EPISODE · Feb 8, 2026 · 40 MIN
கைவல்ய நவநீதம்-23
from Atmanandalahari · host atmanandalahari
ஆத்மா ஸ்வயம் பிரகாசம் ஆத்மா அனுபவ வஸ்து ஆத்மா சாட்சி மூலம் ஆத்மா அறிவு ஸ்வரூபம் ஆத்மா ஆனந்த வடிவம் லட்சணம் மூன்று விதங்கள் - விட்ட லட்சணம் , விடாத லட்சணம் , விட்டு விடாத லட்சணம் இதில் விட்டு விடாத லட்சணம் மூலம் தத் த்வம் அசி என்பது புரியும்
What this episode covers
பாடல் : 66 எல்லாம்கண் டறியும் என்னை ஏதுகொண் டறிவேன் என்று, சொல்லாதே சுயமாம் சோதிச் சுடருக்குச் சுடர்வே றுண்டோ, பல்லார்முன் தசமன் தன்னைப் பார்த்தலும் தனைக்கொண் டேதான், அல்லாமல் பதினொன் றானும் அவனிடத் துண்டோ பாராய். பாடல் : 67 அறிவுக்கும் அறிவு செய்யும் அறிவுவேறு உண்டென் றெண்ணும், அறிவற்ற குதர்க்க மூடர்க் கனவத்தை பலமாய்த் தீரும், அறிபடும் பொருள்நீ அல்லை அறிபடாப் பொருள்நீ அல்லை, அறிபொருள் ஆகும் உன்னை அனுபவித்து அறிவாய் நீயே. பாடல் : 68 மதுரமாம் கட்டி சுட்ட மாப்பணி யாரம் எல்லாம், மதுரமாக் கியஅ தற்கு மதுரம்தான் சுபாவம் அன்றோ, அதுவிது எனும்ச டங்கள் அறிவாக அறிவைத் தந்தே, அதுவிது இரண்டும் ஆகா அகம்பொருள் அறிவாய் நீயே. பாடல் : 69 இந்தநீ துவம்ப தத்தின் இலட்சியப் பொருளாம் என்றும், பந்தமில் பிரம மேதற் பதந்தனின் இலட்சி யார்த்தம், அந்தமாம் சீவன் ஈசன் அவர்களே வாச்சி யார்த்தம், சந்ததம் பேதம் ஆவார் தமக்கயிக் கியங்கூ டாதே. பாடல் : 70 பேதம்ஆ னதுவும் கேளாய் பெயராலும் இடங்க ளாலும், ஓதரும் உபாதி யாலும் உடலாலும் உணர்வி னாலும், பாதலம் விசுவம் போலப் பலதூரம் அகன்று நிற்பர், ஆதலால் இவர்க்கெந் நாளும் அயிக்யமென் பதுகூ டாதே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம்-23
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.