EPISODE · Mar 11, 2023 · 5 MIN
கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள்: வ. ஸ்ரீநிவாசன் – மன்னா டே: Va Srinivasan on Manna Dey: ஹிந்தி இசையமைப்பாளர் சங்கீத் சாம்ராட் மன்னாதே: ஒலி: ஜமீலா ஜி / Voice: Jameela G
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
ரஃபி, முகேஷ், கிஷோர்குமார் போன்ற சமகால பின்னணிப் பாடகர்களை விட மூத்தவர். 94 வயதுகள் நிறை வாழ்வு வாழ்ந்தவர். ஓரளவுக்கு ஒழுக்கமான வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடித்திருப்பார் என நினைக்கிறேன். கடைசிவரை அவர் ரெகார்ட் செய்த பாடல்களில்கூட அவர் குரலில் தொய்வு வெளிப்பட்டதில்லை. கால்பந்து வீரராகவேண்டும் என்ற குறிக்கோள் மாறி அவரைப் பாடகராக்கியது தாய்மாமனின் இசைத்தாக்கம்தான். பள்ளி இசைவிழாவின் 12 பிரிவு போட்டிகளில் 9 பிரிவுகளில் மன்னா டே முன்னணியில் வென்றது ஒரு திருப்புமுனை. அவரது குடும்பம் எடுத்துக்கொண்ட அக்கறையும் அவரது இசை உலக நுழைவிற்கு பெரிதும் உதவியிருக்கும். இசைதான் வாழ்க்கை என முடிவு செய்தபின் ‘பாம்பே சலோ’. 1942ல் 23 வயதில் சி.ராமசந்த்ரா, எஸ்.டி. பர்மன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். ராமராஜ்யா என்ற புராணப்படத்தில் தாடி வைத்த வயோதிகருக்காக தன் முதல் பாட்டைப் பாடினார். 1950ல் , 31 வயதில் ‘ஊப்பர் ககன் விஷால்’ என்ற பாட்டை ‘மாஷால்” படத்தில் பாடித் தன் திறமையை மக்களுக்கு அடையாளம் காட்டினார். அந்த காலத்தில் முன்னணியில் இருந்த முப்பெரும் நடிகர்களின் இசைக்குரல்கள்: திலீப்குமார் – ரஃபி, தலத் மெஹ்மூத் ராஜ்கபூர் – முகேஷ் தேவ் ஆனந்த் – கிஷோர், ரஃபி, ஹேமந்த் குமார். தொடர்ந்து ஷம்மி கபூர், ஜாய் முகர்ஜி, பிஸ்வஜித், ஷம்மி கபூர்,ராஜேந்த்ர குமார், தர்மேந்த்ரா, ஜிதேந்த்ரா, சஞ்சீவ்குமார், சஞ்சய், ஃபிரோஸ்கான், முதலான அழகான ஆண்முகங்களை வாயசைக்க வைத்தது முஹம்மத் ரஃபிதான்.(இவர்கள் பலருக்கு மன்னா டே ஒரு பாட்டாவது பாடியிருக்கிறார்)
Embed this episode
Ready to play
கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள்: வ. ஸ்ரீநிவாசன் – மன்னா டே: Va Srinivasan on Manna Dey: ஹிந்தி இசையமைப்பாளர் சங்கீத் சாம்ராட் மன்னாதே: ஒலி: ஜமீலா ஜி / Voice: Jameela G
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.