9.கைபர் போர் அடிமைகள்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தொழுகை - ஃபர்ளான தொழுகைகள் ٩- عَنْ أَبِي أُمَامَةَ ؓ أَنَّ النَّبِيَّ ﷺ أَقْبَلَ مِنْ خَيْبَرَ وَمَعَهُ غُلاَمَانِ فَقَالَ عَلِيٌّ: يَا رَسُولَ اللهِﷺ أَخْدِمْنَا قَالَ: خُذْ أَيَّهُمَا شِئْتَ قَالَ: خِرْ لِي قَالَ: خُذْ هذَا وَلاَ تَضْرِبْهُ فَإِنِّي قَدْ رَأَيْتُهُ يُصَلِّي مَقْفِلَنَا مِنْ خَيْبَرَ وَإِنِّي قَدْ نُهِيتُ عَنْ ضَرْبِ أَهْلِ الصَّلوةِ. (وهو بعض الحديث) رواه احمد والطبراني مجمع الزوائد:٤ /٤٣٣ 9. ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கைபர் போர் முடிந்து திரும்பி வந்தார்கள். அன்னாருடன் அடிமைகள் இருவர் இருந்தனர், ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள், யாரஸூலல்லாஹ்! எங்களுக்குப் பணிவிடை செய்ய ஓர் அடிமையைத் தாருங்கள்!' என்று வேண்டினார்கள், இவ்விருவரில் நீர் விரும்பியவரை எடுத்துக்கொள்வீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். தாங்களே தேர்ந்தெடுத்துத் தாருங்கள்'' என்று ஹஜ்ரத் அலீ (ரலி) கூற, நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரில் ஒருவரின் பக்கம் சைகை செய்து, இவரை எடுத்துக் கொள்வீராக! ஆனால், இவரை அடிக்காதீர், ஏனேனில் கைபரிலிருந்து திரும்பிவரும் போது இவர் தொழக் கண்டேன், தொழுகையாளிகளை அடிப்பதை எனக்கு விலக்கப்பட்டுள்ளது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத், தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
Embed this episode
No transcript yet.