125.உமக்கு ஒரு நற்செய்தி
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தொழுகை - ஜமாஅத்துத் தொழுகை ١٢٥- عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَرْيَمَ ؒ قَالَ: لَحِقَنِي عَبَايَةُ بْنُ رِفَاعَةَ بْنِ رَافِعٍ ؒ وَأَنَا مَاشٍ إِلَي الْجُمُعَةِ فَقَالَ: أَبْشِرْ فَإِنَّ خُطَاكَ هذِهِ فِي سَبِيلِ اللهِ سَمِعْتُ أَبَا عَبْسٍ ؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللهِ فَهُمَا حَرَامٌ عَلَي النَّارِ. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب باب ماجاء في فضل من اغبرت قدماه في سبيل اللّه، رقم:١٦٣٢ 125. நான் ஜும்ஆத் தொழுகைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஹஜ்ரத் அபாயா இப்னு ரிஃபாஆ (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன், அவர்கள், உமக்கு ஒரு நற்செய்தி! நீர் எடுத்து வைக்கும் கால் எட்டு அல்லாஹ்வின் பாதையில் எடுத்து வைக்கிறீர்' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் பாதையில் எவருடைய பாதங்களின் மீது புழுதி படிகிறதோ அந்தப் பாதத்தை நரக நெருப்புத் தீண்டுவது விலக்காகி விட்டது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅப்ஸ் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்'' என்பதாக ஹஜ்ரத் யஸீதுப்னு அபூமர்யம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதீ)
Embed this episode
No transcript yet.