EPISODE · Mar 5, 2026 · 39 MIN
கைவல்ய நவநீதம்-27
from Atmanandalahari · host atmanandalahari
எத்தனை நாள் வேதாந்தம் கேட்க வேண்டும்? அந்தக்கரணமும் அந்தக்கரண விருத்தியும் இருக்கும் வரை ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் தொடரவேண்டும் . ஸ்ரவணம்- சாஸ்திர தாத்பர்யம் - கவனமாய் கேட்டல் மனனம்- தாத்பர்யத்தை யுக்தி பூர்வமாக சிந்தித்தல் - நிதித்யாஸனம் - சிந்தித்த விழையாததற்கு தியானம் செய்வது ஜீவன் புத்தி நிவர்த்தியே - நிர்வாணம் தனித்தன்மை உண்மை என்பது அடியோடு நீங்குவதே - மோட்சம் ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர். பிரம்ம வித் வரன் -பிரம்மவித்துக்களில் சிறந்தவன் வரியான் பிரம்மவித்துக்களில் சிறந்தவர்களுள் சிறந்தவன் வரிஷ்டன்பிரம்மவித்துக்களில் சிறந்தவர்களுள் சிறந்தவர்களுள் சிறந்தவன் இந்த தாரதம்யம் வியவகாரத்தில் தான். ஞானத்தில் தாரதம்யம் இல்லை .
What this episode covers
பாடல் : 86 எத்தனை நாள்ஞா தாவும் ஞானமும் இருக்கும் உன்பால், அத்தனை நாளும் வேண்டும் அப்பால்ஓர் செயலும் வேண்டா, நித்தமும் வெளிபோல் பற்றா ஞேயம்மாத் திரமாய்ச் சீவன், முத்தர்ஆ னவர்வி தேக முத்திபெற் றிருப்பார் என்றும். பாடல் : 87 ஞானமார் ஜீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய், வான்நிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன், ஆனவர் நாமமும் ஆகும் அவர்களில் பிரம வித்தின், தானமும் மற்றை மூவர் தாரதம் மியமும் சொல்வேன். பாடல் : 88 தீரராய்ப் பிரம வித்தாய்த் தெளிந்தவர் தெளியு முன்னம், வாரமாய் இருந்த தங்கள் வருணமாச் சிரமம் சொன்ன, பாரகா ரியமா னாலும் பலர்க்குப கார மாக, நேரதாச் செய்வர் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர். பாடல் : 89 காமமா திகள்வந் தாலும் கணத்தில்போம் மனத்தில் பற்றார், தாமரை இலைத்தண் ணீர்போல் சகத்தொடும் கூடி வாழ்வார், பாமரர் எனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார், ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர். பாடல் : 90 புறவாழ்க்கை பேதகர் மத்தால் வந்த பிரா ரத்தம் நாநா வாகும், ஆதலால் விவகா ரங்கள் அவரவர்க் காவ வாகும், மாதவம் செயினும் செய்வார் வாணிபம் செயினும் செய்வார், பூதலம் புரப்பார் ஐயம் புகுந்துண்பார் சீவன் முத்தர்.
NOW PLAYING
கைவல்ய நவநீதம்-27
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.