PS-S1E5-பொன்னியின் செல்வன்/E5-குரவைக் கூத்து(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Kuravai Koothu / Puthu Vellam episode artwork

EPISODE · Jul 21, 2022 · 14 MIN

PS-S1E5-பொன்னியின் செல்வன்/E5-குரவைக் கூத்து(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Kuravai Koothu / Puthu Vellam

from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Kuravai Koothu -- அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள்.  உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், "கந்தமாறா! கந்தமாறா!" என்று அழைத்தது.  "அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்"  என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல  சேர்ந்தாற்போல் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டதும், கந்தமாறன்  தட்டுத்தடுமாறி மறுமொழி கூறியதும் வந்தியத்தேவன் காதில் விழுந்தது. பின்னர்  அந்தப் பெண்கள் கலகலவென்று சிரித்த ஒலியும் உள்ளேயிருந்து வந்தது. தன்னைப் பற்றித்தான் அவ்விதம் அவர்கள் கேலி செய்து சிரிக்கிறார்களோ  என்ற எண்ணம் வந்தியத்தேவனுக்கு வெட்கத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது.  கந்தமாறன் வெளியே வந்ததும் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துக் கொண்டு, "வா!  எங்கள் மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்!" என்று சொல்லி  இழுத்துக் கொண்டு போனான். கடம்பூர் மாளிகையின் நிலாமுற்றங்கள், ஆடல் பாடல் அரங்கங்கள், பண்டக  சாலைகள், பளிங்கு மண்டபங்கள், மாட கோபுரங்கள், ஸ்தூபி கலசங்கள், குதிரை  லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக் கொண்டு  சென்றான். இடையில் வந்தியத்தேவன், "கந்தமாறா! என்னை அந்தப்புர வாசலில்  நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும்  குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம்? உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில்  அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?" என்று கேட்டான். "உன்னைப் பார்த்ததில் அவர்களுக்கெல்லாம் சந்தோஷந்தான். உன்னை  அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்திருக்கிறதாம். ஆனால் உன்னைக்  குறித்து அவர்கள் சிரிக்கவில்லை..." "பின்னே எதற்காகச் சிரித்தார்களாம்?" "பழுவேட்டரையர் இருக்கிறார் அல்லவா? இத்தனை வயதுக்குப் பிறகு அவர்  புதிதாக ஓர் இளம்பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறார்.  மூடுபல்லக்கில் வைத்து அவளை இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால்  அந்தப்புரத்துக்கு அவளை அனுப்பாமல், அவருடைய விடுதியிலேயே அடைத்துப்  பூட்டி வைத்திருக்கிறாராம்! அந்தப் பெண்ணைப் பலகணி வழியாக எட்டிப்  பார்த்துவிட்டு வந்த ஒரு தாதிப் பெண் அவள் அழகை வர்ணித்தாளாம். அதைக்  குறித்துத்தான் சிரிப்பு! அவள் சிங்களப் பெண்ணோ, கலிங்கத்துப் பெண்ணோ,  அல்லது சேர நாட்டுப் பெண்ணோ என்று சர்ச்சை செய்கிறார்கள்! பழுவேட்டரையரின்  முன்னோர்கள் சேர நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று உனக்குத்  தெரியும் அல்லவா?" "கேள்விப்பட்டிருக்கிறேன் ஏன், நீதான் முன்னொரு தடவை  சொல்லியிருக்கிறாய். இருக்கட்டும், கந்தமாறா! பழுவேட்டரையர் இந்த மர்ம  சுந்தரியான மங்கையை மணந்து எத்தனை காலம் ஆகிறது?" "இரண்டு ஆண்டுகளுக்குள்ளேதான் இருக்கும்; மணம் செய்து  கொண்டதிலிருந்து அவளைத் தனியாகச் சிறிது நேரம் கூட அவர் விட்டு  வைப்பதில்லையாம்! எங்கே போனாலும் கூடப் பல்லக்கில் ஆசை நாயகியையும்  அழைத்துப் போகிறார். இதைக் குறித்து நாடெங்கும் கொஞ்சம் பரிகாசப் பேச்சு  நடந்து வருகிறது. வந்தியத்தேவா! ஒரு பிராயத்தைத் தாண்டியவர்களுக்கு இந்த  மாதிரி ஸ்திரீ சபலம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரமாகத்தானே  இருக்கும்?" "காரணம் அது ஒன்றுமில்லை உண்மைக் காரணத்தை நான் சொல்லட்டுமா,  கந்தமாறா? பெண்கள் எப்போதும் சற்று பொறாமை பிடித்தவர்கள். உன் வீட்டுப்  பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நினைக்காதே! பெண் உலகமே  இப்படித்தான்! உன் குடும்பத்துப் பெண்கள் கருநிறத்து அழகிகள்.  பழுவேட்டரையரின் ஆசை நாயகியோ செக்கச் செவேலென்று பொன்னிறமாயிருக்கிறாள்.  ஆகையால் அவளை இவர்களுக்குப் பிடிக்கவில்லை! அது காரணமாக வேறு ஏதேதோ கதை  கட்டிச் சொல்கிறார்கள்!..." "அடே! இது என்ன விந்தை! உனக்கு எப்படி அவளுடைய நிறத்தைப் பற்றித்  தெரியும்? அவளை நீ பார்த்திருக்கிறாயா, என்ன? எங்கே, எப்படிப் பார்த்தாய்?  பழுவேட்டரையருக்கு மட்டும் இது தெரிந்தால், உன் உயிர் உன்னுடையது அல்ல!..."

Episode metadata supplied by the publisher feed · Published Jul 21, 2022

Embed this episode

NOW PLAYING

PS-S1E5-பொன்னியின் செல்வன்/E5-குரவைக் கூத்து(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Kuravai Koothu / Puthu Vellam

0:00 14:04

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும்?

This episode is 14 minutes long.

When was this இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் episode published?

This episode was published on July 21, 2022.

Can I download this இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!