16.பகல், இரவில் தொழுகைகள்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தொழுகை - ஃபர்ளான தொழுகைகள் ١٦- عَنْ سَلْمَانَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ الْمُسْلِمَ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ صَلَّي الصَّلَوَاتِ الْخَمْسَ تَحَاتَّتْ خَطَايَاهُ كَمَا يَتَحَاتُّ هذَا الْوَرَقُ وَقَالَ: (وَأَقِمِ الصَّلوةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفاً مِّنَ اللَّيْلِ ط إِنَّ الْحَسَنتِ يُذْهِبْنَ السَّيِّاتِ ط ذلِكَ ذِكْرَي لِلذَّاكِرِينَ۞). هود:١١٤. (وهو جزء من الحديث) رواه احمد:5/٤٣٧ 16. ஒரு முஸ்லிம், சிறந்த முறையில் உளூச் செய்து, ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால், இந்த இலைகள் உதிர்வது போல், அவரது பாவங்கள் உதிர்ந்து விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபின், (وَأَقِمِ الصَّلوةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفاً مِّنَ اللَّيْلِ ط إِنَّ الْحَسَنتِ يُذْهِبْنَ السَّيِّاتِ ط ذلِكَ ذِكْرَي لِلذَّاكِرِينَ) முஹம்மதே! நீர் பகலின் இரு ஓரங்களிலும், இரவின் சில பகுதியிலும், தொழுகையை நிலை நாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடுகின்றன, உபதேசத்தை ஏற்பவர்களுக்கு இவைகள் நிறைவான உபதேசமாகும்'' என்ற ஆயத்தை ஓதினார்கள், என்று ஹஜ்ரத் ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்) தெளிவுரை:- இரு ஓரங்கள் என்பது இரு பகுதிகள். முதல் பகுதியில் சுபுஹுத் தொழுகை, இரண்டாம் பகுதியில் லுஹர், அஸர்த் தொழுகைள். இரவின் சில பகுதிகளில் தொழுதல் என்பதன் பொருள்: மஃரிப், இஷா தொழுகைகள்'' என்று சில விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளர்கள். (தஃப்ஸீர் இப்னுகஸீர்)
Embed this episode
No transcript yet.