Mapadiyam - Muthal Nootpaa
from Saiva Siddhanta Hosted by suresh babu
முதல் சூத்திரம் அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் என்பது சூத்திரம். வார்த்திகப் பொழிப்பு கருத்துரை : என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரைவகை : இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க. 1. முதல் அதிகரணம் மேற்கோள் : ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்துஎன்றது. ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின் உதாரணம் : பூதாதி ஈறும் முதலும் துணையாக பேதாய்! திதி ஆகும் பெற்றிமையின் - ஓதாரோ ஒன்று ஒன்றின் தோன்றி உளதாய் இறக்கண்டும் அன்றுஎன்றும் உண்டு என்ன ஆய்ந்து 1
Embed this episode
No transcript yet.