ஞானத்தேடல் - Ep101 - வேட்கைப் பத்து - Motivation - (Gnanathedal) episode artwork

EPISODE · Aug 20, 2023 · 12 MIN

ஞானத்தேடல் - Ep101 - வேட்கைப் பத்து - Motivation - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

வேட்கைப் பத்து மருதம் ஓரம்போகி; நெய்தல் அம்மூவன்; கருதும் குறிஞ்சி கபிலன்; - கருதிய பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே; நூலையோ தைங்குறு நூறு. ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார். "மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே" முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே' என்னும் இலக்கண விதியினை ஒதுக்கி நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே. வாழி ஆதன்; வாழி அவினி! நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!' எனவேட் டோளே யாயே; யாமே, நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன். வாழ்க! பாணனும் வாழ்க!' என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! விளைக வயலே; வருக இரவலர்!' எனவேட் டோளே! யாயே; யாமே, பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண்துறை யூரன் கேண்மை வழிவழிச் சிறக்க!' எனவேட் டேமே! வாழி ஆதன் வாழி அவினி! பால்பல ஊறுக; பகடு பல சிறக்க! என வேட்டோளே' யாயே; யாமே, வித்திய உழவர் நெல்லொடு பெயரும் பூக்கஞல் ஊரன் தன்மனை வாழ்க்கை பொலிக' என வேட்டேமே!g வாழி ஆதன்; வாழி அவினி! பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக! என வேட்டோளே யாயே; யாமே, பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற் கழனி யூரன் மார்பு பழன மாகற்க' எனவேட் டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக! என வேட்டோளே யாயே; யாமே முதலைப் போத்து முழுமீன் ஆரும் தண்துறை யூரன் தேர் எம் முன்கடை நிற்க' என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக! என வேட்டோளே, யாயே; யாமே, மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை யூரன் வரைக எந்தையும் கொடுக்க' என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!' என வேட் டோளே, யாயே; யாமே, உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு கிருக்கும் தன்துறை யூரன் தன்னூர்க் கொண்டனன் செல்க' என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! அரசு முறை செய்க; களவு இல்லாகுக!' எனவேட் டோளே, யாயே; யாமே, அலங்குசினை மா அத்து அணிமயில் இருக்கும் பூக்கஞல் ஊரன் சூள், இவண் வாய்ப்பதாக என வேட்டேமே! வாழி ஆதன்; வாழி அவினி! நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!' என வேட் டோளே, யாயே; யாமே, கயலார் நாரை போர்விற் சேக்கும் தண்துறை யூரன் கேண்மை அம்பல் ஆகற்க' என வேட் டேமே. வாழி ஆதன்; வாழி அவினி! மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!' என வேட் டோளே, யாயே; யாமே, பூத்த மாஅத்துப் புலால்அம் சிறுமீன் தண்துறை யூரன் தன்னொடு கொண்டனன் செல்க' என வேட்டேமே. வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். –கந்த புராணம் வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே! —சம்பந்தர் தேவாரம் உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #ஐங்குறுநூறு #வேட்கைப்பத்து #திருக்குறள் #ஊக்கம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #aingurunooru #vetkaipaththu #thirukkural #motivation #dailymotivation #trendingshorts #trending For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Aug 20, 2023

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep101 - வேட்கைப் பத்து - Motivation - (Gnanathedal)

0:00 12:10

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 12 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on August 20, 2023.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!