EPISODE · Apr 11, 2022 · 2 MIN
கொடுப்பதும் எடுப்பதும் இறைவன் ஒருவனே
from saitechinfo · host saitechinfo
கொடுப்பதும் எடுப்பதும் அந்த இறைவன் ஒருவனே! அவன் தன் விருப்பப்படி கொடுக்கிறான், எடுத்துக்கொள்ளவும் செய்கிறான். அனைத்தும் அவனுடையதே. எனவே, அவனுக்குச் சொந்தமான பொருட்களை அவன் திருப்பி எடுத்துக் கொள்ளும்போது, அதற்காகப் புலம்புவது எவ்வளவு முட்டாள்தனம்! எனவே, ஒரு புத்திசாலி மனிதன் எவருக்காகவும் ஏங்குவதுமில்லை, எதன் மீதும் தேவையற்ற பற்றும் கொண்டிருப்பதில்லை. அனைத்து ஏக்கமும், பற்றுதலும் இறைவனுக்காகவே இருக்கட்டும்; அவன் மட்டுமே நிரந்தரமானவன், அனைத்து ஆனந்தத்தின் மூலாதாரமும் அவனே. மற்றவற்றைப் பொறுத்தவரை, ஒரு பொருளை பொருளாக நேசியுங்கள், அதற்கு மேல் அல்ல. ஒரு மனிதனை மனிதனாக நேசியுங்கள், அதற்கு மேல் அல்ல. நீங்கள் அவர்களை அதிகமாக நேசிப்பீர்களானால், அதுவே அவர்களின் உண்மைத்தன்மையைப் பற்றி அறியாமல் நீங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்! நீங்கள் வாடகைக்கு எடுத்த வீடு உங்களுக்கே சொந்தம் என்று கொஞ்ச காலத்திற்குத்தான் கொண்டாட முடியும்! அந்த காலம் முடிந்தவுடன், அது வேறு ஒருவருக்கு சென்றுவிடுகிறது! இந்தக் கோணத்தில் நீங்கள் சிந்தித்தால், மனைவி, மக்கள், உடைமைகள், உற்றார், உறவினர்கள் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு உரியவை அல்ல, குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எனவே, இந்த நிலையற்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட்டு ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்? ~பாபா ~
What this episode covers

NOW PLAYING
கொடுப்பதும் எடுப்பதும் இறைவன் ஒருவனே
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.