PODCAST · kids
ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)
by Raja Nagarajan
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups.This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth.Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:[email protected]
-
241
இரு நூற்றி முப்பத்தி ஒன்பதாவது கதை:வானத்திலிருந்து பணம் (Money from The Sky)
இது ஒரு துருக்கி நாட்டுக் கதை.துருக்கி நாட்டின் ,தெனாலி ராமன்,என்று அழைக்கப்படும்,நஸ்ருதீன் ஹோட்ஜா-முல்லா நஸ்ருதீன் -ஒரு மத போதகர்-மக்களை சிரிக்க வைத்து சிந்திக்க தூண்டியவர். அவருடைய வாழ்க்கைநிகழ்ச்சிகள்,முல்லா கதைகள் என்றதொகுப்பில் இருக்கின்றன்.96 வது கதையில்.அறிமுகமான இவருடையவாழ்க்கையிலிருந்து, ஒரு சம்பவத்தைஇப்போது கேளுங்கள்....
-
240
இரு நூற்றி முப்பத்தி எட்டாவது கதை:மந்திர புல்லாங்குழலும் மந்திர மத்தளமும் (Magic Flute & Magic Drum)
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.ஒரு சந்நியாசி ஒரு கிராமத்திற்குவருகிறார்.ஒரு பணக்காரர் அவருக்கு உணவு தர மாட்டேன் என்று விரட்டி விடுகிற்றார். அதேகிராமத்தில்,ஏழையான அவருடையதம்பி அவருக்கு சாப்பாடு போட்டுதங்க இடமும் கொடுக்கிறார்.சந்நியாசி அவருக்கு ஒரு மாய புல்லாங்குழலை கொடுக்கிறார்.அதை ,அவர் அண்ணன் ஏமாற்றிதன்னிடம் வைத்து கொள்கிறார்.அப்புறம் என்ன ஆச்சு?கதையை கேளுங்கள்...
-
239
இரு நூற்றி முப்பத்தி ஏழாவது கதை: ஒரு சோதிடரின் மகன் (An Astrologer's Son)
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.கங்காசாரா என்ற ஒரு வாலிபனின் கதை.அவனுடைய அப்பாஒரு புகழ்பெற்ற ஜோதிடர்.அவன் பிறந்தவுடன்அவனுடைய ஜாதகத்தை கணித்து,வறுமை,சிறை வாசம்,வீட்டைவிட்டு வெகு தூரத்தில் மரணம்,அதன் பிறகு—சந்தோஷம்என்று சொல்லுகிறார்.அப்பாவின் கணிப்புகள்ஒருபோதும் தப்பாதுஎன்று நம்பிய கங்காசாரா,சோர்ந்து போகவில்லை.நம்பிக்கையுடனும்தைரியத்துடனும்தன் வாழ்க்கையைஎதிர்கொள்கிறான்.ஜோசியம் பலித்ததா?கங்காசாராவுக்கு என்ன ஆயிற்று?கதையை கேளுங்கள்…
-
238
இரு நூற்றி முப்பத்தி ஆறாவது கதை-உலகத்திலேயே சிறந்ததும் மோசமானதும் எது?-The Best and the Worst
இது ஒரு பழமையான தமிழ் நாட்டுக்கதை.ஒரு ஊரில் ஒரு கொடுங்கோல அரசன்.வயதாகி விட்டாலும், அவருக்கு வாரிசில்லை.ஒரு நாள், ஒரு வாலிபன் வந்து,“நான் தான் உங்கள் மகன்” என்று கூறுகிறான்.அரசர், அவனுடைய புத்திசாலித்தனத்தைச் சோதிக்கஇரண்டு கடினமான பணிகளை அளிக்கிறார்.அந்த வாலிபன் வெற்றி பெற்றானா?உண்மை என்ன?கதையை கேளுங்கள்…
-
237
இரு நூற்றி முப்பத்தி ஐந்தாவது கதை:கனவுகளுக்கு விளக்கம் தரும் பாம்பு(A Snake that interprets dreams)
இது ஒரு ஜியார்ஜியா நாட்டுக்கதை.அந்த ஊர் ராஜா,மூன்று விசித்திரமானகனவுகள் காண்கிறார். அவைகளின்அர்த்தத்தை ஒரு பாம்பு ,ஒரு விவசாயிக்குசொல்கிறது.அதற்கு பதிலாக ,விவசாயி,ராஜா கொடுக்கும் பரிசு பணத்தில் பாதியைபாம்புக்கு கொடுக்க வேண்டும் என்றுஒப்பந்தம். விவசாயி பாம்பை ஏமாற்றிபணத்தை தன்னிடமே வைத்து கொள்கிறான்.அப்புறம் என்ன ஆச்சு?கதையை கேளுங்கள்......
-
236
இரு நூற்றி முப்பத்தி நான்காவது கதை-சீன சக்ரவர்த்திக்கு கிடைத்த மிக பெரிய பரிசு
இது ஒரு சீன நாட்டுக் கதை.சீன சக்ரவர்த்திக்கு, ஒரு இந்திய ராஜா,ஒரு பரிசை கொடுக்கிறார்.சக்ரவர்த்திக்கு வந்த பரிசுகளில் அது தான் மிக பெரிய பரிசு.சக்ரவர்த்திக்கு அதன் எடை தெரிய ஆசைப் பட்டார். எப்படி கண்டு பிடிப்பது என்றுயாருக்கும் தெரிய வில்லை.முடிவில்,ஒரு சின்ன பையன்அதற்கான வழியை சொல்லுகிறான்.மிக பெரிய பரிசு என்ன?பையன்,எப்படி அதன் எடையைகண்டுபிடித்தான்?கதையை கேளுங்கள்....
-
235
இரு நூற்றி முப்பத்தி மூன்றாவது கதை:கஞ்சன் பல்லுஷாவின் கதை (Story of Ballu Shah,the Miser)
இது ஒரு இந்திய நாட்டுக்கதை.கதையின் கதாநாயகன்,ஒரு மஹா கஞ்சன்.அவன் ஒரு தந்திரகார புத்திசாலியால்ஏமாற்றப்பட்டு அவமானத்துக்குஆளாகிறான்.எப்படி?கதையை கேளுங்கள்....
-
234
இரு நூற்றி முப்பத்தி இரண்டாவது கதை-ஒரு சோளகொல்லை பொம்மையின கதை (Story of A Scarecrow)
Nathaniel Hawthorne என்ற அமெரிக்க ஆசிரியர் எழுதிய Feathertop கதையை தழுவி சொல்லப்பட்டது-இந்த கதை.ஒரு சூனியக்காரி (Witch) உதவியால்,ஒரு Scarecrow உயிர் பெற்று, அழகான வாலிபனாக மாறுகிறது.தான் யார்,என்று தெரிந்தவுடன்,அவன் தன்உயிரை விட்டூ மறுபடி பொம்மையாக ஆகிறான்.அப்புறம் என்ன ஆச்சு?கதையை கேளுங்கள்.....
-
233
இரு நூற்றி முப்பத்தி ஒன்றாவது கதை: வெள்ளி பூ கூடை (The Silver Flower Basket)
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.கதா சரித் சாகரம் என்ற கதை பொக்கிஷத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை.ஒரு நாட்டு இளவரசி ,தன்னுடையவரும் கால கணவன், தன் வேலைக்காரனேஎன்று ஒரு ஜோசியரிடமிருந்து தெரிந்து கொள்கிறாள்.அது நடக்காது , நடக்க கூடாது என்று நினக்கிறாள்.அவளால் அவள் விதியை மாற்ற முடிந்ததா?கதையை கேளுங்கள்....
-
232
இரு நூற்றி முப்பதாவது கதை :சூரிய கிரகணத்தை பற்றிய கதை(A Tale of Solar Eclipse)
இது ஒரு இந்திய நாட்டின் மேகாலாயா மாநிலத்தில் சொல்லப்படும் கதை.இந்த மாநிலத்தில், உலகத்தில் உள்ளமற்ற கலசாரங்கள் போல, சூரிய கிரகணத்தை பற்றி சில நம்பிக்கைகள் இருக்கின்றன.அவைகளை கதைகளாக சொல்லி வருகிறார்கள்.அது என்ன கதை?கதையை கேளுங்கள்..
-
231
இருநூற்றி இருபத்தி ஒன்பதாவது கதை: வள்ளல் குமணனின் கதை (Story of Philanthropist Kumanan)
இது ஒரு தமிழ் நாட்டுக் கதை.சங்க காலத்து கதை. புலவர்களால் "தலை கொடுத்தான் "குமணன் என்று பாடப்பட்ட ஒரு சிறந்த கொடையாளி.யார் இந்த குமணனன்?அவர் என்ன செயதார்?கதையை கேளுங்கள்...
-
230
இரு நூற்றி இருபத்தி எட்டாவது கதை: காதரீனும் அவள் விதியும் (Catherine and her Destiny)
இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை.காதரீன்,ஒரு பணக்கார பிரபுவின் மகள்.ஒரு நாள்,அவளுடைய Destiny-விதி-அவள் முன் தோன்றி"காதரீன்,உனக்கு,Happy Youth-மகிழ்ச்சியான இளமை காலம்-Happy Old age-மகிழ்ச்சியான முதுமை காலம் -உனக்கு இதில் எது வேண்டும் என்று கேட்டாள்?காதரீன் யோசித்து," என்னுடைய வயதானகாலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றாள்.அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அவள் போய் விட்டாள்.அப்புறம் என்ன ஆச்சு?கதையை கேளுங்கள்....
-
229
இரு நூற்றி இருபத்தி ஏழாவது கதை: பாப்பா கேட்டோ (Papa Gatto)
இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை.ஒரு புத்திசாலி பூனை -பாப்பா கேட்டோ-நாட்டு இளவரசரூக்கு ஆலோசகரராக இருக்கிறார்.அவருடைய 8 பூனை குட்டிகளை பார்த்துகொள்ள ஒரு அழகான பெண்ணை தாதியாக அமர்த்துகிறார்.அந்த பெண்,அவருடைய வீட்டை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை.பூனைகளுக்கும் நல்ல உணவு கொடுக்காமல் இருந்தாள்அப்புறம் என்ன ஆயிற்று?கதையை கேளுங்கள்.....
-
228
இரு நூற்றி இருபத்தி ஆறாவது கதை:சூரியனை நோக்கி பயணம் (Journey to Sun)
இது ஒரு இந்திய நாட்டின் மாநிலமான மணிப்பூரில்சொல்லப்படும் நாடோடி கதை.கதையின் கதானாயகனுக்கு சொந்தமான் ஒரு அபூர்வ பச்சிலையை சூரியன் திருடி தன் இடத்திற்கு கொண்டு போகிறான்.கதானாயகன் அதை மீட்டி கொண்டு வரஒரு பயணத்தை தொடர்கிறான்..அதில் அவன் வெற்றி அடைந்தானா?கதையை கேளுங்கள்.....
-
227
இரு நூற்றி இருபத்தி ஐந்தாவது கதை: காஷ்மீரை வெள்ளங்கலிருந்து காப்பாற்றிய வாலிபனின் கதை(Story of an Young man who saved Kashmir from floods)
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு முன்னால். காஷ்மீரில்,அனேக கிராமங்கள், வெள்ளங்களினால்,அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தன.அந்த ஊர் அரசரால், வெள்ளஅபாயத்தை தடுக்க முடியவில்லை.ஒரு ஏழை புத்திசாலி வாலிபன்,தன்னால் வெள்ளங்கள் ஏற்படாமல் செய்ய முடியும் என்று முன் வருகிறான்.யார் இந்த வாலிபன்?அவன் பின்னணி கதை என்ன?அவன் வெள்ளத்தை தடுத்தானா?கதையை கேளுங்கள்.....
-
226
இரு நூற்றி இருபத்தி நாலாவது கதை:கடவுள் பக்தன் ஜோப் (God's Devotee Job)
இது ஒரு பைபிள் கதை. கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த ,ஜோப் என்ற பக்தனின் கதை.ஒரு சமயம்,கடவுளுக்கும் சாத்தனுக்கும் ஒரு போட்டி. கடவுள் சொன்னார்"ஜோப்பை விட ஒரு சிறந்த பக்தன் இல்லை" என்றுசாத்தனுக்கு, ஜோப்பின் மன உறுதியை சோதிக்க சம்மதம் தெரிவிக்கிறார்.யார் ஜயித்தார்கள்?கடவுளா? சாத்தானா?கதையை கேளுங்கள்....
-
225
இரு நூற்றி இருபத்தி மூன்றாவது கதை:உண்மையான நண்பன் (A True Friend)
இது ஒரு மேற்கு இந்திய தீவுகளில் சொல்லப்படும் ஒரு நாடோடி கதை.உண்மையான நட்புக்கு இந்த கதைஒரு உதாரணம்.தன் உயிரை பற்றி கவலைப்படாமல்.தன் நண்பனை பல ஆபத்துகளிலிருந்துகாப்பாற்றும் ஒரு நண்பனின் கதை.அது என்ன கதை?கதையை கேளுங்கள்.....
-
224
இரு நூற்றி இருபத்தி இரண்டாவது கதை:நகுஷ சக்ரவர்த்தியின் சாப விமோசனம்-Redemption of Emperor Nakusha
இது 221ம் கதையின் தொடர்ச்சி.ஆணவத்தினால்,பெரியோர்களைஅவமதித்த நகுஷ சக்ரவர்த்திக்குஅகஸ்திய முனிவர்,பாம்பாக மாறுவாய்என்று சாபம் இடுகிறார்.அவருக்கு சாப விமோனம், அவர் யுதிஷ்டர்ரை சந்திக்கும் போது கிடைக்கும் என்றும் சொல்கிறார்.நகுஷ சக்ரவர்த்தி எப்போதுதர்ம புத்திரரை சந்திக்கிறார்? சாப விமோசனம்கிடைத்ததா?கதையை கேளுங்கள்...
-
223
இரு நூற்றி இருபத்தி ஒன்றாவது கதை:நகுஷ சக்ரவர்த்தியின் எழுச்சியும் வீழ்ச்சியும்-The Rise and Fall of Emperor Nakusha
இது ஒரு இந்திய புராண கதை.ஆணவத்தினால் அழிந்தவர்கள் எத்தனையோ பேர்கள்.அப்படி அழிந்தவர்களில் ஒருவர் தான்,நகுஷ சக்ரவர்த்தி-மானிடரான அவருக்கு இந்திர பதவி கிடைக்கிறது.ஆணவத்தில் அந்த பதவியை இழந்து வீழ்கிறார்.யார் இந்த சக்ரவர்த்தி?அவருக்கு எப்படி இந்திர பதவி கிடைத்தது?ஏன் அதை இழந்தார்?விடைகளுக்கு கதையை கேளுங்கள்.....
-
222
இரு நூற்றி இருபதாவது கதை: இரண்டு எரி மலைகளின் கதை(a Tale of Two Volcanoes
இது ஒரு மெக்சிகோ நாட்டுக் கதைஅஸ்டக் நாகரிகம்(civilization) iபரவலாக இருந்த காலத்து கதை.மெக்சிகோ நாட்டில் 2 எரி மலைகள்இருக்கின்றன.ஒன்றின் பெயர்-போபோகா தெபெடில்-Smokey Mountain-active2 வது-இஸ்தாசேவாடில்-sleeping woman-dormantஇந்த 2 எரி மலைகளை பற்றி ஒரு அழகான,சுவையானசோகமான காதல் கதை இருக்கிறது.அது என்ன?கதையை கேளுன்கள்...
-
221
இரு நூற்றி பத்தொன்பதாவது கதை:இரண்டு கூனர்களின் கதை (Story of Two Hunchbacks)
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை.இரண்டு பிறவி கூனர்கள்,தனித்தனியாக காட்டில் வன தேவதைகளை சந்திக்கிறார்கள்.ஒருவருக்கு கூனல் குணமாகிறது.மற்றவருக்கு கூனல் அதிகமாகிறது.எப்படி? எதனால்?கதையை கேளுங்கள்...
-
220
இரு நூற்றி பதினெட்டாவது கதை: ஒரு மகளின் பழி வாங்கல்(Revenge of a Daughter)
நார்ஸ் புராணம் தொடர்கிறது...இந்த கதை,217ம் கதையின் தொடர்ச்சி.கொடிய அரக்கன்,தியாஸ் தீயில்விழுந்து மரணம் அடைந்தான்என்பதை தெரிந்து கொண்டோம்.அவன் மரணத்தை மகிழ்ச்சியோடுகொணடாடி கொண்டிருந்த ,நார்ஸ் கடவுள்களுக்கு ஒரு அதிர்ச்சி.தியாசின் மகள்,ஸ்காடி,பழி வாங்க,ஆஸ்கார்டுக்கு வந்து கொண்டிருக்கிறாள்என்ற செயதி-அதன் விளைவு என்ன?கதையை கேளுங்கள்....
-
219
இரு நூற்றி பதினேழாவது கதை:ஈடுன் தேவியும் தங்க ஆப்பிள்களும்(Goddess Idun and the Golden Apples)
இது ஒரு நார்ஸ் புராணக் கதை. ஸ்காண்டிநேவியா நாடுகள் என்று அழைக்கப்படும்- நார்வே, ஸ்வீடன் என்ற நாடுகளுக்கு ஒரு கலாசாரம் உண்டு. அது தான்,நார்ஸ் புராணம். அதிலிருந்து எடுக்கப்பட்ட கதை தான் இது. நார்ஸ் கடவுள்களின் தலைவர்- ஓடின்,குறும்பு கடவுள்,லோகி, மற்றும் தேவி ஐடுன், என்றும் இளமை தரும் ஆப்பிள்களுக்கு சொந்தகார கடவுள்- இவர்களைப் பற்றிய கதை. கதையை கேளுங்கள்..
-
218
இரு நூற்றி பதினாறாவது கதை:ராமாயண கதையின் முற்பகுதி (A Prequel to Ramayana)
இது ஆனந்த ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை. ஶ்ரீ ராமகிருஷ்ண்மடத்தை சேர்ந்த ஶ்ரீ கமலாத்மானந்தர் தொகுத்த கதைகளில் ஒன்று. தனக்கு விதிக்கப்பட்ட விதியை ராவணன்,தன் பலத்தினால்,மாற்ற முயற்ச்சிகிறான், அவன் முயற்சி வெற்றி பெற்றதா? கதையை கேளுங்கள்....
-
217
இரு நூற்றி பதினைந்தாவது கதை: புனித கிரிஸ்டோபரின் புராண கதை:(The legend of Saint Christopher)
ஐரோப்பா நாடுகளில் உள்ள சர்ச்சுகளில். புனிதர் கிரிஸ்டோபருடைய சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில்,அவர், குழந்தை ஏசுவானவரை தன் தோள்களில் சுமந்து கொண்டிருப்பதாக அமைத்திருப்பார்கள். இந்த புனிதர் யார்? இவர் கதை என்ன? அவர் ஏன், குழந்தை ஏசுவை சுமக்க வேண்டும்? விடைகளுக்கு, கதையை கேளுங்கள்.....
-
216
இரு நூற்றி பதினாலாவது கதை: சத்சங்கத்தால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Sathsangh)
இது ஒரு இந்திய நாட்டு புராண கதை. சத் சங்கம்-அறிவாளிகள்,மஹான்கள், நல்லவர்கள் கூட்டம். அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால் நன்மைகள் அடையலாம். என்ன நன்மைகள்? இதே கேள்வியை ஒரு சமயம்,நாரத ரிஷி ஶ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறார். ஶ்ரீ கிருஷ்ணர் என்ன பதில் சொன்னார்? கதையை கேளுங்கள்...
-
215
இரு நூற்றி பதி மூன்றாவது கதை:புலியை விரட்டிய புத்திசாலி பெண்மணி (A wise woman who chased away a tiger)
இது ஒரு பஞ்சாப் மானிலத்து கதை. ஒரு புலி ,ஒரு விவசாயின் காளை மாடுகளை சாப்பிட நினைக்கிறது. அவனுடைய மனைவி தன் புத்திசாலித்தனத்தினால், ஒரு ஆயுதம் இல்லாமல், அந்த புலியை விரட்டி, தன் பொருள்களை காப்பாற்றி கொள்கிறாள். எப்படி? கதையை கேளுங்கள்.....
-
214
இரு நூற்றி பன்னிரண்டாவது கதை:மாடு மேய்ப்பவன் மற்றும் நெசவாளி பெண்ணின் கதை (Story of the Cowherd and the Wever Girl
இது ஒரு சீன நாட்டு நாடோடி கதை. சீன மக்கள்,ஒவ்வோரு வருடமும், Lunar கா
-
213
இரு நூற்றி பதினொன்றாவது கதை:பிப்லாதன் செயத தவம் (Penance Performed by Piplathan)
இது ஒரு புராண கதை. பிரம்ம வைவர்த்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பிப்லாதன் யார்? என்ன தவம் செயதான்? எதற்காக செயதான்? யாரை நோக்கி செயதான்? என்ன பலன் கிடைத்தது? விடைகள்.....கதையில்.. கதையை கேளுங்கள்....
-
212
இரு நூற்றி பத்தாவது கதை: ஒரு புத்திசாலி அடிமை (An Intelligent Slave)
இந்த கதை, யூதர்களின்,புனித புஸ்தகமான, டால்மடிலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு கிரேக்க பிரபு, இஸரேல் நாட்டில், ஒரு யூத ஏழையை ,அடிமையாக விலைக்கு வாங்குகிறார். அடிமைகளுக்கு,விடுதலை கிடைப்பது ரொம்ப கஷ்டம். இந்த அடிமை,தன் புத்திசாலித்தனத்தால், விடுதலை பெறுகிறான். எப்படி? கதையை கேளுங்கள்...
-
211
இரு நூற்றி ஒன்பதாவது கதை: உத்தங்கர் ரிஷியின் கதை (Story of Sage Uttankar)
இந்த கதை, மஹாபாரததில் உள்ளது. குரு பக்திக்கு உதாரண புருஷராக இருக்கும், உத்தங்கர் என்ற ரிஷியை பற்றிய கதை. குருவுக்காக தன் வாலிப பருவம் முழுவதையும் செலவழித்த இவருடைய கதையை தெரிந்து கொள்ளலாமா?.....
-
210
இரு நூற்றி எட்டாவது கதை: கச்சன் - தேவயானி கதை (Story of Kachchan and Devayani)
இது மஹாபாரத்தில் உள்ள ஒரு கதை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போது சண்டை. கொல்லப்பட்ட அசுரர்கள்,மறுபடி உயிர் பெற்று,தேவர்களை சீண்டுவார்கள். எப்படி? அசுரர்கள் குரு,சுக்கிராச்சாரியாருக்கு சஞிவீனி மந்திரம் தெரியும். அதை வைத்து செத்தவருக்கு உயிர் கொடுக்க முடியும். தேவர்களுக்கு அந்த மந்திரம் தெரியாது. அதை அசுர குருவிடமிருந்து கற்று வர தேவ குருவின். மகன், கச்சனை அனுப்புகிறார்கள். கச்சனும் சுக்கிராச்சார்யரிடம் மாணவனாக சேர்கிறான். கச்சனுக்கு அந்த மந்திரம் கிடைத்ததா? தேவர்கள் பயன் அடைந்தார்களா? தேவயானி யார்? கச்சன்-தேவயானி உறவு என்ன? கதையை கேளுங்கள்.....
-
209
இரு நூற்றி ஏழாவது கதை:நான்கு பொம்மலாட்ட பொம்மைகள் (Four Puppets)
இது ஒரு பர்மா (மியன்மார்) நாட்டுகதை. ஒரு பொம்மலாட்ட பொம்மை தயாரிப்பாளர், தன் மகன் தன்னுடன் இருக்க ஆசைபடுகிறார். மகனுக்கு விருப்பமில்லை.வெளி உலகத்தில் தன் அதிர்ஷ்டத்தை தேடி செல்ல விரும்புகிறான். அப்பா ,அதற்கு சம்மதித்து,அவனிடம்,4 Puppets களை கொடுக்கிறார். ஒவ்வொரு பொம்மையும், ஒரு சிறப்பு குணம் உள்ளதாக இருந்தது. மகன் கிளம்புகிறான். அவன் பஅணம் எப்படி இருந்தது? கதையை கேளுங்கள்.....
-
208
இரு நூற்றி ஆறாவது கதை: விலை கொடுத்து வாங்கின 4 ஆலோசனைகள்(Four Purchased Pieces of Advice)
இது ஒரு துருக்கி நாட்டுக் கதை. துருக்கி நாட்டு பாதுஷா,தன்னுடைய வேலைகாரனுக்கு,வெகுமதியாக 4 தங்க நாணயங்களை கொடுக்கிறார். அப்போது அவர் ,அவனிடம் ஒரு பேரம் பேசுகிறார். ஒவ்வொரு நாணயத்திற்கும், ஒரு Advice ஆலோசனை கொடுப்பதாக சொல்கிறார். வேலைக்காரனும் 4 நாணயங்களை கொடுத்து 4 ஆலோசனைகளை பெற்று கொண்டு விடை பெறுகிறான். அப்புறம் என்ன ஆச்சு? அவனுக்கு ஏதாவது பலன் கிடைத்ததா? கதையை கேளுங்கள்.....
-
207
இரு நூற்றி ஐந்தாவது கதை: ஒரு பிராமண ஜோசியரின் அதிர்ஷ்டம் (A Brahmin Astrologer's Luck)
இது ஒரு இந்திய நாட்டு கதை. பெங்கால் மாநிலத்தில் சொல்லப்படும் கதை. ஜோசியத்தில் திறமையான ஒரு பிராமணர் ரொம்பவே ஏழையாக இருந்தார். எவ்வளவோ முயற்சி பண்ணியும். அதிர்ஷ்டம் அவர் பக்கமே திரும்பியதில்லை. அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார். என் ஜாதகப்படி இன்னும் ஆறு மாதம் நான் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று. ஆனால் அவர் மனைவி அந்த ஊரு ராஜாவை போய் பார்க்கும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தாள் அவள் தொந்தரவு பொறுக்க முடியாமல் அந்த பிராமணர் அந்த ஊர் ராஜாவை போய் பார்த்தார். ஒரு தரம் அல்ல... மூன்று தரம்,. அதனால் அவர் ஏதாவது பயன் அடைந்தாரா? கதையைக் கேளுங்க.
-
206
இரு நூற்றி நாலாவது கதை: கஞ்சன் ஜாக்கும் ஹாலோவின் விளக்கும் (Stingy Jack & Jack 'O Lantern)
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை. ஒவ்வொரு ஆண்டு ,அக்டோபர் 31ம் தேதி அன்று ஐரோப்பா,அமெரிக்கா நடுகளில்,ஹாலோவியன் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அன்று, குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்கள் கொடுப்பார்கள். இரவில்,வீட்டு வாசல்களில்,பூசணிக்காயை குடைந்து, அதற்குள், விளக்குகளை வைப்பார்கள். பூசணிக்காய்க்கு வெளியே கோரமான உருவங்களை வரைந்திருப்பார்கள். எதற்காகாக? வெளி உலக கெட்ட ஆவிகளை,குறிப்பாக,கஞ்சன் ஜாக்கின் ஆவியை விரட்ட. யார் இந்த கஞ்சன் ஜாக்? who is this Stingy Jack? அவன் கதை என்ன? கதையை கேளுன்கள்......
-
205
இரு நூற்றி மூன்றாவது கதை: இரண்டு கல்தச்சர்கள் (Two Stonecutters)
இது ஒரு ஜப்பானிய நாட்டுக்கதை. இரண்டு சகோதரர்கள்-இரண்டு பேரும் கல்தச்சர்கள். இளையவன்,எளிமையான வாழ்க்கையை விரும்புவன். மூத்தவனுக்கு ,பணக்காரனாக ஆக ஆசை. ஒரு சமயம்,வன தேவதை,அவர்களுக்கு 7 வரங்களை அளிக்கிறாள்.அந்த வரங்களை சகோதரர்கள்,எப்படி உபயோகித்தார்கள்,என்பது தான் கதை.. கதையை கேளுங்கள்...
-
204
இரு நூற்றி இரண்டாவது கதை: புத்திசாலி மந்திரி (The Clever Minister)
இது ஒரு ஐரோப்பா நாட்டுக்கதை. ஒரு பலம் பொருந்திய அரசர்,போர் புரியாமல்,மற்ற நாடுகளை அபகரிக்க ஒரு திட்டம் தீட்டுகிறார். எந்த நாட்டை,அவர் அபகரிக்க ஆசை படுகிறாரோ,அந்த நாட்டு அரசருக்குஒரு புதிர் அனுப்புவார். புதிருக்கு சரியான விடை அளிக்காத நாட்டை தன் நாட்டுடன் சேர்த்து கொள்வார். அநேகமாக எல்லா நாடுகளும் அவரிடம் வந்து விட்டன- ஒரே ஒரு குட்டி நாட்டை தவிர- அந்த நாட்டு அரசருக்கும்,பெரிய அரசர், ஒரு புதிர் அனுப்புகிறார். குட்டி ராஜா, சவாலில் வெற்றி பெற்றாரா? கதையை கேளுங்கள்..
-
203
இரு நூற்றி ஒன்றாவது கதை: காலி பூந்தொட்டி: The Empty Flowerpot
இது ஒரு சீன நாட்டுக் கதை. ஒரு சிறு பையனைப் பற்றிய கதை. இந்த பையன்,நேர்மைக்கு உதாரணம். எந்த சூழ் நிலையிலும்,அவன் தப்பான செயல்கள் செய்யாமல், நேர்மையாக இருந்தான். அதற்கு அவனுக்கு கிடைத்த வெகுமதி என்ன? உங்களால்,கற்பனை பண்ண முடியாத பரிசு.. அது என்ன? கதையை கேளுங்கள்...
-
202
இரு நூறாவது கதை: தோல் பை (The Leather Bag)
இது ஒரு கொரியா நாட்டுக்கதை. ஒரு கொரியா நாட்டு பணக்காரரின் ஒரே மகன்- ஜின்.ஒவ்வொரு நாள் இரவும்,அவன் அப்பாவின் வேலைக்காரன் - கிம்- ஒரு கதை சொல்வான். அந்த கதைகளை ஜின் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான். அவன் சுயநலம்,அவனுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்தது. கிம் அவனை காப்பாற்றுகிறான். ஜின்னுக்கு அப்படி என்ன ஆபத்து? கிம் எப்படி அவனை காப்பாற்றினான்? கதையை கேளுன்கள்.......
-
201
நூற்றி தொண்ணூத்தி ஒன்பதாவது கதை:அலை (The Wave)
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. ஜப்பான் தேசத்து கிராமம் ஒன்றில் ஒரு கோவில் இருக்காம். அதில் வழிபடும் தேவன், ஹோகே ஹாமா கூச்சி,என்ற ஒரு வயதான புத்திசாலியான,கருணை உள்ளம் படைத்த மனிதர். அவரை மரியாதயாக ஓஜிசான் (Grandfather) தாத்தா என்று தான் அழைப்பார்கள். கடவுளாக கும்பிட,அப்படி என்ந செயதார்? கதையை கேளுங்கள்....
-
200
நூற்றி தொண்ணூத்தி எட்டாவது கதை:சுண்டெலி சூத்திரம் (The Mouse Sutrra)
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. மந்திரங்கள் சொல்லி வழிபடுவது எல்லா மதங்களிலும் உண்டு. அர்த்தம் தெரிந்தோ தெரியாமாலோ முழு நம்பிக்கையோடு சொன்னால், அதற்கு பலன் கிடைக்கும்' என்று ஒரு நம்பிக்கை. இந்த கதையில் ஒரு பாட்டி , ஒன்றும் தெரியாத ஒரு புத்த சன்னியாசியிடமிருந்து அர்த்தமில்லாத சூத்திரத்தை (மந்திரத்தை) கற்று கொண்டு ,நம்மிக்கையோடு ஜபிக்கிறாள்.' அவளுக்கு பலன் கிடைத்ததா? கதையை கேளுங்கள்....
-
199
நூற்றி தொண்ணூத்தி ஏழாவது கதை: ஒரு தங்க கட்டியும் 2 நண்பர்களும் (A Golden Nugget and Two Friends)
இது ஒரு சீன நாட்டுக் கதை. டாமன்-பிதியாஸ் மாதிரி சீன தேசத்தி ல்,2 நண்பர்கள்- கீ வூ-பா ஷூ -இருந்தார்கள். அவர்கள்,இணைபிரியாமல். ஒரு போதும், சண்டை போடாமலும் வாக்குவாதம் செய்யாமலும் இருந்தார்கள். அவர்கள்,வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது கேட்க போகிறீர்கள். கதையை கேளுங்கள்.....
-
198
நூற்றி தொண்ணூத்தி ஆறாவது கதை:ட்ரவுசர் முகமதும் சுல்தானின் மகளும் ( (Trouser Mohamed and Sultan's Daughter))
இது ஒரு அரேபிய நாட்டுக் கதை. முகமது ஒரு ஏழை.அழகானவன்.புத்திசாலி. அவன் அப்பா,அவனுக்கு விட்டு போன சொத்து ஒரு தொள தொள ட் ரொவுசர்.பேண்ட்- அதை ஒரு சாக்காக மாற்றி போர்டர் வேலை செய்கிறான். ஒரு நாள், சுல்தானின் மகளை பார்க்கிறான்.அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. சுல்தான் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேட ஒரு புதிர் போட்டி நடத்துகிறார். முகமதும் அதில் கலந்து கொள்கிறான் .அவன் வெற்றி பெற்றானா? கதையை கேளுங்கள்....
-
197
நூற்றி தொண்ணூத்தி ஐந்தாவது கதை:சபாத் சிங்கம்(The Sabbath Lion)
இது அல்ஜீரியா நாட்டில் வசித்த ஒரு யூத குடும்பத்தை பற்றிய கதை. சபாத் தினம்(Sabbath day) யூதர்களுக்கு ஒரு முக்கியமான நாள். அது ஒவ்வோரு வாரமும், வெள்ளி கிழமை மாலையிலிருந்து சனி கிழமை மாலை வரை கொண்டாடப்படுகிறது. அன்று யூதர்க ஒய்வொடுத்து கொண்டு , கடவுள் பிரார்த்தனைகளில் நேரத்தை செலவழிப்பார்கள். நம்பிக்கையோடு செயபவர்களுக்கு கடவுள் அருள் கிடைக்கும் என்று நம்பிக்கை. அப்படி நம்பின,,ஒரு 10 வயது பையனை பற்றிய கதை இது. கதையை கேளுங்கள்....
-
196
நூற்றி தொண்ணூத்தி நான்காவது கதை:ஏழு சீன சகோதரர்கள்(The Seven Chinese Brothers)
இது ஒரு சீன நாட்டுக் கதை. 7 சீன சகோதரர்கள் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் 7 பேரும் ஒரே மாதிரி உருவமுள்ளவர்கள். ஒவ்வொருவருக்கும் தனிதனியாக ஒரு அபூர்வ சக்தி Super Power உண்டு. அவர்களுக்கு சீன சக்ரவர்த்தியிடமிருந்து ஆபத்து வந்த போது, எல்லோரும் தங்கள் சூப்பர் பவரை உபயோகித்து , தங்களை காப்பாற்றி கொள்கிறார்கள்.. எப்படி? கதையை கேளுங்கள்....
-
195
நூற்றி தொண்ணூத்தி மூன்றாவது கதை(ராணியும் குடியானவனின் மனைவியும்(The Queen and the Farmer's Wife)
இது இந்தியாவின் கர்னாடக மாகாணத்தில் கன்னட மொழியில்சொல்லப்பட்ட நாடோடி கதை. ஒரு நாட்டின் ராணி சொல்கிறாள்" ஒரு வீட்டின் ஏழ்மை நிலைக்கு கடவுளை பழி சொல்வது சரியாகாது. வீட்டு தலைவி திறமையோடும் அன்போடும் செயல்பட்டால், லஷ்மி தேவி வீடு தேடி வருவாள்." என்று. அதை நிரூபிக்க ,ராஜாவிடம் ஒரு பந்தயம் வைக்கிறாள். என்ன பந்தயம்? அவள் ஜயித்தாளா? கதையை கேளுங்கள்...
-
194
நூற்றி தொண்ணூத்தி இரண்டாவது கதை:தந்திரகார மனிதன் பெட்ரோ (The Cunning Man-Pedro)
இது ஒரு மாலாவி நாட்டுக்கதை. இது ஒரு Trickster Tale. பெட்ரோ ஒரு தந்திரகாரன். பஞ்ச காலத்தில், தனக்கு வேண்டிய பொருள்களை, தன் புத்திசாலித்தனத்தை உபயோகித்து,மற்றவர்களை ஏமாற்றி அடைகிறான். எப்படி? கதையை கேளுங்கள்...
-
193
நூற்றி தொண்ணூத்தி ஒன்றாவது கதை:பறவை அலகுகளினால் ஆன அரண்மனை(A Palace of Bird Beaks)
இது ஒரு யூத நாட்டுக் கதை. சாலமன் அரசர்,ஒரு அறிவு ஜீவி என்று பாராட்ட படுபவர். அவர் ஒரு சமயம், ஒரு முட்டாளத்தனமான காரியத்தை செய்ய முடிவு எடுக்கிறார். அதை அவர் முடித்திருந்தால்,அவருக்கு கெட்ட பெயர் வந்திருக்கும். .கடைசி நிமிடத்தில் அதை அவர் கைவிடுகிறார். ஏன்,எதற்காக கைவிடுகிறார்.? கதையை கேளுங்கள்....
-
192
நூற்றி தொண்ணூறாவது கதை:ஶ்ரீ ராமர் சொன்ன கதை (A Story told by Sri Rama)
இது ஒரு ராமாயண கதை. ஶ்ரீ ராமர், எப்போ, இந்த கதையை சொன்னார்? யாரிடம் சொன்னார்? எதற்காக சொன்னார்? எல்லாவற்றிக்கும் விடை தெரிய கதையை கேளுங்கள்.....
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups.This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth.Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:[email protected]
HOSTED BY
Raja Nagarajan
Loading similar podcasts...