப்புகளையும், மாற்றத்தையும் ஷூட்டிங் ஸ்ப்பாட்டில் கையில் கொண்டிருக்கிறது என்பதை சுறுக்கமாக அறிய இவ்வுரையாடல் பயனுள்ளதாக இருக்கும்.

  22. 39

    S2E8: நன்றி Klopp

    Why I will miss Klopp? One of the greatest football managers who managed Liverpool FC is leaving the club at the end of this season.

  23. 38

    S2E7: திருட்டு கதை

    இதுவரை பார்க்காத சில பக்கங்களின் அறிமுகம்

  24. 37

    S2E6: WAR | போர்

    வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது நமக்கு?

  25. 36

    S2E5: பத்து தல

    அசுரன் புத்தகம் எனக்கு கற்று தந்தவை. ஒரு பேரரசனின் ஆழ் மனது எத்தனை நிராசைகள், எத்தனை பயங்கள், எத்தனை பகீரங்களை கொண்டிருக்கும்? Cover art by: Nimmi Gupta via Pinterest

  26. 35

    S2E4: புலம்பெயர் இலக்கியம்

    நூல் மற்றும் நூலாசிரியர் அறிமுகம். வீடியோ பதிவிலிருந்து எடுக்கப்பட்டதால் குறைகள் இருக்கலாம். சிறுகதை: மிக உள்ளக விசாரணை - ஷோபா சக்தி. மேற்கோள் காட்டப்பட்ட நூல்கள்: மண்டோ சிறுகதைகள், ஸலாம் அலைக் - ஷோபா சக்தி, ஜாப்னா பேக்கரி - வாசு முருகவேல், நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - தெய்வீகன், ஓர் கூர்வாளின் நிழலில் - தமிழினி.

  27. 34

    S2E3: Apocalypto

    And a Man sat alone, drenched deep in sadness. And all the animals drew near to him and said, "We do not like to see you so sad. Ask us for whatever you wish and you shall have it." The Man said, "I want to have good sight." The vulture replied, "You shall have mine." The Man said, "I want to be strong." The jaguar said, "You shall be strong like me." Then the Man said, "I long to know the secrets of the earth." The serpent replied, "I will show them to you." And so it went with all the animals. And when the Man had all the gifts that they could give, he left. Then the owl said to the other animals, "Now the Man knows much, he'll be able to do many things. Suddenly I am afraid." The deer said, "The Man has all that he needs. Now his sadness will stop." But the owl replied, "No. I saw a hole in the Man, deep like a hunger he will never fill. It is what makes him sad and what makes him want. He will go on taking and taking, until one day the World will say, 'I am no more and I have nothing left to give.'"

  28. 33

    S2E2: எட்டுத்திக்கும் மதயானை

    குருதி மேலெழுந்து கிளைகளாக பிரிந்து செல்லும் நரம்புகளின் ஊடே ரயில் தண்டவாளங்கள் தாங்கி செல்கின்றன பூலிங்கத்தின் தலையெழுத்தை

  29. 32

    S2E1: மெட்ராஸ்

    Importance and evolution of prominent writers from Madras. How Madras literature has fascinated me?

  30. 31

    ஒலிவட்டம் Ep 30: தோட்டி

    எனக்கு அறிமுகமான தகழியின் சுடலைமுத்து ஒரு தோட்டியின் மகன்

  31. 30

    ஒலிவட்டம் Ep 29: Guantanamo Bay

    Events happened before and after 9/11 attack. About the most controversial detention center USA has built to capture war prisoners from Afghanistan

  32. 29

    ஒலிவட்டம் Ep 28: VERTIGO

    ஹிட்ச்காக்கின் வெர்டிகோ மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் தாதா மிராசி இயக்கிய புதிய பறவை ஆகிய கிளாசிக் திரில்லர்களை கொண்டாடும் ஒரு உரையாடல். 1958 மற்றும் 64 இல் வெளிவந்த இப்படங்கள் இன்றும் படத்தின் கடைசி நொடி வரை நம்மை கட்டி இழுத்து வைத்திருப்பதுதான் இதன் சிறப்பு

  33. 28

    ஒலிவட்டம் Ep 27: Kitchen Capitalism

    உழைப்பு சுரண்டலுக்கு எதிரான போர், அரசியல் மாற்றம், புரட்சி, சமத்துவம் இவையெல்லாம் உன் வீட்டு அடுப்பங்கரையிலிருந்து தொடங்கவில்லை என்றால் எல்லாம் வெறும் பொய் பிரச்சாரமே!

  34. 27

    ஒலிவட்டம் Ep:26 Tamil Indie Music

    தமிழுக்கு கிடைத்த தங்கமான தனி இசை கலைஞர்களை கொண்டாடும், பலருக்கு அறிமுகம் செய்யும் ஒரு முயற்சி. ‘கலை’ - மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது!

  35. 26

    ஒலிவட்டம் Ep 25: Villains • வில்லன்கள்

    இன்றைய Meme culture க்கு தீனி போட்டு வளர்க்கும் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத 90களிலிருந்த crazy, weird வில்லன்களை பற்றிய ஒரு ஜாலியான எபிசோட். Ft.Nishanth.

  36. 25

    ஒலிவட்டம் Ep 24: Wall of Berlin

    இன்றைய உக்ரைன், ரஷ்யா போர் பதற்றத்தின் நூற்றாண்டு கால வரலாறு. இரண்டாம் உலகப்போரின் பின் முதலாளித்துவ நாடுகளுக்கும், சோவியத்திற்கு இடையே இருந்த பகைக்கும் இன்றைய போருக்கும் என்ன சம்பந்தம்? அதில் பெர்லின் சுவரின் பங்கு என்ன?

  37. 24

    ஒலிவட்டம் Ep 23: DAM | நிலம்

    உலகெங்கிலும் நிலமற்று ஒடியாடி திரிந்துக் கொண்டிருக்கும் சில மக்களின் குரல். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் கள்ளிப்பட்டியின் கதை மட்டுமல்ல. இவ்வுலகில் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்ட ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் கதை.

  38. 23

    ஒலிவட்டம் Ep 22: தமிழ் போல் வளர்க •

    மதம், இனம், சாதி இவையாவும் கடந்து தமிழை நேசிப்பவர்கள் இம்மொழி வளர என்னதான் செய்ய முடியும்? கர்வம், செருக்குகளைத் தவிர்த்து உண்மை தமிழை அறிய கொஞ்சமாவது முற்பட வேண்டும். நம் சாதி, நம் மதம் என்றக் காரணங்களை கொண்டுப் பெயர்கள் கூட ஒட்டுண்ணிகள் இல்லாத தமிழில் வைக்கமுடியாத நிலையில் நாம். என் மனம் கவர்ந்த சிறந்த தமிழ் மொழியைக் கொண்டாடும் புத்தகமான 'அறியப்படாத தமிழ் மொழி'யை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

  39. 22

    ஒலிவட்டம் Ep 21: வ•ந்•தே•றி

    யார் தமிழன்? நீ தமிழனா? நான் தமிழனா? DNA test செய்முறை என்ன? இதைப்பற்றி நண்பர்களின் கருத்துகளை நிஷாந்த், சுதேஷுடன் பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடல்

  40. 21

    ஒலிவட்டம் Ep 20: பவா என்னும் கதை சொல்லி

    ஒவ்வொரு கதையும் நம்மை போன்ற இன்னொரு சாமானிய மனிதனை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும். எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பொக்கிஷம் 'பவா'. எனக்கு பல கதைகளை, கதவுகளை, எழுத்தாளர்களை திறந்து காண்பித்தவர். என் நெஞ்சோடு சேர்ந்து வைத்திருக்கும் அவரையும், அவர் குரலையும், கதைகளையும் உங்களுக்கு பகிர்ந்தளிக்கிறேன்.

  41. 20

    ஒலிவட்டம் Ep 19: Justice Party • தமிழ்நாட்டின் அரசியல்

    நமக்கு உடுத்த உடை, உணவு, இடம், தண்ணீர், பணம் போன்றவை எவ்வளவு முக்கியமோ அதே அளவு உங்களின் அரசியலும் அதன் அடிதளமும் முக்கியம். தமிழ்நாட்டின் சமூகநீதி கொள்கைகளுக்கு முதல் புள்ளி வைத்து நம்மை தலை நிமிர செய்த நீதிக்கட்சியை பற்றிய சில குறிப்புகள். இம்மண்ணின் அரசியலை சுருக்கமாக கேட்க உங்களின் 30நிமிஷம் போதும்.

  42. 19

    ஒலிவட்டம் Ep 18: War of Currents • Edison vs Tesla

    Direct Current, Alternating Current இன் கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றை தலைகீழ் புரட்டி போட்ட சமயம், எடிசனுக்கும் டெஸ்லாவிற்கும் இடையே நடந்த மின்சார போர் பற்றிய பதிவு. எடிசனின் காழ்ப்புணர்ச்சி மற்றும் வியாபார நோக்கம் டெஸ்லாவை எப்படி நசுக்கியது என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். பல உண்மைகள் கசக்கதான் செய்யும்

  43. 18

    ஒலிவட்டம் Ep 17: என்றென்றும் Cricket • Part 1

    மனசுக்கு நெருக்கமான, நம் வீட்டு வாசப்படியில் ஆட தொடங்கிய ஒரு விளையாட்டு நம்ம கூடவே எவ்வளவு தூரம் பயணிச்சிகிட்டே வருது! மறக்க முடியாத பல cricket தருணங்களை ஜாலியா பேசியிருக்கோம். Ft. Nishanth

  44. 17

    ஒலிவட்டம் Ep 16: காதலும் கடந்து போகும்

    சில திரைப்படங்களை, கதைகளை, கதை மாந்தர்களை நம் மனதில் தீரா காதலோடு பூட்டி வைத்து அடிக்கடி ஆசையாய் திறந்து பார்த்து கொஞ்சிக் கொள்வோம். அப்படிப்பட்ட செல்லங்களான கதிர் மற்றும் யாழினியை இன்று நானும் நண்பன் Prem-உம் கடந்து செல்கிறோம். வந்து இணைந்துக் கொள்ளுங்கள் ❤️

  45. 16

    ஒலிவட்டம் Ep 15: Columbus discovered Racism • Slavery

    வரலாற்றின் மாபெரும் பயணியும் வணிகருமான Christopher Columbus உண்மையில் என்ன செய்தார்? ஏற்கனவே தோன்றி மனிதன் வாழ்ந்து வந்த அமெரிக்காவை ஒரு மனிதனால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? அங்கிருந்த பழங்குடியினரின் நிலைமை என்னவானது ? இன்றைய அமெரிக்க நிறவெறிக்கும் சர்வதேச Slave Tradeக்கு அன்றைய Columbusஇன் பங்கு என்ன? வாங்க உண்மையை பேசலாம்!

  46. 15

    ஒலிவட்டம் Ep 14: வீடு • பாலுமகேந்திரா

    வீடு என்ற இந்த படம் எதனால் காலம்காலமாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு? பாலு மகேந்திரா எனும் மகத்தான கலைஞனின் இந்த திரைப்படத்தை பெரும் வியப்புடன் ரசித்து ரசித்து சிலாகித்து கொண்டே நடந்த ஒரு உரையாடல் ❤️ நிச்சயம் இது இந்த திரைப்படத்தை எடைபோடும் அல்லது review செய்யும் முயற்சி இல்லை. படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாட மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. முக்கிய பங்காற்றிய நண்பன் ராஜேஷ்க்கு நன்றி 🙏♥️

  47. 14

    ஒலிவட்டம் Ep 13: பௌத்தம் Starter Pack • Buddhism

    நமக்கு புத்தரை நல்லா தெரியும். ஆனா பௌத்தம் என்பது அடிப்படையில் என்னவாக இருக்கும் என்று யோசித்து இருக்கிறோமா? இந்தியா - நேபாளத்தில் தோன்றிய ஓர் சித்தாந்தம் நம் மரபுகள் மதங்களை காட்டிலும் எப்படி வேறுபட்டு இருக்கிறது என்று எளிதில் சொல்ல முயற்சித்து இருக்கிறேன். கடலளவில் ஒரு துளியை காட்டத்தான் எனக்கு புரிதலும் அறிவும் இருக்கிறது 🙏

  48. 13

    ஒலிவட்டம் Ep 12: பிரியாணினா எவ்வளவு பிடிக்கும்? • Biriyani

    பிரியாணி எனும் உணவை பற்றி, எனக்கு பிடித்த பிரியாணி வகைகளைப் பற்றிய ஒரு சுவையான உரையாடல். கூடுதல் இணைப்பாக எங்கள் வீட்டு பெஸ்ட் பிரியாணியின் ரெசிபி மற்றும் செய்முறையை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். நிச்சயம் அனைவரும் முயற்சி செய்யலாம். என்னை தொடர்பு கொள்ளலாம் ♥️

  49. 12

    ஒலிவட்டம் Ep 11: Biblioclasm • யாழ்ப்பாணம் | Cultural Genocide

    பல போர்களில், நிலத்தையும் மக்களையும் கைப்பற்றும் ஒரு பேரரசு அந்த மண்ணின், மக்களின் வரலாறு, இலக்கியம், கலாச்சாரங்களை மறைக்கவும், மறக்கடிக்கவும் அந்நாட்டின் புத்தகங்களை மற்றும் நூலகங்களை எரிப்பது வழக்கம். இது 20ஆம் நூற்றாண்டில் நடந்தேறிய மிகப் பெரிய 'Cultural Genocide' பற்றிய பதிவு.

  50. 11

    ஒலிவட்டம் Ep 10: Pradeep Kumar விசிறி ❤️

    ஓடிக்கிட்டே இருக்கின்ற பல தருணங்களில் எப்போது தேவைப்பட்டாலும் இன்ப தேன் பாய்ச்சும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு குரல் பிரதீப்குமாரினுடையது. அவரின் இதுவரையான திரை மற்றும் இசை பயணத்தை பதிவிடுகிறேன். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல விலைமதிக்க முடியாத பாடல்கள் பாடி இசைத்துள்ளார். அவற்றை உங்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த பதிவின் எண்ணம். Cover Picture: Vidya Vijay அவர்களுடையது

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

பரபரப்பான ஒரு வேலை வேளையில் உங்களை பார்த்து டீ சாப்பிட போலாமா என்ற ஆசையை தூண்டி கடத்திவருகிறேன். பெரிய மழைக்கு முன் டீ கடையை அடைய சாரல் மழையில் சாலையை தாண்டி வந்த நமக்கு, பிடித்த சூடான ஸ்டார்ங்க் டீயுடன் பேசி களிக்க, ஆசுவாசம் அடைய எதுவும் இல்லாமலா போகும்? வாங்க பேசலாம்! History, Culture, Literature, Books, Food, Movies, Art etc..This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.

HOSTED BY

மேகம்

CATEGORIES

URL copied to clipboard!