ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal) episode artwork

EPISODE · Mar 24, 2024 · 10 MIN

ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் .............. வாழை இருகயல் உண்கண் இளையவளை வேந்தன் தருகென்றால் தன்னையரும் நேரார் - செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால் வாழைக்காய் உப்புறைத்தல் இல். - பழமொழி நானூறு 338 சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து, மயங்கு துயர் உற்ற மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் மா மலைநாடன் கேண்மை காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே. - குறுந்தொகை 308 அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, கடுங் கண் கேழல் உழுத பூழி, நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, சாந்த விறகின் உவித்த புன்கம் கூதளம் கவினிய குளவி முன்றில், செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் பாடுப என்ப பரிசிலர், நாளும் ஈயா மன்னர் நாண, வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. - புறநானூறு 168 மகளிர் கூந்தலின் மயிர்முடிப்பு வாழைப்பூவினது தோற்றம்போலப் பொலிந்து காணப்படுவதை, வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி - சிறுபாணாற்றுப்படை வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் - நற்றிணை 225 பரிசிலர்க்கு வரையாது வழங்கிய வெளிமான் இறந்துபட்டான். அவன் பிரிவினை ஆற்றாது அழும் மகளிர்தம் வளைகள் வாழைப்பூப்போலச் சிதறிவிழுந்ததை, வாழைப் பூவின் வளை முறி சிதற - புறநானூறு 237 புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் குலைவாய் தோயும் கொழு மடல் வாழை அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் செம் முக மந்தி ஆரும் நாட! - நற்றிணை 355 படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் மெல் விரல் மோசை போல, காந்தள் வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப - நற்றிணை 188 குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம். 134 சிலம்பில் போகிய செம் முக வாழை அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் நல் வரை நாடனொடு அருவி ஆடியும் அகநானூறு 302 தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர், கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும், 360 தீம் பல் தாரம் முனையின், சேம்பின் முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். பகற் பெயல் - பெரும்பாணாற்றுப்படை For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Mar 24, 2024

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)

0:00 10:46

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 10 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on March 24, 2024.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!