EPISODE · May 30, 2023 · 3 MIN
66.இளையராஜாவுக்கு இசைஞானி பட்டம் வழங்கிய கலைஞர் கருணாநிதி அவர்களின் உரை 🖤❤️
from Dravidian Stock · host Dravidian Stock
இசைஞானி பட்டம் கொடுத்த தலைவர் குறித்து....! 🖤❤️ ”அவர் என்னை இசைஞானியாகப் பார்த்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். திருச்சியில் இருந்து காரைக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். எனக்கு அது பாராட்டு விழாவாகத்தான் இருந்தது. அதுவே எனக்குப் பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சியாக மாறும் என்பது தெரியாது. நிகழ்ச்சிக்கு வருகிற வழியில் அப்போது நான் எழுதியிருந்த "வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது.' " சங்கீதக் கனவுகள்' இரண்டு புத்தகங்களையும் படித்துக்கொண்டே வந்திருக்கிறார். கூட்டத்துக்கு வந்தவர் புத்தகங்களைப் படித்தது பற்றிச் சொன்னார். அதை மேடையில் குறிப்பிட்டு இசையிலும், ஆன்மீகத்திலும் இளையராஜா இருப்பதால், அவருக்கு "இசைஞானி' என்ற பட்டத்தைக் கொடுப்பதாக அறிவித்தார். அதன் பின் தனியாக பேசிக் கொண்டிருக்கும்போது, அவரிடம் "இசைஞானியார் என்பது 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் தாயார் பெயர்' என்றேன். "அது தெரியும். அதனால்தான் வைத்தேன்' என்றார். அவர் வைத்த பெயர் அப்படியே மக்கள் மத்தியில் நிலைத்து விட்டது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்....!
Embed this episode
Ready to play
66.இளையராஜாவுக்கு இசைஞானி பட்டம் வழங்கிய கலைஞர் கருணாநிதி அவர்களின் உரை 🖤❤️
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.