EPISODE · Dec 5, 2025 · 39 MIN
கைவல்ய நவநீதம் 16
from Atmanandalahari · host atmanandalahari
கைவல்ய நவநீதம் அத்யாரோபம் செய்து உலகம் உருவான விதம் சொல்லி, அபவாதம் செய்து , உலகம் பொய் எல்லாம் மாயை என்று எடுத்து சொல்லி ப்ரம்மம் ஒன்றே சத்யம் என்று நிரூபணம் செய்யப்படுகிறது வேதாந்த வில்லு பாட்டு ப்ரம்மம் ப்ரம்மம் என்று ஒன்று உண்டாம் ஆமாம் அது மாயை என்ற சக்தியை பார்த்துதாம் ஆமாம் மாயைக்கு மூணு குணம் உண்டாம் ஆமாம் அந்த மாயை என்பதே ஒரு மாயை ஆமாம் ஜகத் என்பது மித்யா ஆமாம் ப்ரம்மம் மட்டுமே சத்யம் ஆமாம்
What this episode covers
பாடல் : 36 சீரிய ஈச னார்க்கும் சீவர்க்கும் உபாதி ஒன்றேல், ஆரிய குருவே பேதம் அறிவதெப்படி என்றக்கால், காரிய உபாதி சீவன் காரண உபாதி ஈசன், வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே. பாடல்: 37 மரங்கள் போல் வியட்டி பேதம் வனமெனல் சமட்டி பேதம், சரங்கள்தா வரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார், பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார், இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே. பாடல் : 38 கற்பனை வந்த வாறு காட்டினோம் காண்ப எல்லாம், சொற்பனம் போலும் என்றே துணிந்தவன் ஞானி ஆவான், செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்த ஆ காசம் போல, அற்புத முத்தி சேரும் அபவாத வழியும் கேளாய். பாடல் : 39 அரவன்று கயிறென் றாற்போல் ஆளன்று தறிஎன் றாற்போல், குரவன்சொல் உபதே சத்தால் கூறுநூல் ஒளியைக் கொண்டு, புரமன்று புவன மன்று பூதங்க ளன்று ஞானத், திரமென்னும் பிரம மென்று தெளிவதே அபவா தம்காண். பாடல் : 40 படமும்நூ லும்போல் செய்த பணியும் பொன் னும்போல் பார்க்கின், கடமும்மண் ணும்போல் ஒன்றாம் காரிய கார ணங்கள், உடல்முதல் சுபாவம் ஈறா ஒன்றில்ஒன் றுதித்த ஆறே, அடைவினில் ஒடுக்கிக் காண்ப தபவாத உபாயம் ஆமே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் 16
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.