Skip to content
கரடி சொன்ன இரகசியம் - 31வது கதை episode artwork

Feb 24, 2021 1 min

கரடி சொன்ன இரகசியம் - 31வது கதை

from Kathai Solli Hosted by Kathai Solli

கரடி சொன்ன இரகசியம் அடர்ந்த காட்டு வழியே இரண்டு நண்பர்கள் நடந்துபோய்க் கொண்டிருந்தனர். திடீரென்று பெரிய கரடி ஒன்று எதிரே வருவதைப் பார்த்தனர். ஏய்! கரடி! கரடி! ஓடு! ஓடு! இருவரும் ஓட்டம் பிடித்தனர். ஓடும்போது கால் இடறி ஒருவன் மட்டும் கீழே விழுந்துவிட, மற்றவன் ஓடி மரத்தில் ஏறிக்கொண்டான். “டேய்! கால்ல அடிபட்டுருச்சுடா.. வந்து தூக்கிவிடுறா..” என்று விழுந்தவன் உதவி கேட்டான். மரத்தில் தொற்றிக்கொண்டிருந்தவன் உடனே, “எதுக்கு? கரடி வந்து என்னையுங் கடிக்கிறதுக்கா? போடா..” என்று, நண்பனுக்கு உதவாமல் தான் தப்பித்துக்கொண்டால் போதும் என்று மரத்திலேயே இருந்துவிட்டான். கரடி நெருங்கி வருவதைக்கண்டு, கீழே விழுந்தவன், மூச்சைப் பிடித்துக்கொண்டு பிணம் போலப் படுத்துக்கொண்டான். கரடி அவன் முகத்தருகே வந்து முகர்ந்து பார்த்தது. அவன் அசைவற்றுக் கிடக்கவே, வந்த வழியே போய்விட்டது. கரடி தூரப் போய்விட்டதா என்று எட்டிப் பார்த்துவிட்டு மரத்திலிருந்து இறங்கினான் மற்றவன். கீழே விழுந்தவன் மெல்லக் கையூன்றி எழுந்துகொண்டிருக்கையில், அவன் வந்து “என்ன? கரடி வந்து உன் காதுல எதோ சொன்னமாதிரி இருந்துச்சு!” என்று கேட்டான். “ஆமாண்டா, சொல்லுச்சு! கஷ்டம் வரும்போது காப்பாத்தாதவன்லாம் நண்பனே இல்லன்னு சொல்லுச்சு” என்றான் கோபமாக. --- கதை மூலம்: Tinkle #004

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கரடி சொன்ன இரகசியம் - 31வது கதை

0:00 1:29

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Aisamma Kadhaigal !! Tamil Short Story For Kids Aisamma Kadhaigal வணக்கம் மக்களே நா சின்ன வயசில கேட்டு ரசித்து படித்து மகிழ்ந்த கதைகளை இப்ப என் குழந்தைகளுக்காக சொல்லும் போது, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. என்னை மாதிரி உங்களுக்கும், உங்க குழந்தைகளுக்கும் இந்த கதைகள் பிடிக்கும்னு நினைக்கிறேன். நீங்க கேக்க நினைக்கிற கதைகளையும் உங்க கருத்துக்களையும் முக்கியமா உங்க சுட்டி குட்டீஸ் என்ன சொல்றாங்கனும் கண்டிப்பா சொல்லுங்க... நா சொல்ற விதத்துல குறை இருந்தாலும் பதிவு பண்ணுங்க. அது என்னை இன்னும் மேம்படுத்த உதவும்.அன்புடன்ஐஸாம்மாrhymes #பாடல்கள் #பாட்டு #சிறுவர்#tales #story #kidsstories #kathaigal #kadhaigal #kathai #kadhai #kadai #கதை #கதைகள் Kathai Kelunga A podcast to explore Indian stories in both Tamil & English for children Tamil Stories - Kathai Arasan - A Tamil Podcast | கதை அரசன் Kathai Arasan I'm a Tamil story teller Kathai Arasan. A Tamil Podcast. Here we have all kind of Tamil stories. Short story in Tamil, Bedtime story in Tamil, Kid's story in Tamil, History related stories in Tamil. Usually grandmother will tell stories to put the kids in sleep. These stories are of that kind. Kathai for Kutties Neeraja Moral stories for kids

Frequently asked questions

How long is this episode of Kathai Solli?

This episode is 1 minute long.

When was this Kathai Solli episode published?

This episode was published on February 24, 2021.

Can I download this Kathai Solli episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.