4.நபியின் இறுதி உபதேசம்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தொழுகை - ஃபர்ளான தொழுகைகள் ٤- عَنْ قُرَّةَ بْنِ دَعْمُوصٍؓ قَالَ: أَلْفَيْنَا النَّبِيَّ ﷺ فِي حَجَّةِ الْوَدَاعِ: فَقُلْنَا يَارَسُولَ اللهِﷺ مَا تَعْهَدُ إِلَيْنَا؟ قَالَ: أَعْهَدُ إِلَيْكُمْ أَنْ تُقِيمُوا الصَّلاَةَ، وَتُؤْتُوا الزَّكَوةَ، وَتَحُجُّوا الْبَيْتَ الْحَرَامَ، وَتَصُومُوا رَمَضَانَ، فَإِنَّ فِيهِ لَيْلَةً خَيْرٌ مِنْ اَلْفِ شَهْرٍ، وَتُحَرِّمُوا دَمَ الْمُسْلِمِ وَمَالَهُ وَالْمُعَاهِدَ إِلاَّ بِحَقِّهِ، وَتَعْتَصِمُوا بِاللهِ وَالطَّاعَةِ. رواه البيهقي في شعب الايمان:٤/٣٤٢ 4. நாங்கள் ஹஜ்ஜதுல் வதாவில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைச் சந்தித்த பொழுது, யாரஸூலல்லாஹ்! எக்காரியம் செய்ய தாங்கள் எங்களுக்கு உபதேசிக்கின்றீர்கள்?'' என்று கேட்டோம். தொழுகையை நிலை நாட்டவும், ஜகாத்தை நிறைவேற்றவும், பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜிச் செய்யவும், ரமளான் நோன்பு நோற்கவும், அம்மாதத்தில் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவொன்று உள்ளது. முஸ்லிம், மற்றும் திம்மீ (யாருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதோ அவர்)களைக் கொலை செய்வதையும், அவர்களது பொருட்களை அபகரித்துக் கொள்வதையும் ஹராமெனக் கருதுங்கள். ஆனால், ஏதேனும் குற்றம் செய்தால் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர்கள் தண்டிக்கப்படுவர், மேலும் நான் உங்களுக்கு உபதேசிப்பதாவது, நீங்கள், அல்லாஹ் வையும், அவனுக்கு வழிப்பட்டு நடப்பதையும், உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், (மற்றவர்களின் திருப்தி, அதிருப்தியைப் பொருட்படுத்தாமல் தைரியமாக தீனுடைய வேலைகளில் ஈடுபட்டிருங்கள்)'' என்றும் உபதேசிக்கிறேன் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஹஜ்ரத் குர்ரத்துப்னு தஃமூஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ)
Embed this episode
No transcript yet.