EPISODE · Jul 26, 2026 · 37 MIN
காட்சிப்பொருள் x உளவியல்: "தி ஒடிசி” கலந்துரையாடல் - குரு (எ) சுப்புடு, ஹேம்ந்த், பாஸ்டன் பாலா
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
யூடியுப்: https://www.youtube.com/@UCEk2q9JZIE7Y6ACZGy87ieQ இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os ஒவ்வொரு நாகரிகத்திற்கும் இறக்க மறுக்கும் ஒரு கதை இருக்கிறது. கிரேக்கத்திற்கு அது ஒடிசி. இந்தியாவிற்கு அது இராமாயணமும் மகாபாரதமும். கிறிஸ்டோஃபர் நோலன் ஹோமரின் காவியத்தை வெறுமனே திரைவடிவமாக்கவில்லை. காலமற்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார்: 1. போருக்குப் பின் ஒரு வீரன் உண்மையிலேயே வீடு திரும்ப முடியுமா? 2. மிகப்பெரிய வெற்றி என்பது போரில் வெல்வதா அல்லது தன்னிலை மாறாமல் வீடு திரும்புவதா?3. நினைவே அடையாளத்தை வரையறுக்கிறதா?இந்தத் திரைப்படத்தையும், புராணத்தையும், தத்துவத்தையும், 2,700 ஆண்டுகள் பழமையான ஒரு கதை இன்னும் ஏன் திடுக்கிடும் அளவு நவீனமாகத் தோன்றுகிறது என்பதையும் ஆராய்கிறோம்.இது இரு பெரும் ஜாம்பவான் விமர்சகர்களை ஒருங்கிணைக்கிறது.லேஸிகீக் என்றறியப்படும் குரு என்கிற சுப்புடு.இன்னொருவர் ஸ்டாண்டப் முதல் பேசும் படம் வரை எங்கும் கலக்கும் நைஸ் கய் ஹேமந்த். யுலிசஸ்: வஞ்சனை மனமும் பொறுமையும் புனைவாற்றலும் தகவமைப்புத் திறன் கொண்ட சிந்தையும் பெரிய ஆயுதமாகக் கொண்ட வீரன். வீடு திரும்புவதற்கு ஒரு மனிதன் எவ்வளவு விலை கொடுக்க வேண்டும்?மனைவியை வெல்ல ராமனும் வில்லை வளைக்க வேண்டியிருந்தது; தன் விதியை ஆண்கள் தீர்மானிக்கும்போது சீதையும் தனியாகக் காத்திருக்க வேண்டியிருந்தது; பெனிலோப்பி வரன்களால் கஷ்டப்பட்டாள் என்று நினைத்தால், திரௌபதியையும் நினைத்துப் பாருங்கள்!நோலன் காலத்தை வைத்து விளையாடுவதில் புகழ்பெற்றவர், 'த ஒடிஸி' அவருக்கான விளையாட்டு மைதானமாக அமைகிறது. இருபதாண்டு இடைவெளியை — ஒடிசியஸின் பத்தாண்டு போரும் கடலில் தொலைந்த பத்தாண்டுகளும் — திரைப்படம் எப்படிக் கையாள்கிறது + நினைவு எப்படி கதாபாத்திரங்களுக்கு ஆயுதமாகவும் பலவீனமாகவும் மாறுகிறது என பலவற்றை வல்லுநர்கள் விவாதிக்கிறார்கள்.நீங்களும் நானும் கேட்போம் + அறிவோம்.
Embed this episode
NOW PLAYING
காட்சிப்பொருள் x உளவியல்: "தி ஒடிசி” கலந்துரையாடல் - குரு (எ) சுப்புடு, ஹேம்ந்த், பாஸ்டன் பாலா
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.