EPISODE · May 29, 2023 · 13 MIN
29.மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய மாண்புமிகு ராமச்சந்திரனை || 1986 செப்டம்பர் 15 முப்பெரும் விழாவில் தலைவர் கலைஞர் ஆற்றிய தலைமைக் கவிதை உரை .
from Dravidian Stock · host Dravidian Stock
விளக்கை அணைத்து விட்டு வீட்டுக்குள் புகுந்த திருடன்அகப்பட்டதை சுருட்டி கொண்டு அகப்படாமல் ஓடியதை போல்அருப்புக்கோட்டை நெல்லை தொகுதிகளை வென்று விட்டான்...இதற்கு தான் நான் முன்பே சொன்னேன்இந்த இடிஅமீன் ஆட்சியிலே நமக்கு இடை தேர்தல் எண்ணம்எள் முனையும் வேண்டாமென்றுஇருந்தாலும் போர் காலத்தில் விழுப்புண் பெறுவதே பெருமை என்றுஇனிய உடன்பிறப்புகள் எல்லோரும் இருக்கருத்துக்கிடமின்றிஎடுத்துரைத்த காரணத்தால் ..பணநாயக படை எதிர்த்து நமது ஜநாயக படை மோதிற்றுமறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய மாண்புமிகு ராமச்சந்திரனைமாவீரன் என்று போற்ற மஹாகவி கம்பனே தயங்கினான் என்றால்மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே..ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானேஎனவே விழுந்தாலும் விழுப்புண் பெற்றோர் தான் வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவார்தாழ்ந்தாலும் தமிழன் தன்மானம் இழந்து தன் தலையை மட்டும் தாழ்த்த மாட்டான்.தாய் தந்தையரை நன்றியுடன் போற்றும் தனி பணப்பாட்டை மறக்கமாட்டான்.தாயாக தமிழர்க்கு அண்ணாவும்தந்தையாக பெரியாரும் வாய்ததாலேஅவருக்கு சேயாக விளங்குகின்ற திமு கழகம்செய்ந்நன்றி சிறிதளவும் மறவாமல் இன்றுதெருமுனையில் பட்டபுண்ணை சிரிப்பாலே ஆற்றிவருங்கால வெற்றிக்கு வழிவகுக்க கண்டீர்இதயத்தை விட்ட (?) ஈரோட்டு பள்ளியையும்என்றைக்கும் பசுமையான காஞ்சி கல்லூரியையும்ஏக்க பெருமூச்சுடன் எண்ணி புரண்டவாருஎன் படுக்கையிலே நெளிந்திட்டேன் நேற்றிரவுஅப்போது...பக்கமது நெருக்கமாக படுத்து கொண்டுவெட்கமது ஒருசிறிதும் இல்லாமல்என்னை ஒருத்தி ஓடி வந்து தழுவி கொண்டாள்அவளை அள்ளி அணைப்பதற்கு நான் முயலவில்லை என்றாலும்தள்ளி விட மனமில்லை தழுவட்டுமே என்றிருந்தேன்.அதன் பின்னர் மற்றொருத்தி வந்தாள்அவள் வானம்பாடி இசை கூட்டும் மாயக்காரிஎன்ன இது இரு மங்கை ஒரு படுக்கைஎன கேட்பீர் பொறுத்திடுகமுதலில் வந்தவள் பேர் தூக்கம் மற்றொருத்தி கனவு மங்கைஅந்த கனவினில் நான் கண்ட காட்சியெல்லாம்தமிழ் காட்சி .. தமிழர் மாட்சிஅது என்ன கனவு?மன்றம் ஒன்றில் இசைவாணன் கீதை மழை பொழிகின்றான்மக்கள் எல்லாம் மதுகுடித்த வந்து போல் மயங்குகின்றார்மங்களமாய் இசைநிகழ்ச்சி முடியும் போதுமக்கள் தரும் ஆர்வமுடன் மேலும் பத்து பாட்டு பாடு என்றான்.மலைத்துவிட்ட இசைவாணன் கனைத்து கொண்டுபாடுகின்றேன் மேற்கொண்டு என்ன தொகை தருவார் என்றான்வெடுக்கென ஒரு புலவன் எழுந்து நின்று விடையளித்தான் எட்டு தொகை தருவதாக..இசைவாணன் புரிந்து கொண்டுஇது என்ன நியாயம்?எந்தன் பத்து பாட்டுக்கு எட்டு தொகையா?அது எனக்கு குறுந்தொகை என்று சொன்னான்.ஓ ஹோ ஐந்து நூறு வேண்டுமோ என்று கடித்தார் புலவர்நூறு வேண்டேன் அதனை தீண்டேன்நானூறு தருவீரோ புலவரேஅதுவும் அகத்தில் நானூறு புறத்தில் நானூறுஎன்று வளைத்தனன் இசையில் வல்லவன்புறத்தில் நானூறு அகத்தில் நானூறுபுரிந்து கொண்டார் புலவர் பெருமகன்புறநானூறு காசோலையில் நானூறுஅகநானூறு கருப்பில் நானூறுபொல்லா செயலாது பொல்லா செயலாதுவருமான வரிதனை ஏய்ப்போர் செயலதுஅதனாலே பாட்டுக்கு தொகை கேட்க்கும் பேச்சுத்தனை விட்டொழிப்பீர்பசும்பால் தருவோம் தொண்டைக்குதேவையெனில் முப்பாலை தருவோம் பாடிடுக என்று சொன்னான்முப்பால் தருவதாக மொழிந்திட்ட புலவரையாபொருட்பால் ஒன்றுக்கே இனி என் தொண்டை பேசுமென இசைவாணன் எழுந்துவிட்டான்நீண்ட உயில் கலைந்தெழுந்தேன்நெடுநல் வாடை பட்டதாலே ... 1986 செப்டம்பர் 15.சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த முப்பெரும் விழாவில் தலைவர் கலைஞர் ஆற்றிய தலைமைக் கவிதை உரை .
Embed this episode
Ready to play
29.மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய மாண்புமிகு ராமச்சந்திரனை || 1986 செப்டம்பர் 15 முப்பெரும் விழாவில் தலைவர் கலைஞர் ஆற்றிய தலைமைக் கவிதை உரை .
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.