41.ஆறு காரியங்களுக்கு சொர்க்கம்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٤١- عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: تَقَبَّلُوْا لِيْ سِتًّا، اَتَقَبَّلُ لَكُمْ بِالْجَنَّةِ قَالُوْا: مَا هِيَ؟ قَالَ: اِذَا حَدَّثَ اَحَدُكُمْ فَلاَ يَكْذِبْ، وَاِذَا وَعَدَ فَلاَ يُخْلِفْ، وَاِذَا ائْتُمِنَ فَلاَ يَخُنْ، وَغُضُّوْا اَبْصَارَكُمْ وَكُفُّوْا اَيْدِيَكُمْ، وَاحْفَظُوْا فُرُوْجَكُمْ. رواه ابو يعلي ورجاله رجال الصحيح الا ان يزيد بن سنان لم يسمع من انس، وفي الحاشية: رواه ابو يعلي وفيه سعيد او سعد بن سنان وليس فيه يزيد بن سنان وهو حسن الحديث، مجمع الزوائد: ١٠/٥٤١ 41. எனக்காக ஆறு காரியங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், நீங்கள் சொர்க்கம் செல்ல நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, அவை யாவை''? என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். 1. உங்களில் ஒருவர் பேசினால் பொய் சொல்ல வேண்டாம், 2. வாக்குறுதி கொடுத்தால் வாக்குறுதியை மீற வேண்டாம், 3. ஒருவரிடம் அமானிதம் வைக்கப்பட்டால் அதில் அவர் மோசடி செய்ய வேண்டாம், 4. உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் (பார்க்கத்தகாதவற்றின் மேல் பார்வை செலுத்தக்கூடாது), 5. உங்களது கரங்களை (அநியாயமாகப் பிறரை அடிப்பது போன்றவைகளை விட்டு)த் தடுத்து வையுங்கள், 6. உங்களது மர்மஸ்தானத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்''. (அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
Embed this episode
No transcript yet.