ஞானத்தேடல் - Ep 121 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை - (Gnanathedal) episode artwork

EPISODE · Jan 14, 2024 · 13 MIN

ஞானத்தேடல் - Ep 121 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் தில்லை தில்லை என்பதே ஒருவகை மலர். தில்லைமரம் மிகுயாக இருந்த ஊர் ஆதலால் இந்த ஊருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று. தில்லை என்பது இக்காலச் சிதம்பரம். முற்றாத தில்லையும் வாசமு முள்ளு முனையு மெவர் சற்றாகிலுஞ் செய்து வைத்த துண்டோ வன்புஞ்சர்க் குணமும் பெற்றார் பிறவிக் குணங்கா ணதுகண்டு பேதையர்கள் கற்றால் வராது கண்டாய் கச்சி மாநகர்க் காவலனே. - தனிப்பாடல் திரட்டு குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற்றிணை 195/2,3 தில்லை வேலி இவ்வூர் - ஐங்குறுநூறு 131 கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, தில்லை அன்ன புல்லென் சடையோடு, அள்இலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே. புறநானூறு - 252. அவனே இவன்! கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையொடு அள்ளிலைத் தாளி கொய்யுமோனே - புறநானூறு 252 மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல் சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப் பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள் - கலித்தொகை 133 நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம் பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப் போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார். 1.5.93 வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம் கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித் துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 1.5.94 திருக்கோவையார் திருக்கோவையார் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டு அகத்துறை சார்ந்த நூலாக அமைந்துள்ளது. இதனால் இது திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது. இது குறித்து, ‘திருக்கோவையார் இயல்பு’ என்ற நூலின் முகவுரையில் அதன் ஆசிரியர் தை. சி. கனகசபாபதி முதலியார் பின்வருமாறு எழுதுவது சிந்தனைக்குரியது: திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளர்கின்றதே’. சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே’. காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம் ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில் தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 71 மழலை யின்னமுந் தெளிகிலா மைந்த கண் மணியொன் றுழல்க ருங்கொடி யிருந்திடக் கனியுதிர்ந் தாங்குன் சுழல்கொள் விஞ்சையி னன்மையான் மன்னனைத் தொடுத்த தழல வித்தன மென்றுநீ தருக்குறத் தகுமோ. - திருவிளையாடற் புராணம் ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்; ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்; சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே." For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Jan 14, 2024

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 121 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை - (Gnanathedal)

0:00 13:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 13 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on January 14, 2024.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!