4.ஏழைகளுக்கு அரைநாள் முன்னதாக சொர்க்கம்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி ٤- عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ اْلاَغْنِيَاءِ بِخَمْسِ مِائَةِ عَامٍ، نِصْفِ يَوْمٍ. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء ان فقراء المهاجرين …رقم:٢٣٥٣ 4.பணக்காரர்களைவிட ஏழைகள் அரைநாள் முன்னதாக சொர்க்கத்தில் நுழைவார்கள், அரைநாள் என்பது ஐந்நூறு வருடங்கள்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ) தெளிவுரை:- முந்திய ஹதீஸில் பணக்காரரை விட ஏழை நாற்பது வருடத்திற்கு முன்னதாகச் சுவனம் செல்வார் எனக் கூறப்பட்டது ஏழை, பணக்காரர் இருவரிடமும் பொருள் ஆசை இருக்கும் நிலையிலாகும். இந்த ஹதீஸில் உள்ளபடி ஐநூறு வருடங்கள் முந்திச் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஏழையிடம் பொருள் ஆசை இல்லாத போதும் பணக்காரரிடம் பொருளாசை இருக்கும் போதும் ஆகும். (இப்னு அஸீரின் ஜாமிஉல் உஸூல்)
Embed this episode
No transcript yet.