ஞானத்தேடல் - Ep107 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் - (Gnanathedal) episode artwork

EPISODE · Oct 1, 2023 · 15 MIN

ஞானத்தேடல் - Ep107 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, குருகிலை ‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ - நச்சினார்க்கினியர். அஞ்சனம் காயா மலர குருகிலை ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொள்” தண்கழற் கோடல் துடுப்(பு) ஈனக் காதலர் வந்தார் திகழ்நின் தோள். - திணைமொழி ஐம்பது (21) ‌ அருவி அதிரக் குருகிலை பூப்பத் தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற வரிவளைத் தோளி! வருவார் நமர்கொல் பெரிய மலர்ந்த(து)இக் கார். - திணைமொழி ஐம்பது (30) முருகியம்போல் வானம் முழங்கி இரங்க குருகிலை பூத்தன கானம்.... ....” கார் நாற்பது 27 மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள் நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார் வழங்கத் தளிர்க்குமாம் மேல். - நான்மணிக்கடிகை மருதம் கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' (மருது பாண்டியர்கள்) Pride of India சிங்களத்திலும் - ‘மருது’ Queen’s Flower உழவர்க்கு நிழல் ………………………..ஓங்கிய பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, மருதமர நிழல், எருதொடு வதியும் அகநானூறு (37) பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் - பெரும்பாணாற்றுப்படை 232 மருத மாலை பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28 “பழனப் பல் புள் இரிய, கழனி வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்” - நற்றிணை வரிகள் (350:2-3) சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர். திருமருதமுன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் - பரிபாடல் 7-83 தீம்புனல் வையைத் திருமருத முன்றுறை ஆல் - பரிபாடல் 22-45 திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை - கலித்தொகை வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் - அகநானூறு 36 மருதூா்கள் மூன்று முக்கிய திருத்தலங்களில் தலமரமாகவும் போற்றப்படுகிறது. தலைமருது - வட மருதூா் - ஸ்ரீ சைலம் இடைமருது - தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர் கடைமருது - திருநெல்வேலி - திருப்புடை மருதூா் 10) மதுரை மருத மரம் அதிகமாக இருந்ததால் மருதை என்ற பெயர் பிற்காலத்தில் மதுரையானது. செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த் துறையணிந் தன்றவ ரூரே – குறுந்தொகை 50 11) மருத்துவ மரம் ஓதமெனு நீரிழிவை யோட்டும் பிரமேகங் காதமென வோடக் கடத்துங்காண் - போத மயக்க மொடுதாக மாறாச் சுரத்தின் தயக்கமறுக் கும்மருதஞ் சாற்று - பதார்த்த குண சிந்தாமணி 12) மருதமலை முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான் உருகு மன்பர்க் குதவி செய்யவே பெருகு காமர்ப் பிறங்க லாயினான் அருகின் வேலு மருத மாயதே. மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின் மருதம் பாட வாய்ந்த வேள்வரை மருத நின்ற மறுவில் காடிசியான் மருத வோங்அ லென்ன மன்னுமே. பாம்பாட்டிச் சித்தர் கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார் கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் நறும்பூங் கண்ணி குறவர் சூடக் கானவர் மருதம் பாட அகவர் நீனிற முல்லைப் ப·றிணை நுவலக் – பொருநராற்றுப்படை (218-221) My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Oct 1, 2023

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep107 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் - (Gnanathedal)

0:00 15:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 15 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on October 1, 2023.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!