EPISODE · Jul 15, 2026 · 30 MIN
புனைவு வனம்: குவிகம்: தரிசனம் - கணேஷ் ராம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
புனைவு வனம்: குவிகம்: தரிசனம் - கணேஷ் ராம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்ஆசிரியர் கணேஷ் ராம் அவர்கள் குவிகம் குறும் புதினம் போட்டியில் பரிசு பெற்று ஜூன் 2026 இதழில் வெளிவந்துள்ள தரிசனம் என்ற குறுநாவல் மீதுதான். எழுத்தாளர் கணேஷ் ராம் அவர்களுக்கு எழுதுவது பிறவித் திறமையோ திட்டமிட்ட லட்சியமோ அல்ல; அது இவரது அடையாளத் தேடலின் ஒரு வடிவம்.தி.ஜா., சுஜாதா, அசோகமித்திரன், வண்ணதாசன், ஞானக்கூத்தன், மௌலி போன்றோரின் தாக்கத்தில்தான் இவரது எழுத்துப் பயணம் தொடங்கியது.நாடகம், கவிதை, சிறுகதை, குறுநாவல் என பல வடிவங்களில் எழுதிப் பார்த்தாலும், இன்னும் ஒரு புத்தகம்கூட அச்சில் வராதது இவரது பயணத்தின் வினோதமான உண்மை.இதுவரை 23 சிறுகதைகள், 2 குறுநாவல்கள், சில நாடகங்கள் மற்றும் கவிதைகள் எழுதியிருக்கிறார்.சொல்வனம், குவிகம் உள்ளிட்ட இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன; சிலவற்றுக்கு பரிசுகளும் கிடைத்துள்ளன.போட்டிக்காக திட்டமிட்டு எழுதுவது இவரது இயல்பு அல்ல; தம்மை வைத்து யாரோ எழுத வைக்கிறார்கள் என்பதே இவரது நம்பிக்கை.சுயஎள்ளலும் நகைச்சுவையும் கலந்த இந்த எழுத்துப் பயணத்தை இவர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இக்கதையின் சிறப்பு, பக்தியைப் பற்றிப் பேசும் போது கூட அது வெறும் மத உணர்வில் நின்றுவிடாமல், மனிதர்களின் வாழ்வியலையும் சமூக வேறுபாடுகளையும் நுட்பமாகச் சித்தரிப்பதில்தான் உள்ளது. “தரிசனம்” என்பது கோயிலில் இறைவனைப் பார்ப்பதா, அல்லது மனிதர்களிடையே தெய்வீகத்தை உணர்வதா என்ற கேள்வியை வாசகனின் மனதில் விதைக்கும் சிந்தனைமிக்க படைப்பு.
Embed this episode
Ready to play
புனைவு வனம்: குவிகம்: தரிசனம் - கணேஷ் ராம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.