3.அபுபக்கர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தஃவத் தப்லீஃக் - தஃவத்தும், அதன் சிறப்புகளும் ٣- عَنْ عَائِشَةَؓ قَالَتْ: خَرَجَ أَبُو بَكْرٍؓ يُرِيدُ رَسُولَ اللهِ ﷺ، وَكَانَ لَهُ صَدِيقاً فِي الْجَاهِلِيَّةِ، فَلَقِيَهُ، فَقَالَ: يَا أَبَا الْقَاسِمِ، فُقِدْتَ مِنْ مَجَالِسِ قَوْمِكَ، وَاتَّهَمُوكَ بِالْعَيْبِ لِآبَائِهَا وَأُمَّهَاتِهَا، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنِّي رَسُولُ اللهِ، أَدْعُوكَ إِلَي اللهِ فَلَمَّا فَرَغَ مِنْ كَلاَمِهِ أَسْلَمَ أَبُو بَكْرٍؓ،فَانْطَلَقَ عَنْهُ رَسُولُ اللهِﷺ وَمَا بَيْنَ اْلاَخْشَبَيْنِ أَحَدٌ أَكْثَرَ سُرُورًا مِنْهُ بِاسْلاَمِ أَبِي بَكْرٍؓ، وَمَضَي أَبُوبَكْرٍ فَرَاحَ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ وَطَلْحَةَ بْنِ عُبَيْدٍ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍؓ، فَأَسْلَمُوا، ثُمَّ جَاءَ الْغَدَ بِعُثْمَانَ بْنِ مَظْعُونٍ وَأَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ وَعَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ اْلاَسَدِ وَاْلاَرْقَمِ بْنِ أَبِي اْلاَرْقَمِ، فَأَسْلَمُواؓ. البداية والنهاية:٣ /٨٠ 3. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் நண்பராக இருந்தார்கள். ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் எண்ணத்தோடு வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களைச் சந்தித்ததும், அபுல்காஸிம், (இது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சைக்கினை பெயர்) தங்களின் சமூகத்தினரின் சபைகளில் உங்களைக் காண முடிவதில்லையே! தங்களின் சமூகத்தினரின் மூதாதையரைத் தாங்கள் குறை கூறுவதாகத் தங்கள் மீது பழி சுமத்துகின்றனரே'' என்று சொன்னார்கள். நான் அல்லாஹுதஆலாவின் தூதர், உங்களை நான் அல்லாஹுதஆலாவின் பால் அழைக்கிறேன்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தம் பேச்சை முடித்ததுமே ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து திரும்பி வந்துவிட்டார்கள். ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதால் நபி (ஸல்) அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று மக்காவின் இரு மலைகளுக்கிடையே இருக்கின்ற மக்களில் எவரும் வேறு எந்த காரியத்துக்கும் இவ்வாறு மகிழ்ச்சி அடைந்திருக்கமாட்டார்கள். அங்கிருந்து ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான், ஹஜ்ரத் தல்ஹத்துப்னு உபைதுல்லா, ஹஜ்ரத் ஸுபைரிப்னு அவ்வாம் மற்றும் ஹஜ்ரத் ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) ஆகியோரை இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். மறுநாள் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள், ஹஜ்ரத் உஸ்மானிப்னு மழ்ஊன், ஹஜ்ரத் அபூஉபைதத்துப்னு ஜர்ராஹ், ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு அவ்ப், ஹஜ்ரத் அபூஸலமத்துப்னு அப்துல் அஸத், ஹஜ்ரத் அர்கமிப்னு அபீஅர்கம் (ரலி) ஆகியோரை அழைத்துக் கொண்டு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவிவிட்டனர்'' (இரண்டு நாட்களில் ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் அழைப்பால் ஒன்பது நபர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்) (அல்பிதாயா வந்நிஹாயா)
Embed this episode
No transcript yet.