EPISODE · Sep 11, 2025 · 30 MIN
கைவல்ய நவநீதம் -10
from Atmanandalahari · host atmanandalahari
அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே. தேஹம் வேறு - தேஹி வேறு என்ற அறிவு . உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா. இதை உணர்த்த நாள் தோறும் அனுபவிக்கும் மூன்று அவஸ்தை நிலைகளை உதாரணமாக விளக்குகிறார். விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை இதை உடலுக்கு வேறாக ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே உணரமுடிகிறது
What this episode covers
பாடல் :14 என்னைத்தான் சடனா உள்ளத் தெண்ணியோ சொன்னீர் ஐயா, தன்னைத்தான் அறியா மாந்தர் தரணியில் ஒருவர் உண்டோ, பின்னைத்தான் அவர்கள் எல்லாம் பிறந்திறந் துழலு வானேன், நின்னைத்தான் நம்பி னேற்கு நிண்ணயம் அருளு வீரே. பாடல் :15 இன்னது தேகம் தேகி இவன் என உணர்வான் யாவன், அன்னவன் தன்னைத் தான் என் றறிந்தவன் ஆகும் என்றார், சொன்னபின் தேகி யார்இத் தூலம் அல்லாமல் என்றான், பின்னது கேட்ட ஐயர் பீழையும் நகையும் கொண்டார். பாடல் :16 தேகம் அல்லாமல் வேறே தேகியார் காணேன் என்றாய், மோகமாம் கனவில் வந்து முளைத்தவன் எவன்நீ சொல்வாய், சோகமாம் கனவு தோன்றாச் சுழுத்திகண் டவன் ஆர் சொல்வாய், ஆகநீ நனவில் எண்ணும் அறிவு தான் ஏது சொல்வாய்.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -10
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.