7.மனம் விரும்பாவிடினும் சொர்க்கம்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
கலிமா தய்யிபா - ஈமான் ٧- عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : مَامِنْ عَبْدٍ قَالَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ ثُمَّ مَاتَ عَلَي ذلِكَ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ قُلْتُ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ؟ قَالَ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ قُلْتُ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ قَالَ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ قُلْتُ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ قَالَ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ عَلَي رَغْمِ أَنْفِ أَبِي ذَرٍّ. رواه البخاري باب الثياب البيض، رقم:٥٨٢٧ 7.ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற” கலிமாவை மொழிந்து அதன் மீதே இறந்து விடுவாரானால் அவர் சுவனம் சென்றடைவார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளிய போது, “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?’’ என்று நான் கேட்டேன். “ஆம் அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலும்’’ என பதிலளித்தார்கள்; “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் திருடியிருந்தாலுமா?’’ என்று மீண்டும் கேட்டேன். “ஆம் அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலும் சரியே!’’ என மறுமுறையும் பதிலளித்தார்கள். (மூன்றாம் முறையும்) “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?’’ என்று கேட்டேன். “ஆம் அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலும் சரியே!’ அபூதருடைய மனம் விரும்பாவிடினும் அவர் சொர்க்கத்தில் நுழைந்தே தீருவார்!’’ என்று பதில் சொன்னார்கள். (புகாரி) தெளிவுரை:- ஹதீஸில் வந்துள்ள “அலர்ரங்ம்’ என்னும் சொல் அரபி மொழிக்கே உரிய வழக்குச் சொல்லாகும். அதன் கருத்தாவது: இதை நீங்கள் விரும்பாவிட்டாலும், அது நிகழக் கூடாது என நினைத்தாலும் அது நிகழ்ந்தே தீரும் என்பதாகும். பெரும் பாவங்கள் செய்திருந்தாலும் ஒரு முஃமின் சுவனம் செல்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது அபூதர் (ரலி) அவர்களுக்கு வியப்பை அளித்தது. எனவேதான் அதே கேள்வியை நபி (ஸல்) அவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அதே பதிலைக் கூறி அவர்களது வியப்பைக் போக்கும் வகையில், “உங்கள் உள்ளம் ஏற்காவிட்டாலும் அவர் சுவனம் சென்றே” தீருவார்’ என்று சொன்னார்கள். இனி அவர் குற்றம் புரிந்த பிறகு ஈமானின் உணர்வால் தூண்டப்பட்டு தௌபா, இஸ்திங்ஃபார் செய்து தனது பாவத்திற்குரிய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அல்லாஹு தனது கிருபையினால் அவருக்கு மன்னிப்பு வழங்கி எவ்விதத் தண்டனையும் இல்லாமலோ அல்லது பாவத்திற்குரிய தண்டனைக் கொடுத்தோ அவரை நிச்சயம் சுவனம் புகச் செய்வான். இந்த ஹதீஸில் “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்வதன் பொருள், முழு தீனின் மீதும், ஏகத்துவத்தின் மீதும் ஈமான் கொண்டு அதன்படி நடப்பதாகும் என்று உலமாக்கள் எழுதியுள்ளார்கள். (மஆரிஃபுல் ஹதீஸ்)
Embed this episode
No transcript yet.