EPISODE · Dec 2, 2020 · 3 MIN
பாம்பன் சுவாமிகள் Pamban Swamigal
from Channel G · host Visu Iyer
Thiruvanmiyur pathigam திருவான்மியூர் பதிகம். திருவான்மியூர் சீரு லாவு நீடு மாட வீதி யாதி தேவர்வாழ் ஏரு லாவும் வேத பீட மேய்வி லாச வான்மியூர் நாரு லாவு ஞான வேலி னாத னாத பாதமே பாரு லாவு ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 1 கோட றாத சோலை தாழை கூடு நீழ னாறுநீர் ஏட றாத வாரி சாதி யேய்த டாக வான்மியூர் மாட றாத மாம யூர மூரு மாதி பாதமே பாட றாத ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 2 தேச றாத மீனு லாவு சீத வாரி நாளுநீர் வீச லார்வி லாச வூர்வி வேகர் வாழும் வான்மியூர் வாச வேலி னான்வி பூதி மாண றாத பாதமே பாச நூறு ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 3 கூடு நாரை மீனை வாரு கோலம் வான்மண் மேடுவால் நீடு ஞாளி பூஜை சேன மேர்நி லாவும் வான்மியூர் நாடு வேல னாம யூர நாத னாத பாதமே பாடு மோகை ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 4 பூவு லாம்வி ணாடு மேரு பூத மேகி னாலுமே ஒவு றாதெ நாளு மாத ரோதி சாரும் வான்மியூர் மேவு நீன்ம யூர மூரும் வேல னாத பாதமே பாவு தார ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 5 நாவல் வாழை தாளி பூக நாளி கேர மேயவூர் தாவ ணார வாவி வாழ்ச காய பூதி வான்மியூர்ப் பூவன் மேனி வேல னீத போத னாத பாதமே பாவ னாவர் ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 6 பூணி கோக டாமை யாடு பூழி மூச வேகுமூர் ஏணி லாவு வேத கீத வேர்கு லாவும் வான்மியூர் வாணி லாவு ஞான வேலன் வாச நாத பாதமே பாணி மேய ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 7 பேழு ணாவெ னாமை யூக மேபல் காய்கள் பீறலாற் கூழு லாய சூழன் மேவு கோல நீடும் வான்மியூர் வாழு மாம யூர மூரு மாக வாதி பாதமே பாழு றாத ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 8 பாலி றாத லால நீள்ப லாவி ளாப ராய்களோர் பாலி றாம தூக மாவொர் பால ளாவும் வான்மியூர்ப் பாலின் மேனி நாதர் சேய்கு கேச னாத பாதமே பாலி னேய மானு நூலர் பாடும் வீடு மாகுமே. 9 கூன னாகு மீன மூரல் கூடு பானல் வான்மியூர் ஞான வேல னார லோதி நாம னாடு தேவனாம் மான வான்ம யூர மேறு மாக சோதி பாதமே பான றாவி னோதி நூலர் பாடும் வீடு மாகுமே. 10
Embed this episode
NOW PLAYING
பாம்பன் சுவாமிகள் Pamban Swamigal
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.