EPISODE · Dec 20, 2025 · 39 MIN
கைவல்ய நவநீதம் -18
from Atmanandalahari · host atmanandalahari
நடக்காததை நடந்தது போல் காட்டும் இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும் இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும் இருப்பை வைத்தே இயங்கி நிற்கும் அநாதி காலமாய் ஆழிமழை பொழியும் ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய் மாயை என்பதே மாயை எனஅறிவாய் எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்! சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்!
What this episode covers
பாடல் : 46 கேவல நிலைதோன் றாமல் கெடுத்தது பஞ்ச கோசம், சீவனும் சகத்தும் ஆகிச் செனித்தவிட் சேபம் அன்றோ, ஆவர ணம்தா னேபாழ் அனர்த்தம்என் றுரைத்த தேதோ, மேவரும் குருவே என்று வினாவிடின் மகனே கேளாய். பாடல் : 47 தோற்றமாம் சத்தி தானும் துன்பமாம் பவமா னாலும், ஆற்றலால் முத்தி சேர்வார்க் கனுகூலம் ஆகும் காண்நீ, ஊற்றமாம் பகற்கா லம்போல் உபகாரம் நிசியால் உண்டோ, மாற்றம்என் உரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல் லாதே. பாடல் : 48 சுழுத்தியில் பிரள யத்தில் தோற்றம் ஆம் சகங்கள் மாண்டும், அழுத்திய பவம்போய் முத்தி அடைந்தவர் ஒருவர் உண்டோ, முழுத்தவிட் சேபம் எல்லாம் முத்தியில் கூட்டு கிற்கும், கொழுத்த ஆ வரணம் முத்தி கூடாமல் கெடுத்த கேடே. பாடல் : 49 சுத்தியில் வெள்ளி போலத் தோன்றிய தோற்றம் ஆன, சத்தியும் பொய்யே என்றால் சத்திசா தனமா வந்த, முத்தியும் பொய்யாம் என்னின் மோகநித் திரைவி லங்கால், நித்திரை தெளியு மாபோல் நிருவாண நிலைமெய் யாமே. பாடல் : 50 இம்பரில் நஞ்சை நஞ்சால் இரும்பினை இரும்பால் எய்யும், அம்பினை அம்பால் பற்றும் அழுக்கினை அழுக்கால் மாய்ப்பர், வம்பியல் மாயை தன்னை மாயையால் மாய்ப்பர் பின்னைத், தம்பமாம் அதுவும் கூடச் சவம்சுடு தடிபோல் போமே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -18
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.