EPISODE · Oct 30, 2020 · 16 MIN
திருப்புகழ்
from Channel G · host Visu Iyer
அவனிதனிலே.... பழனி திருப்புகழ்... அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
Embed this episode
NOW PLAYING
திருப்புகழ்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.