EPISODE · Mar 6, 2022 · 2 MIN
6.ஈடேற்றம் பெற வழி
from தீனுல் இஸ்லாம் தாவத் · host Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٦- عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِﷺ مَا النَّجَاةُ؟ قَالَ: اَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلي خَطِيْئَتِكَ. رواه الترمذي وقال: هذا حديث حسن، باب ما جاء في حفظ اللسان، رقم:٢٤٠٦ 6. ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யாரஸூலல்லாஹ்! ஈடேற்றம் பெற வழி என்ன?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன், உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும். வீட்டில் தங்கியிரும் (வீணாக வெளியில் செல்ல வேண்டாம்). உமது பாவங்களை நினைத்து அழுது கொண்டிரும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். (திர்மிதீ) தெளிவுரை:- நாவைக் கட்டுப்படுத்தி வைத்தல் என்பது, அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதாம். புறம் பேசுதல், கோள் சொல்லுதல், வீண் பேச்சுகள் பேசுதல், தேவையின்றிப் பேசுதல், ஒழுக்கமின்றி எல்லாவிதப் பேச்சும் பேசுதல், வெட்கக்கேடான பேச்சுக்களைப் பேசுதல், சண்டை சச்சரவு செய்தல், திட்டுதல், மனிதனையோ மிருகத்தையோ சபித்தல், பாட்டு மற்றும் கவிதையிலேயே எந்நேரமும் ஈடுபடுதல், கேலி செய்தல், இரகசியத்தை வெளிப்படுத்துதல், பொய் வாக்குறுதி அளித்தல், பொய்ச் சத்தியம் செய்தல், சிலேடையாகப் பேசுதல், காரணமின்றிப் பிறரைப் புகழ்தல், காரணமின்றிக் கேள்விகள் கேட்டல் போன்றவைகள். (இத்ஹாப்)
Embed this episode
Ready to play
6.ஈடேற்றம் பெற வழி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.