ஞானத்தேடல் - Ep 38 - ஆணின் பருவங்கள் (Gnanathedal) episode artwork

EPISODE · Mar 27, 2022 · 22 MIN

ஞானத்தேடல் - Ep 38 - ஆணின் பருவங்கள் (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

ஆணின் பருவங்கள் பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...   Stages of Men In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in various types of songs. Let's explore that in this episode... References பன்னிரு  பாட்டியல் - Panniru Paatiyal புறநானூறு - Puranaanooru ஐங்குறுநூறு - Ainkurunooru கம்பராமாயணம்  - Kambaramayanam பொருநராற்றுப்படை - Porunaraatruppadai பெரும்பாணாற்றுப்படை - Perumpaanaatruppadai திருப்புகழ் - Thiruppugazh பரத சேனாபதீயம் - Bharatha Senapathiyam கந்தர் அந்தாதி - Kandhar Andhaadhi பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi திருப்பாணாழ்வார் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram பாலன்:  1 முதல் 7 வரை மீளி:  8 முதல் 10 வரை மறவோன்: 11 முதல் 14 வரை திறவோன்: 15 வயது காளை: 16 வயது விடலை: 17 முதல் 30 வரை முதுமகன்: 30 வயதுக்கு மேல் காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே பாலன் யாண்டே ஏழ்என மொழிப மீளி யாண்டே பத்துஇயை காறும் மறவோன் யாண்டே பதினான் காகும் திறவோன் யாண்டே பதினைந்து ஆகும் பதினாறு எல்லை காளைக்கு யாண்டே அத்திறம் இறந்த முப்பதின் காறும் விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன் நீடிய நாற்பத் தெட்டின் அளவும் ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப - பன்னிருப் பாட்டியல் பாலன் வாயுள்வையகம்கண்ட மடநல்லார் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயசீருடைப் பண்புடைப்பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே - பெரியாழ்வார் திருமொழி செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச் செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே - கந்தர் அந்தாதி ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய், ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான், கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில் நீல மேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே. - திருப்பாணாழ்வார் பாசுரம்  உரைதரு பாலன் பருவமு நாளுத் தரமுடனே - பரத சேனாபதீயம் குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும் பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் - திருப்புகழ்  மீளி  கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட் கடம்பமர் நெடுவே ளன்ன மீளி - பெரும்பாணாற்றுப்படை ஆளி நன்மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு - பொருநராற்றுப்படை மறவோன் நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான், ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் - கம்பராமாயணம்  ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத் தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன் - கம்பராமாயணம் காளை அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே - புறநானூறு My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6

Episode metadata supplied by the publisher feed · Published Mar 27, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 38 - ஆணின் பருவங்கள் (Gnanathedal)

0:00 22:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 22 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on March 27, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!