EPISODE · Oct 7, 2023 · 10 MIN
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் - தோழர். விடுதலை ராஜேந்திரன்
from Yean Oli · host Yean
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. 1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத் தில் இராஜாஜி எனும் பார்ப்பனர் இராஜகோபாலாச் சாரியாரை முதலமைச்சராகக் கொண்ட காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் அது. முதலில் பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தையே ஏற்க மாட்டோம் என்று ‘வீரம்’ பேசிய அன்றைய காங்கிரஸ் கட்சி, பிறகு பிரிட்டிஷ் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தேர்தலில் பங்கேற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. பெரியாரின் ‘குடிஅரசு’ இதை ‘சரணாகதி மந்திரி சபை’ என்று விமர்சித்தது. இந்தியாவில் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் அப்போது ஆட்சியைப் பிடித்திருந்தது. அப்போது இராஜகோபாலாச்சாரி வேறு எந்த மாநில காங்கிரஸ் அமைச்சரவையும் எடுக்காத ஒரு முடிவை எடுத்தார். அதுதான் இந்தித் திணிப்பு. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி 1938 பிப்ரவரி 25ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர உத்தரவிட்டார். 1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் ‘குடிஅரசில்’ ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே பார்ப்பனர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார். 1930ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். மறைமலை அடிகளார் போன்ற தமிழ் அறிஞர்களும் இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தே இராஜகோபாலாச்சாரி இந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்தார். தமிழ்நாடு கொந்தளித்தது. 1938 பிப்ரவரியில் காஞ்சிபுரத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. மாநாட்டில் பெரியார் இந்தியை எதிர்த்து போர்முரசு கொட் டினார். “இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறிய பெரியார், அவை என்ன என்பதையும் விளக்கினார். “தமிழ் மக்களை புராண காலம் போல் பார்ப்பனியத்துக்கு நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதே, இதன் நோக்கம் சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொண்டிருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடி புகுத்துவதற்கே இந்தித் திணிப்பு” என்று அதன் நோக்கத்தை அம்பலப்படுத்தி போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார்.
Embed this episode
NOW PLAYING
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் - தோழர். விடுதலை ராஜேந்திரன்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.