-
1
குழந்தை வளர்ப்பு
தன் பசிக்கு வேறொருவரை உண்ணச் செய்தால் ஆகுமா கதை. ஆனால் நம்மில் பெரும்பாலோர் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? . தான் நினைத்ததை, தான் கனவும் கற்பனையும் ஊற்றி பிரமாண்டமென கையில் கொண்டிருப்பதை, முக்கியமாக தன்னால் எட்டவியலாத ஒன்றை தன் பிள்ளைகளின் வழி நிறைவேற்றிக்கொள்ளப் பிரியப்படுகிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் சுதந்திரமாகச் சிந்திக்கும் திறனும் ஆசைகளும் உண்டு. புல் முதல் பூமியில் தரித்த அத்தனை சீவன்களுக்கும் தனித்தனியான வாழ்வு என்பதுதான் இயற்கையின் நியதி. குழந்தைக்கு தேவைப்படுகிறதா? சீரணிக்குமா? என்பதைப் பற்றியெல்லாம் யோசியாமல் திணிக்கும் உணவினை தாக்குப்பிடிக்க இயலாத வயிறு வாந்தியில் கொண்டுபோய்தான் சேர்க்கும். உணவு வீண் , உடல் நலக்கேடு, கால விரயம் என்றெல்லாம் உண்டாகும் அதன் விளைவுகளுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அக்குழந்தைகளின் நிலை வலைக்குள் சிக்கிக்கொண்ட மீன்யென மாட்டிக்கொண்டு விழித்து, கண்ணீர் வடிக்கையில் துயரப்பட்டு என்ன பலன். அதற்காக, குழந்தைகளின் எதிர்காலத்தில் பெற்றோர்கள் அக்கறை கொள்ளக்கூடாதுயென்பது அல்ல பொருள். அவர்களிடம் வாய்ப்புகளைத் தந்துவிட்டு தேர்ந்தெடுப்புக்கான கால அவகாசத்தை கொடுக்கக்கூடிய பெற்றோர்களாக இருத்தலே சாலச் சிறப்பு. பின்னொருநாள் தன் முதலிடத்து மேடையில்நின்று கொண்டு பெருமையோடு உங்களைச் சுட்டி கண்ணீர் வடிக்குமே அந்தக் கணம் உண்டாக்கித் தரும் அனுபவம் பேரின்பத்தின் பத்துமடங்குக்குரியது. " ஈன்ற பொழுதின் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் அல்லது தகப்பனாயிருத்தல் பொதுவல்ல அது தனித்தவம்.
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...