ஞானத்தேடல் - Ep88 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம் - (Gnanathedal) episode artwork

EPISODE · May 21, 2023 · 9 MIN

ஞானத்தேடல் - Ep88 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம் - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji References குறிஞ்சிப் பாட்டு . . . .. . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எறுழம் பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின் பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க் கால் எறுழ் ஒள்வி தாஅய முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே. - ஐங்குறுநூறு (308) தெறுழ்வீ கார்பெயல் தலைஇய காண்பின் காலைக் களிற்று முகவரியின் தெறுழ்வீ பூப்ப - புறநா 119 வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல் நறைநிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ தாஅம், தேரலர் கொல்லோ - நற்றிணை 302 (மதுரை மருதன் இளநாகனார்) கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந் தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று கூர்ந்த பசலை யவட்கு - கார் நாற்பது 25 (மதுரைக் கண்ணங்கூத்தனார்) ‌ இம்மலர்கள் வரகரிசியைப் பொரித்த பொரி போன்றவை அரும்பவிழ்ந், தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன" (கார்நாற்பது, 25) சுள்ளி சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை உதணால் கடிந்தான் உளன். - திணைமாலை நூற்றைம்பது ‌ சுள்ளி – மராமரப் பூ; ‘சுள்ளி’ என்ற சொல் தாவரங்களைச் சுட்டும் சொல்லாக சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. ‘சுள்ளி’ என்ற சொல்லுக்கு நிகண்டுகள் அனிச்சம், நறவம், மராஅம், நாகம், ஞாழல், ஆச்சா போன்ற பல தாவரங்களைச் சுட்டுகின்றன. இச் சொல்லின் பொருள் மென்மை, கூர்மை, ஈரமற்று காய்ந்தது ஆகியவையாகும், ‘சுள்ளிவேலி’பற்றி இலக்கியமும், கல்வெட்டுகளும் கூறுகின்றன. “வெண்பூஞ் சுள்ளி”, சுள்ளி வெண் போது சுரும்புணவிரித்து பெருங்கதை ‌ சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ் சூழ்மலர் நனைய நாகமுங் கோங்கமு நாறிணர்ச் சினைய சண்பகம் வேங்கையோ டேற்றுபு முனைவன் மேற்றுதி முற்றெடுத் தோதினான். ‌- சீவக சிந்தாமணி கூவிரம் கூவிரம் என்றொரு பூ வந்துள்ளது. இதற்குக் கூவிரப் பூ” என்று நச்சர் பொருள் எழுதியுள்ளார்.. 'வீரை என்றொரு பூ உண்டு. அஃதொரு பாலை நிலத்து மரப் பூ அதன் இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் காய் வாள் போன்று பட்டையாக நீண்டது. அதனால் அது "வாள்வீரம்’ எனப்பட்டது. ‌வரையன புன்னாகமும், கரையன சுரபுன்னையும், வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம் மனைமாமரம் வாள்வீரம், சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள், தாய தோன்றி தீயென மலரா, ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம், வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப் பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல் வயவர் அரி மலர்த் துறை என்கோ? - பரிபாடல் ‌ வடவனம் வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். வடவனம் என்பது திருநீற்றுப்பச்சை என்பார் சிலர். ஆலமரம் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #எறுழம் #தெறுழ்வீ #சுள்ளி #கூவிரம் #வடவனம் #கபிலர் #ஐங்குறுநூறு #நற்றிணை #கார்நாற்பது #திணைமாலை_நூற்றைம்பது #பரிபாடல் #புறநானூறு #திருக்குறள் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #eruzham #theruzhvee #chulli #kooviram #vadavanam #flowers #aingurunooru #nattrinai #kaarnaarpathu #paripadal #thinaimaalai_nootraimpadhu #nature #trending For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published May 21, 2023

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep88 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம் - (Gnanathedal)

0:00 9:18

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 9 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on May 21, 2023.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!