SBS Tamil - SBS தமிழ்

PODCAST · news

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  1. 1000

    நிதிநிலை அறிக்கை 2026: முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான புதிய சலுகை

    2026 பெடரல் நிதிநிலை அறிக்கையில், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய மாற்றம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  2. 999

    Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? அதனை எவ்வாறு திட்டமிடுவது?

    Palliative care விழிப்புணர்வு வாரம் இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? இந்த சேவையை யாரெல்லாம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்று Palliative care குறித்து பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் முதியோர் நல வைத்தியர் Dr பூரணி முருகானந்தம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  3. 998

    செய்தியின் பின்னணி: 2026 நிதிநிலை அறிக்கை வீட்டுவசதியை முன்னேற்றுமா?

    கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில், கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers தனது ஐந்தாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். நாட்டின் வீட்டுவசதி நெருக்கடியை எதிர்கொள்ள இரண்டு பெரிய வரி சீர்திருத்தங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன. "Negative Gearing" எனும் எதிர்மறை வரிச்சலுகை, மற்றும் மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) இரண்டிலும் கொண்டுவரப்படவிருக்கும் மாற்றங்கள், கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆஸ்திரேலிய சொத்து சந்தையை வடிவமைத்த தனிச்சலுகைகளில் மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  4. 997

    மர்மங்கள்- ஒரு தொடர்கதை: The Great Train Robbery

    வாழ்க்கையின் நிகழ்வுகள், குற்றச்செயல்கள்- அது தொடர்பான வழக்குகள், காணாமல் போன நபர்கள் மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள், விநோதமான சம்பவங்கள், விளக்கமில்லாத -யார் செய்தார் - எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை அறியப்படாத மரணங்கள், யூகங்கள், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட புதிர்கள்- என்று, தீர்வு அல்லது விளக்கம் இல்லாமல் உலகில் இன்றும் பல மர்மங்கள் தொடர்கின்றன. அப்படியான unresolved mysteries - விடை காணப்படாத அல்லது தீர்வு காணமுடியாத மர்மங்களை - இந்த தொடரும் கதைகள் சிலவற்றை நேயர்களுக்கு கொண்டுவருவதே ‘மர்மங்கள் ஒரு தொடர்கதை’ என்ற இந்த தொடர். மர்மங்கள்- ஒரு தொடர்கதை - Unresolved mysteries – தொடரில் 1963 ஆம் ஆண்டு London Royal Mail Trainயில் நடந்த கொள்ளை சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  5. 996

    அஸ்பாரகஸை ஏன் சாப்பிட வேண்டும்?

    அஸ்பாரகஸைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அதை எவ்வாறு உண்ணலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் பிரபல சமையல்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  6. 995

    இன்றைய செய்திகள்: 14 மே 2026 - வியாழக்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 14/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  7. 994

    நிதிநிலை அறிக்கை 2026: அகதிகள் தொடர்பில் என்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?

    2026–27 பெடரல் நிதிநிலை அறிக்கையில் அகதிகள் மற்றும் புகலிடம்கோருவோர் தொடர்பில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

  8. 993

    State Nomination ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேறுவது எப்படி?

    ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிமுறைகளில் ஒன்றான State Nomination குறித்து சிட்னியில் குடிவரவு முகவராகக் கடையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

  9. 992

    இலங்கை: மலையக மக்களுக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு கோரி போராட்டம்

    அண்மைக்காலமாக மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவருகிறது. இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த சூழல் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  10. 991

    தமிழகத்தில் புதிய அரசின் செயல்பாடு & அதிமுகவில் பிளவு

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  11. 990

    இன்றைய செய்திகள்: 13 மே 2026, புதன்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 13/05/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  12. 989

    நாட்டின் நிதி நிலை அறிக்கை “கடினமான சீர்திருத்தங்களின் பாதை” – லேபர் அரசு

    ஆஸ்திரேலியாவின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் - வரவு செலவுத் திட்டத்தை நாட்டின் கருவூலக காப்பாளர் Treasurer Jim Chalmers செவ்வாய்க்கிழமை (12 மே) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். செய்தி விவரணத்தின் ஆங்கில மூலம் SBS இன் Deborah Groarke. தமிழில் றைசெல்.

  13. 988

    850 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Amazon ஆஸ்திரேலியா அறிவிப்பு!

    Amazon ஆஸ்திரேலியா நிறுவனம் 850 seasonal workers- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  14. 987

    போலி பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

    போலியான பாதுகாப்பு (Protection) விசா கோரிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  15. 986

    இன்றைய செய்திகள்: 12 மே 2026 - செவ்வாய்க்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 12/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  16. 985

    செய்தியின் பின்னணி : உணவு பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் - காரணம் என்ன?

    அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மத்திய கிழக்கு அரசியல் குழப்பங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு எரிபொருள் விலைகளில் மட்டுமல்லாமல், உணவு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  17. 984

    ஆபத்தான Golden Staph பாக்டீரியாவை கண்டறிய புதிய பரிசோதனை முறை கண்டுபிடிப்பு!

    RMIT பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், Golden staph என்ற ஆபத்தான பாக்டீரியா கிருமியை கண்டறிய புதிய நிறம் மாறும் சோதனை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு குறித்து விரிவாக விளக்குகிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ராஜேஷ் ராமநாதன். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  18. 983

    இன்றைய செய்திகள்: 11 மே 2026 - திங்கட்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 11/05/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  19. 982

    ஆஸ்திரேலிய பள்ளிக் குழந்தைகள் & பல்கலை மாணவர்களின் தகவல் திருட்டு: நாம் அறிய வேண்டியது என்ன?

    ஆஸ்திரேலியாவின் பல கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் Canvas நிறுவனத்தின் தகவல் களவாடப்பட்டுள்ளது (data breach). இது பள்ளிகள், TAFE மற்றும் பல்கலைக்கழகங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் உண்மையான ஆபத்து என்ன? உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று விளக்குகிறார் பிரிஸ்பேனில் வாழும் தொழில்நுட்பத் துறை Test Manager நதியா சந்திரசேகரன் அவர்கள். தொழில்நுட்ப துறையில் Test Manager ஆக பணியாற்றும் நதியா, “Kaapiyam with Nadhiya” என்ற தனது சமூக ஊடக தளத்தின் மூலம் புத்தகங்கள், ஊக்கம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு தொடர்பான உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

  20. 981

    தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்!

    தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  21. 980

    குடியேற்றத்தை வெகுவாகக் குறைக்கக் கோரும் One Nation கட்சி தேர்தலில் அமோக வெற்றி!

    New South Wales மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதியான Farrer தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் One Nation கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சி பெற்றிருக்கும் வெற்றி ஆஸ்திரேலிய அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.

  22. 979

    இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் நடிகர் விஜய்

    தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் நேற்று (சனிக்கிழமை) மாலை சந்தித்ததை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  23. 978

    இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (3 மே – 9 மே 2026)

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (3 மே – 9 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

  24. 977

    சரிவை நோக்கி நகரும் ஆஸ்திரேலிய வீட்டு விலைகள்

    ஆஸ்திரேலியாவின் வீட்டுச் சந்தை சரிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  25. 976

    இலங்கை: ஆஸ்திரேலியா உட்பட 40 நாட்டவர்களுக்கு இலவச விசா

    ஆஸ்திரலியா உட்பட 40 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  26. 975

    ‘ஊரில் நடக்கும் திருவிழா சிட்னிக்கு வந்தது போன்ற உணர்வு வந்தது’

    TACA - தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கடந்த ஞாயிறு (3 May) சிட்னி பெருநகரின் Stanhope Gardens எனுமிடத்திலுள்ள Blacktown Leisure Centreயில் வைத்து நடத்திய ‘சிட்னியில் சித்திரை திருவிழா’ நிகழ்வின்போது நம்மிடம் கலந்துரைடியவர்களின் ஒலித் தொகுப்பு. தொகுத்தவர்: றைசெல்.

  27. 974

    குயின்ஸ்லாந்து தமிழ் சமூகத்திற்கான பணியில் 40 ஆண்டுகள்!

    குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கம் (Queensland Tamil Association) தனது 40 ஆண்டுகால சமூக சேவையை, கலைப் பணியை இந்த வாரம் பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த மைல்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், பறை இசை மற்றும் கரகாட்டம் போன்ற வண்ணமயமான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இது குறித்து நம்முடன் உரையாடுகிறார் குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கார்த்திக் இளங்கோவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

  28. 973

    Women’s legal services in Australia: Understanding your options - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான என்னென்ன சட்ட உதவி சேவைகள் உள்ளன?

    Workplace discrimination, gender-based violence and financial inequality—these are just some of the reasons why women need dedicated legal services. You don’t have to navigate the legal system alone. In Australia, free legal services exist to advocate for vulnerable women in ways that are safe, confidential and culturally appropriate. - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்காகப் பாதுகாப்பான, ரகசியமான மற்றும் கலாச்சார ரீதியாகப் பொருத்தமான வழிகளில் உதவுவதற்கு இலவச சட்ட சேவைகள் உள்ளன. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  29. 972

    இன்றைய செய்திகள்: 08 மே 2026 - வெள்ளிக்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 08/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  30. 971

    தமிழகத்தில் புதிய அரசு அமைக்க கூட்டணி உருவாகிறதா?

    தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக மிக பரப்பரப்பான சூழலுக்கிடையில் நடந்து முடிந்த நிலையில், தவெக ஆட்சி அமைவதற்கான சாத்தியம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

  31. 970

    செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா வந்திறங்கிய ISIS தொடர்பு குடும்பங்கள் கைது

    சிரியாவில் பல ஆண்டுகளாக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த, ஐ.எஸ். தொடர்புடையதாகக் கருதப்படும் சில ஆஸ்திரேலிய பெண்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவிற்கு நாடுதிரும்பியுள்ளனர். அதில் சிலர் கைதாகியுள்ளனர். இந்த வருகை தேசிய பாதுகாப்பு, மனிதாபிமானம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு குறித்து ஆஸ்திரேலியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  32. 969

    நமக்கு தெரியாமலே நாம் பிளாஸ்டிக் துகள்களை சாப்பிடுகிறோமா?

    பிளாஸ்டிக் என்பது, பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து பெறப்படும் ஒரு செயற்கை பொருள். மேலும், எளிதில் மக்கும் தன்மை கொண்டது அல்ல. Newcastle பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் தவமணி பழனிசாமி, பிளாஸ்டிக் மாசு மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் பற்றியும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் மாசை எவ்வாறு குறைக்கலாம் போன்ற விடயங்களை விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  33. 968

    செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய டாலர் 4 ஆண்டுகளில் இப்போது உச்சம் தொட்டது!

    கடந்த சில வாரங்களாக, ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது. காரணம் – ஆஸ்திரேலிய டொலர் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டி விட்டது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  34. 967

    மூட்டுகளில் ஏற்படும் சத்தம் Arthritis-மூட்டழற்சி வருவதற்கான அறிகுறியா?

    Arthritis என்பது வயதானவர்களைப் பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் Arthritis பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

  35. 966

    இன்றைய செய்திகள்: 07 மே 2026 - வியாழக்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 07/05/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  36. 965

    ‘சித்திரைதான் தமிழரின் புத்தாண்டு’ – மன்னர் மன்னன்

    தமிழர் வரலாறு, அடையாளம், தமிழ்த் தேசிய சிந்தனை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றவர் மன்னர் மன்னன் அவர்கள். ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், பேச்சாளர் என்று பன்முகம் கொண்ட மன்னர் மன்னன் அவர்கள், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பல கலாசார மற்றும் வரலாற்று விவாதங்களில் தனித்துவமான கருத்துகளை முன்வைத்து வருகின்றார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 2 (அவரோடு உரையாடலில் கலந்துகொண்டவர் பல்கலைக்கழக மாணவர் அபிராம் அவர்கள்).

  37. 964

    ‘தமிழருக்கு தமிழன் என்ற பெருமிதம் தேவை‘ – மன்னர் மன்னன்

    தமிழர் வரலாறு, அடையாளம், தமிழ்த் தேசிய சிந்தனை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றவர் மன்னர் மன்னன் அவர்கள். ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், பேச்சாளர் என்று பன்முகம் கொண்ட மன்னர் மன்னன் அவர்கள், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பல கலாசார மற்றும் வரலாற்று விவாதங்களில் தனித்துவமான கருத்துகளை முன்வைத்து வருகின்றார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 1

  38. 963

    Vivid சிட்னி ஒளித்திருவிழா விரைவில் தொடங்குகிறது!

    சிட்னிவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வூட்டவென பலவண்ண ஒளியூட்டல்கள், இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் Vivid Sydney விரைவில் தொடங்கவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  39. 962

    தமிழ் உட்பட பல ஆசிய மொழிக் கற்றலுக்கு ஆஸ்திரேலிய அரசு கூடுதல் நிதி உதவி

    ஆஸ்திரேலியாவில் ஆசிய மொழிக் கல்வியை வலுப்படுத்த ஏதுவாக தமிழ் உட்பட பல மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கு அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  40. 961

    தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவு - இவர்கள் கூறுவது என்ன?

    தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பாராத அமோக வெற்றியை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெற்று அட்சி அமைக்க உள்ளது. தவெகவிற்கு அடுத்தபடியாக திமுகவும் அதன் பின் அதிமுகவும் அதிக இடங்களை வென்றுள்ளன. முதல் முறையாக திராவிட கட்சி இல்லாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் அமைய போவதாகவும் கருதப்படுகிறது. தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து நமது நேயர்கள் சிலர் பகிர்ந்துக்கொண்ட கருத்துகளை அடுத்ததாக கேட்போம். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி இன்பசேகரன்.

  41. 960

    தமிழ் சுயாதீன இசைக்கு புதிய அடையாளம் தரும் Keys & Verses கௌஷிக் மற்றும் விஜய்!

    மெல்பனைத் தளமாகக் கொண்ட சுயாதீன இசைக் கலைஞர்கள் கௌஷிக் கணேசன் மற்றும் விஜய் ராகவன் ஆகியோர் Keys & Verses Collective என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். 'தமிழா தமிழா' மற்றும் 'AI சந்தரி' உட்பட பல பிரபலமான பாடல்களை வெளியிட்டுள்ள இக்கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு. மெல்பன் கலையகத்தில் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  42. 959

    செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் குடிவரவு முகவர்கள் பலர் மீது கடும் நடவடிக்கை

    ஆஸ்திரேலியாவில் குடிவரவு ஆலோசனை வழங்குபவர்கள் மீது கண்காணிப்பு அதிகரித்துள்ள நிலையில் குடிவரவு முகவர்கள் பதிவு ஆணையத்தின் அலுவலகமான OMARA கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  43. 958

    இன்றைய செய்திகள்: 06 மே 2026, புதன்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 06/05/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  44. 957

    இலங்கை: அதிகரிக்கும் யானை - மனித மோதல்களும், உயிரழப்புகளும்

    இலங்கையின் கிழக்கு பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் – மனிதனுக்கும் இடையே மோதல்கள் காரணமாக உயிரிழப்புகளும் சேதங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  45. 956

    தமிழகத்தில் புதிய அரசு அமைக்க கூட்டணி உருவாகிறது!

    தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக மிக பரப்பரப்பான சூழலுக்கிடையில் நடந்து முடிந்த நிலையில், தவெக ஆட்சி அமைவதற்கான சாத்தியம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  46. 955

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026: பிந்திய தகவல்கள்

    தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கி, சந்தித்த முதல் தேர்த்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் சாதனையை படைத்துள்ளார் விஜய். விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வீசிய அலை தமிழக அரசியலை புரட்டி போட்டு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். இதுகுறித்த செய்தியோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

  47. 954

    ஆஸ்திரேலிய மாணவர் விசா பரிசீலனை கடுமை – இந்தியா, இலங்கை மாணவர்கள் பாதிப்பு!

    ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மறுப்பு வீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  48. 953

    இன்றைய செய்திகள்: 05 மே 2026 - செவ்வாய்க்கிழமை

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 05/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  49. 952

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்: தவெக அமோக வெற்றி

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 113 தொகுதிகளில் (இந்திய நேரம் மதியம் 01:40 நிலவரப்படி) முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 64 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் தமிழக வெற்றிக் கழகம் மேலும் சில இடங்களில் முன்னிலை வகித்து தனித்து ஆட்சி அமைக்கும் என்று கருதப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  50. 951

    Tips to reduce petrol costs | Fuel in Focus - பெட்ரோல் செலவைக் குறைத்து பணத்தைச் சேமிப்பது எப்படி?

    Rising fuel prices are putting pressure on household budgets across Australia, and for many people, it’s changing the way they travel. So what can you do to reduce your fuel costs without giving up your daily routine? Here are some simple, practical ways to save money on petrol. - உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிநிலைமையில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன—மேலும் பலருக்கு, இது அவர்கள் பயணம் செய்யும் விதத்தையும் மாற்றுகிறது. அப்படியானால் உங்கள் வழக்கமான வாழ்க்கையை மாற்றாமல் எரிபொருள் செலவை எப்படி குறைக்கலாம்? இது தொடர்பில் Sahil Makkar ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

HOSTED BY

SBS

Produced by SBS Audio

CATEGORIES

URL copied to clipboard!