EPISODE · Apr 3, 2022 · 19 MIN
ஞானத்தேடல் - Ep 39 - பிள்ளைத்தமிழ் (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
பிள்ளைத்தமிழ் தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும். அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Pillai Tamizh In Tamil literature there is a specific types of song where a favourite God or a hero is personified as a baby and songs are sung in praise indicating the various stages of the baby's life from 3 months to 21 months. That form is called the Pillaithamizh. Let's explore that in this episode... References பன்னிரு பாட்டியல் - Panniru Paatiyal பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi ஆண்டாள் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ - திருக்குறள். அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய். ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது. காப்பொடு செங்கீரை தால்சப் பாணி யாப்புறு முத்தம் வருகவென் றன்முத லம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர் நம்பிய மற்றவை சுற்றத் தளவென விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர் - பன்னிருபாட்டியல் சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே பம்புசிறு தேரோடும் பத்து " - வெண்பாப் பாட்டியல் பிள்ளைப் பாட்டே தெள்ளிதிற் கிளப்பின் மூன்று முதலா மூவே ழளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.” “ஒன்று முத லையாண் டோ தினும் வரையார்'' - பன்னிருபாட்டியல் திருந்திய பெண்மக வாயின் விரும்பிய பின்னர் மூன்று மன்னுநீக் கென்றனர் பெண்பா லாயிற் பின்னர் மூன்று மன்னுதல் நீக்கினர் வாய்மொழிப் புலவர் சிற்றில் சிறுதேர் சிறுபறை யொழித்து மற்றவை மகளிர்க்கும் வைப்ப தாகும் சிற்றி லிழைத்தல் சிறுசோ றாக்கல் பொற்பமர் குழமகன் புனைமணி யூசல் யாண்டீ ராறதி லெழிற்காம னோன்பொடு வேண்டுத றானும் விளம்பினர் புலவர் பின்னைய மூன்றும் பேதையர்க் காகா ஆடுங் கழங்கு அம்மானை ஊசல் பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத் தாள் கிளையளவாம் - இலக்கண விளக்கப் பாட்டியல் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #பிள்ளைத்தமிழ் #பெரியாழ்வார் #பன்னிருபாட்டியல் #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Pillaithamizh #Panniru_Paatiyal #PeriyaazhwarThirumozhi For enquiries/feedback: [email protected]
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 39 - பிள்ளைத்தமிழ் (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.