ஞானத்தேடல் - Ep99 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் - (Gnanathedal) episode artwork

EPISODE · Aug 6, 2023 · 12 MIN

ஞானத்தேடல் - Ep99 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji References குறிஞ்சிப் பாட்டு ‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை பயினி, வானி, பல்லிணர்க் குரவம், குரவம் முருகனுக்கு உகந்த மரம். இது குரா, குரவு, குரவம் என்றும் சங்கநூல்களில் அழைக்கப்படுகின்றது. குராமரத்தின் பெயரால் ‘குராப்பள்ளி’ என்றொரு ஊரும் உண்டு (திருவிடைக்கழி) இது குருந்த மரம் என்றும் கூறப்படும். இதன் நீழலில் இறைவன் குரு வடிவாக அமர்ந்திருந்து தமக்குக் காட்சி கொடுத்தருளினான் என்பர் மாணிக்கவாசகர். சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே திருவாசகம்-அருட்பத்து பழநி தனில் போய் உற்பவ வினைவிள, கள்சேர் வெட்சி, குரவு பயில் நல்தாள் பற்றுவது ...... ஒருநாளே? சிறக்கு மாதவ முனிவரர் மகபதி யிருக்கு வேதனு மிமையவர் பரவிய திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 34 கோங்கம் 71 இலவம் குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் - ஐங்குறுநூறு புதுமலர்க் கோங்கம் பொன்எனத் தாது ஊழ்ப்ப - கலித்தொகை எரி பூ இலவத்து ஊழ்கழி பன் மலர் – ஐங் 368/1 எரி உரு உறழ இலவம் மலர – கலித்தொகை 33/10 இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொருநராற்றுப்படை 27 முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே - நற்றிணை குரவு மலர்ந்து, அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில் - அகநானூறு அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்– அகம் 237/3. வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன குடந்தையம் செவிய கோட்டு எலி வெள்ளி நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப – அகம் சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்து ஆங்கு - அகநானூறு இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண், சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன குரவம்‌ பாவை' எனப்‌ பெயர்‌ பெற்றது. பாவை மலர்‌. நறுங் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை - ஐங்குறுநூறு. கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி - தேவா-சம்:318 கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் - தேவா-சம்:2781/2 அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழக அருணகிரிநாதர் திருப்புகழ் அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #குரவம் #கோங்கம் #இலவம் #அகநானூறு #ஐங்குறுநூறு #திருப்புகழ் #குறுந்தொகை #நற்றிணை #பொருநராற்றுப்படை #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #kuravam #kongam #ilavam #silkcotton #flowers #kurunthogai #aganaanooru #aingurunooru #thiruppugazh #arunagirinathar #pathitrupaththu #aingurunooru #nature #trendingshorts #trending For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Aug 6, 2023

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep99 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் - (Gnanathedal)

0:00 12:40

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 12 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on August 6, 2023.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!