Skip to content
20.இரண்டு வகையான உள்ளம் episode artwork

Mar 21, 2022 1 min

20.இரண்டு வகையான உள்ளம்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தஃவத் தப்லீஃக் - தஃவத்தும், அதன் சிறப்புகளும் ٢٠- عَنْ حُذَيْفَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: تُعْرَضُ الْفِتَنُ عَلي الْقُلُوبِ كَالْحَصِيرِ عُودًا عُودًا، فَأَيُّ قَلْبٍ أُشْرِبَهَا نُكِتَ فِيهِ نُكْتَةٌ سَوْدَاءُ، وَأَيُّ قَلْبٍ أَنْكَرَهَا نُكِتَ فِيهِ نُكْتَةٌ بَيْضَاءُ، حَتَّي تَصِيرَ عَلَي قَلْبَيْنِ، عَلي أَبْيَضَ مِثْلَ الصَّفَا، فَلاَ تَضُرُّهُ فِتْنَةٌ مَا دَامَتِ السَّمواتُ وَاْلاَرْضُ، وَاْلآخَرُ أَسْوَدُ مِرْبَادّاً كَالْكُوزِ مُجَخِّياً لاَ يَعْرِفُ مَعْرُوفاً وَّلاَ يُنْكِرُ مُنْكَرًا إِلاَّ مَا أُشْرِبَ مِنْ هَوَاهُ. رواه مسلم، باب رفع الامانة والايمان من بعض القلوب...،رقم:٣٦٩ 20. பாய்க்கோரைகள் ஒன்றோடொன்று முன்னும் பின்னும், சேர்ந்திருப்பது போன்று மக்களின் உள்ளங்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து குழப்பங்கள் வந்து கொண்டிருக்கும். இந்தக் குழப்பங்களிலிருந்து ஏதேனுமொரு குழப்பத்தை எந்த உள்ளம் அங்கீகரிக்குமோ அந்த உள்ளத்தில் ஒரு கருப்புப்புள்ளி ஏற்படும். எந்த உள்ளம் இதை ஏற்றுக் கொள்ளாதோ அவ்வுள்ளத்தில் வெள்ளை நிறத்தில் ஓர் அடையாளம் பதிந்துவிடும் இவ்வாறு உள்ளம் இரண்டு வகையாகிவிடும், ஒன்று, வெண்ணிறத்தில் பளிங்குக் கல்லைப்போல் இருக்கும் உள்ளம். வானம், பூமி நிலைத்திருக்கும் வரை எந்த குழப்பத்தினாலும் அந்த உள்ளத்துக்குத் தாக்கம் உண்டாக்க முடியாது. (பளிங்குக்கல்லின் வழுவழுப்பால் அதன் மீது எந்தப் பொருளும் தங்காததைப்போல், அவருடைய உள்ளத்தில் ஈமான் உறுதியாக இருப்பதால் எந்தக் குழப்பத்தாலும் தாக்கம் ஏற்படுத்த முடியாது) மற்றோரு வகையான உள்ளம், கறுப்பு நிற கவிழ்த்து வைக்கப்பட்ட மண் கோப்பையைப் போன்றது. அதிகமான பாவத்தின் காரணமாக உள்ளம் கறுப்பு நிறமாக மாறிவிடும், கவிழ்த்து வைக்கப்பட்ட கோப்பையில் எதும் தங்காததுபோல், பாவங்களின் மீது வெறுப்போ, ஈமானுடைய ஒளியோ அந்த உள்ளத்தில் தங்காது, அதன் காரணமாக நல்லதை நல்லதென்றோ, தீயதைக் தீயதென்றோ அப்படிப்பட்ட உள்ளம் உடையவன் அறியமாட்டான். தன்னுள்ளே இடம் பிடித்துக்கொண்ட மனோ இச்சைகளின்படியே நடப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

20.இரண்டு வகையான உள்ளம்

0:00 1:40

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 21, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.