EPISODE · Mar 12, 2026 · 38 MIN
கைவல்ய நவநீதம்- 28
from Atmanandalahari · host atmanandalahari
கடந்த காலத்தை நினைக்க மாட்டார், நாளை வருவதைப் பற்றியும் நினைக்க மாட்டார். நிகழ்காலத்தில் கண்முன்னே வரும் வினைப்பயன்களை ஏற்றுக் கொண்டு அனுபவிப்பார். வரன், வரியான், வரிஷ்டன்- சமாதியோகத்தில் பொருத்தியிருப்பார்கள். பிராரப்த வலிமையினால் சமாதியிலிருந்து தானே விழித்தெழுபவன் வரன். உடல் இருப்பதற்கு இன்றியமையாத உணவு உண்பான் அருகிலுள்ள சீடர் முதலியோரால் எழுப்பப்பட்டு சமாதியினின்று எழுபவன் வரியான் ஆகும். பிறராலோ, தானாகவோ சமாதி கலையாதவன், வரிஷ்டன் ஆவான்.
What this episode covers
பாடல் : 91 அகவாழ்க்கை சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன், நின்றது புசிப்பார் வெய்யில் நிலவாய்விண் விழுது வீழ்ந்து பொன்றின சவம்வாழ்ந் தாலும் புதுமையா ஒன்றும் பாரார், நன்றுதீது என்னார் சாட்சி நடுவான சீவன் முத்தர். பாடல் : 92 பின்னைமூ வரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம், தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தம் தானாய், உன்னுவோன் வரன்வேற் றோரால் உணர்பவன் வரியா னாகும், அன்னியர் தம்மால் தன்னால் அறியாதோன் வரிட்ட னாமே. பாடல் : 93 அரிதாகு மிவர்க ளிவ்வாறு அநேக ரானாலு முத்தி, சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால், பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன், வரியானும் வரனு மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார். பாடல் : 94 பிரமஞா னிகளும் கர்மப் பேதையர் போலே வாழ்ந்தால், திரமுறும் அஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியே தென்றால், பரவுமா காசம் ஒன்றில் பற்றாது மற்றை நாலும், விரவின தோடும் கூடும் விதமிரு வோரும் ஆவார். பாடல் : 95 சீவன்முத் தரைச்சே வித்தோர் சிவன் அயன் நெடுமா லான, மூவரும் மகிழ நோன்பு முழுவதும் செய்து சன்ம, பாவன மானா ரென்று பழமறை முழங்கு மிப்பால், மேவரும் சீவன் முத்தர் விதேகமுத் தியும்நீ கேளாய்
NOW PLAYING
கைவல்ய நவநீதம்- 28
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.