Skip to content
8.நரகிலிருந்து ஈடேற்றம் பெறச் செய்யும் கலிமா episode artwork

Mar 10, 2022 1 min

8.நரகிலிருந்து ஈடேற்றம் பெறச் செய்யும் கலிமா

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

கலிமா தய்யிபா - ஈமான் ٨- عَنْ حُذَيْفَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : يَدْرُسُ اْلإِسْلاَمُ كَمَا يَدْرُسُ وَشْيُ الثَّوْبِ حَتَّي لاَيُدْري مَاصِيَامٌ وَلاَصَدَقَةٌ وَلاَنُسُكٌ وَيُسْرَي عَلَي كِتَابِ اللّٰهِ فِي لَيْلَةٍ فَلاَ يَبْقَي فِي اْلاَرْضِ مِنْهُ آيَةٌ وَيَبْقَي طَوَائِفُ مِنَ النَّاسِ اَلشَّيْخُ الْكَبِيرُ وَالْعَجُوزُ الْكَبِيرَةُ يَقُولَوْنَ أَدْرَكْنَا آبَاءَنَا عَلَي هذِهِ الْكَلِمَةِ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ فَنَحْنُ نَقُولُهَا قَالَ صِلَةُ بْنُ زُفَرَ لِحُذَيْفَةَ فَمَا تُغْنِي عَنْهُمْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَهُمْ لاَيَدْرُونَ مَاصِيَامٌ وَلاَصَدَقَةٌ وَلاَنُسُكٌ فَأَعْرَضَ عَنْهُ حُذَيْفَةُ فَرَدَّدَهَا عَلَيْهِ ثَلاَثاً كُلُّ ذلِكَ يُعْرِضُ عَنْهُ حُذَيْفَةُ ثُمَّ أَقْبَلَ عَلَيْهِ فِي الثَّالِثَةِ فَقَالَ: يَاصِلَةُ تُنَجِّيهِمْ مِنَ النَّارِ. رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجه:٤/٤٧٣ 8.நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆடையின் அலங்கார வேலைப்பாடுகள் மறைந்து நிறம் மங்கிவிடுவது போல் இஸ்லாமும் பிற்காலத்தில் மங்கிப் போய்விடும். ஒருவர் நோன்பு என்றால் என்ன? ஸதகா என்றால் என்ன? இன்னும் ஹஜ் என்றால் என்ன? என்று கூட அறியமாட்டார். இந்நிலையில் ஓர் இரவு வரும். அந்த இரவில் குர்ஆன் (நெஞ்சங்களை விட்டும்) உயர்த்தப்பட்டுவிடும். பூமியில் குர்ஆனின் எந்த வசனமும் மீதம் இருக்காது. அக்காலத்தில் பற்பல இடங்களில் வயது முதிர்ந்த ஆண்கள், பெண்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். “நாங்கள் எங்கள் மூதாதையர் வழியாக லா இலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவைக் கேள்விப்பட்டுள்ளோம். நாங்களும் அதைக் கூறுகிறோம்’’ என்று சொல்வார்கள்.“நோன்பு, ஸகாத், ஹஜ், பற்றி அவர்களுக்கு ஏதுவும் தெரியாத நிலையில் இந்தக் கலிமாவைச் சொல்வதால் என்ன பலன் தரும்?’’ என்று ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்களின் மாணவர் ஸிலா என்பவர் வினவினார். ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் பதிலளிக்கவில்லை. இவ்வாறு மூன்று முறை கேட்டார். மூன்றாம் முறை அவரை நோக்கி, “ஸிலாவே! இக்கலிமா தான் அவர்களை நரகிலிருந்து ஈடேற்றம் பெறச் செய்யும்’’ என்று கூறினார்கள். (முஸ்தத் ரக் ஹாகிம்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

8.நரகிலிருந்து ஈடேற்றம் பெறச் செய்யும் கலிமா

0:00 1:20

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 10, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.