EPISODE · Mar 6, 2022 · 1 MIN
21.நாவின் ஆபத்து
from தீனுல் இஸ்லாம் தாவத் · host Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٢١- عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِﷺ اَ كُلُّ مَا نَتَكَلَّمُ بِهِ يُكْتَبُ عَلَيْنَا؟ فَقَالَ: ثَكِلَتْكَ اُمُّكَ، وَهَلْ يَكُبُّ النَّاسَ عَلي مَنَاخِرِهِمْ فِي النَّارِ اِلاَّ حَصَائِدُ اَلْسِنَتِهِمْ، اِنَّكَ لَنْ تَزَالَ سَالِمًا مَا سَكَتَّ فَاِذَا تَكَلَّمْتَ كُتِبَ لَكَ اَوْ عَلَيْكَ. قلت: رواه الترمذي باختصار من قوله: اِنَّكَ لَنْ تَزَالَ اِلَي آخره. روا الطبراني باسنادين ورجال احدهما ثقات، مجمع الزوائد:١٠/٥٣٨ 21. ஹஜ்ரத் முஆதுப்னுஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், எந்தப் பேச்சை நாங்கள் பேசினாலும் அவையாவும் எங்களுடைய பட்டோலைகளில் எழுதப்படுமா? (அவற்றுக்காக தண்டிக்கப்படுவோமா?)' என்று நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வினவினேன். உமது தாய் உமக்காக அழட்டும், (நன்றாக அறிந்து கொள்ளும்) நாவின் தீய பேச்சுக்களே மக்களை முகங்குப்புற நரகத்தில் தள்ளக்கூடியது. நீங்கள் மௌனமாக இருக்கும்வரை (நாவின் ஆபத்திலிருந்து) பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்கள் பேசினால், ஒன்று உங்களுக்கு நன்மை, அல்லது பாவம் எழுதப்பட்டு விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தபரானீ, மஜ்மஉஸ்ஸாயித்) தெளிவுரை:- உமது தாய் உமக்காக அழட்டும்'' என்ற வார்த்தை அரபி மொழியில் நேசத்தை வெளிப்படுத்த உபயோகிக்கும் நேச வார்த்தை, இது சாப வார்த்தையல்ல.
Embed this episode
Ready to play
21.நாவின் ஆபத்து
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.