Skip to content
9.எண்ணத்துக்குரிய கூலி episode artwork

Mar 10, 2022 2 min

9.எண்ணத்துக்குரிய கூலி

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் ٩- عَنْ اَبِيْ كَبْشَةَ اْلاَنْمَارِيِّ ؓ اَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: ثَلاَثٌ اُقْسِمُ عَلَيْهِنَّ وَاُحَدِّثُكُمْ حَدِيْثًا فَاحْفَظُوْهُ، قَالَ: مَا نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ، وَلاَ ظُلِمَ عَبْدٌ مَظْلَمَةً صَبَرَ عَلَيْهَا اِلاَّ زَادَهُ اللهُ عِزًّا، وَلاَ فَتَحَ عَبْدٌ بَابَ مَسْئَلَةٍ اِلاَّ فَتَحَ اللهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ - اَوْ كَلِمَةً نَحْوَهَا - وَاُحَدِّثُكُمْ حَدِيْثًا فَاحْفَظُوْهُ، قَالَ: اِنَّمَا الدُّنْيَا لِأَرْبَعَةِ نَفَرٍ: عَبْدٍ رَزَقَهُ اللهُ مَالاً وَعِلْمًا فَهُوَ يَتَّقِيْ رَبَّهُ فِيْهِ وَيَصِلُ بِهِ رَحِمَهُ وَيَعْلَمُ لِلّهِ فِيْهِ حَقًّا فَهذَا بِأَفْضَلِ الْمَنَازِلِ. وَعَبْدٍ رَزَقَهُ اللهُ عِلْمًا وَلَمْ يَرْزُقْهُ مَالاً فَهُوَ صَادِقُ النِّيَّةِ، يَقُوْلُ: لَوْ اَنَّ لِيْ مَالاً لَعَمِلْتُ فِيْهِ بِعَمَلِ فُلاَنٍ فَهُوَ بِنِيَّتِهِ فَاَجْرُهُمَا سَوَاءٌ، وَعَبْدٍ رَزَقَهُ اللهُ مَالاً وَلَمْ يَرْزُقْهُ عِلْمًا فَهُوَ يَخْبِطُ فِيْ مَالِهِ بِغَيْرِ عِلْمٍ لاَ يَتَّقِيْ فِيْهِ رَبَّهُ وَلاَ يَصِلُ فِيْهِ رَحِمَهُ، وَلاَ يَعْلَمُ لِلّهِ فِيْهِ حَقًّا فَهذَا بَأَخْبَثِ الْمَنَازِلِ، وَعَبْدٍ لَمْ يَرْزُقْهُ اللهُ مَالاً وَلاَ عِلْمًا فَهُوَ يَقُوْلُ: لَوْ اَنَّ لِيَ مَالاً لَعَمِلْتُ فِيْهِ بِعَمَلِ فُلاَنٍ فَهُوَ بِنِيَّتِهِ فَوِزْرُهُمَا سَواَءٌ. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء مثل الدنيا مثل أربعة نفر، رقم:٢٣٢٥ 9. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூகப்ஷா அன்மாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் சத்தியமிட்டு மூன்று காரியங்களைக் கூறுகிறேன். அதற்குப் பிறகு இன்னோரு செய்தியையும் குறிப்பாக உனக்குக் கூறுவேன். அதை நல்ல முறையில் பாதுகாத்துக்கொள்ளவும். (நான் சத்தியமிட்டுக் கூறும் மூன்று காரியங்களில் முதலாவது) ஓர் அடியானின் பொருள், தர்மம் செய்வதால் குறைந்து போவதில்லை. (இரண்டாவது) அநீதம் செய்யப்பட்டவர் பொறுமை மேற்கொண்டால் அல்லாஹுதஆலா அந்தப் பொறுமையின் காரணமாக அவரது கண்ணியத்தை உயர்த்துகிறான். (மூன்றாவது) யார் மக்களிடம் யாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்வாரோ, அல்லாஹுதஆலா அவருக்கு வறுமையின் வாசலைத் திறந்து விடுவான்''. பிறகு, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு செய்தியைக் கூறுகிறேன் நினைவில் வைப்பீராக, உலகில் நான்குவிதமான மனிதர்கள் உள்ளனர். முதலாம் வகை மனிதர், அல்லாஹுதஆலா பொருளையும், மார்க்கக் கல்வியையும் அவருக்கு கொடுத்திருந்தான். (தனது கல்வியால்) தன்னுடைய பொருளை, (அல்லாஹுதஆலாவுக்குப் பொருத்தமான வழியில் செலவழிக்கிறேனா? இல்லையா?) உறவு முறையைப் பேணுவதில் செலவு செய்கிறேனா? இல்லையா? (என்பதில்) அல்லாஹுதஆலாவை பயப்படுகிறார். இந்த செல்வத்தில் அல்லாஹுதஆலாவுக்குரிய கடமை உள்ளது என்பதையும் அறிந்திருக்கிறார். (அதனால் செல்வத்தை நல்ல வழிகளில் செலவு செய்கிறார்) இவர் கியாமத் நாளன்று மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார். இரண்டாம் வகை மனிதர், அவருக்கு அல்லாஹுதஆலா மார்க்க ஞானத்தைக் கொடுத்து செல்வத்தைக் கொடுக்கவில்லை. அவர் உண்மையான எண்ணமுள்ளவராக இருக்கிறார். மேலும், அவர் தனக்கும் செல்வம் கிடைத்திருந்தால் தானும் இன்னாரைப் போன்று (நல்ல வழிகளில்) செலவழிப்பேன்' என்று ஆசைப்படுகிறார். அதனால் (அல்லாஹுதஆலா) அவருடைய நல்ல எண்ணத்தின் காரணமாக (முந்தியவரைப் போல் இவருக்கும் நன்மை கொடுக்கிறான்) இவ்வாறு இவ்விருவருடைய நன்மையும் சமமாகிவிடுகிறது. மூன்றாம் வகை மனிதர், அவருக்கு அல்லாஹுதஆலா செல்வத்தை கொடுத்திருந்தான். ஆனால், மார்க்க ஞானத்தைக் கொடுக்கவில்லை. அவர் அறிவீனத்தால் தனது செல்வத்தை தவறான முறையில் (வீண்) செலவு செய்துவிடுகிறார். அவர் தனது செல்வத்தைப் பற்றி அல்லாஹுதஆலாவையும் அஞ்சுவதில்லை. உறவு முறைகளை பேணுவதுமில்லை. இந்தப் பொருளில் அல்லாஹுதஆலாவுக்குரிய கடமை என்னவென்பதை அறியவுமில்லை. இவர் கியாமத் நாளன்று மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பார். நான்காம் வகை மனிதர், இவருக்கு அல்லாஹுதஆலா செல்வமும் அளிக்கவில்லை, மார்க்க ஞானத்தையும் அளிக்கவில்லை. என்னிடம் பொருள் இருந்தால் தானும் இன்னாரைப் போல் (மூன்றாம் வகை மனிதரைப் போல்) வீண் செலவு செய்திருப்பேனே!' என்று ஆசைப்படுகிறார், இவர் இவருடைய தீய எண்ணத்தின் காரணமாக தண்டிக்கப்படுவார். மேலும், இவரும் மூன்றாம் வகை மனிதரும் பாவத்தில் சரிசமமாவர். (நல்ல செயலுக்குரிய கூலியைப் போன்று நல்ல எண்ணத்துக்கு கூலியும் தீய செயலுக்குரிய தண்டனையைப் போன்று தீய எண்ணத்துக்குரிய தண்டனையும் கிடைக்கும் என்பதாம்). (திர்மிதீ)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

9.எண்ணத்துக்குரிய கூலி

0:00 2:55

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 2 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 10, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.