EPISODE · Jan 17, 2026 · 35 MIN
கைவல்ய நவநீதம் -20
from Atmanandalahari · host atmanandalahari
ஜீவனுக்கு 7 அவஸ்தைகள் 1. அஞ்ஞானம், 2. மூடல் என்ற ஆவரணம், 3. முளைத்தல் தோற்றம் என்ற விக்ஷேபம், 4. காணாத ஞானம் பரோக்ஷ ஞானம், 5. சந்ததம் கண்ட ஞானம் அபரோக்ஷ ஞானம், 6. தழல்கெடல் - சோக நிவிர்த்தி, 7. குளிர்மை ஆதல் -குறைவிலா நிறைவு (திருப்தி)
What this episode covers
பாடல் : 51 இந்தமா யையினால் சீவர்க் கேழவத் தைகளுண் டாகும், அந்தவே ழவத்தை தம்மை அடைவினின் மொழியக் கேளாய், முந்தவஞ் ஞானம் மூடல் முளைத்தல்கா ணாத ஞானம், சந்ததம் கண்ட ஞானம் தழல்கெடல் குளிர்மை ஆதல். பாடல் : 52 பிரமமாம் தனைம றந்த பேதைமை யே அஞ் ஞானம், பரன் இலை காணோம் என்று பகர்தல் ஆவரணம் மூடல், நரனொரு கருத்தால் சீவன் நானென முளைத்தல் தோற்றம், குரவன்வாக் கியத்தால் தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம். பாடல் : 53 தத்துவ விசாரம் செய்து சகலசந் தேக மும்போய், அத்துவி தம்தான் ஆதல் அபரோட்ச ஞானம் ஆகும், கர்த்தனாம் சீவ பேதம் கழிவதே துக்கம் போதல், முத்தனாய் எல்லாம் செய்து முடிந்ததா நந்தம் ஆமே. பாடல் : 54 இதுநினக் கறியும் வண்ணம் இப்படி ஒருதிட் டாந்தம், புதுமையாம் கதைகேள் பத்துப் புருடர்ஓர் ஆற்றை நீந்தி, உதகதீ ரத்தில் ஏறியொருவன் ஒன் பதுபேர் எண்ணி, அதனொடு தசமன் தான்என் றறியாமல் மயங்கி நின்றான். பாடல் : 55 அறியாத மயலஞ் ஞானம் அவனிலை காணோம் என்றல், பிறியாஆ வரணம் ஆகும் பீழைகொண் டழல்விட் சேபம், நெறியாளன் தசமன் உண்டு நிற்கின்றான் என்ற சொல்லைக், குறியாக எண்ணி நெஞ்சில் கொள்வது பரோட்ச ஞானம்.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -20
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.