EPISODE · Nov 27, 2023 · 2H 16M
திருட்டுப்போன பொண்ணு | எழுத்தாளர் இமையம் சிறுகதைகள் - காளி | #முச்சந்துமன்றம்
from Dravidian Stock · host Dravidian Stock
“இல்லீங்க. திருட்டுப்போன பொண்ணுன்னு ஒருத்தங்க இருக்கங்களாமே அவுங்க வீட்டெ கேட்டன்.” “அது பேரூதான் பொண்ணு.” “நீங்க ஆள மாத்தி சொல்றீங்கின்னு நெனக்கிறன்.” லேசாக சிரித்துக்கொண்டே அந்தப் பெண் சொன்னாள். “நீங்க சொல்ற ஆளும் நான் சொல்ற ஆளும் – ஒரே ஆளுதான். அது பேரூ பொண்ணுதான். ஊருல அதெ திருட்டுப்போன பொண்ணுன்னும் சொல்வாங்க.” மீண்டும் அந்தப் பெண் சிரித்தாள். “வீடு எங்க இருக்கு?” டேவிட் கேட்டான். “தெரு கடசியில ஒரு பழய காலத்து ஓட்டு ஊடு தெரியுதில்லெ.அதுக்குப்பக்கத்திலெ ஒரு கூர ஊடு இருக்கு பாருங்க. அதான்.” அந்தப் பெண் கிழக்குப்பக்கமாக கையைக் காட்டினாள். “சரிங்க” என்று சொல்லிவிட்டு டேவிட்டும் சேதுபதியும் திரும்பும் போது அந்தப் பெண் “வௌக்கார ஆளுயெல்லாம் வந்து இருக்கே என்னா விசியம்? ” என்று கேட்டாள். “சும்மா ஊர பாக்கத்தான்.” Host: காளி
Embed this episode
Ready to play
திருட்டுப்போன பொண்ணு | எழுத்தாளர் இமையம் சிறுகதைகள் - காளி | #முச்சந்துமன்றம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.