EPISODE · Mar 17, 2026 · 1 MIN
தண்ணீர் | காகிதக் காதல் | Athavan Radio
from Kaakitha Kadhal | Athavan Podcast · host Athavan Radio
இருபதாம் நூற்றாண்டில் இந்திய நகர வாழ்க்கையில் சமூக நெருக்கடியொன்றைப் பற்றி எழுதப்பட்டது போன்றது தான் தண்ணீர். ஆனால் எல்லா நெருக்கடிகளுமே மனித மனத்துக்குத்தான் என்பது தெளிவாகிறது. ஈரப்பசையற்ற காலத்திலும் சூழ்நிலையிலும் மனித இயல்பில் வெளிவரக்கூடிய பரிவையும் தீரத்தையும் தியாக உணர்வையும் 'தண்ணீர்' இரு பெண்களின் கதை மூலம் கூறுகிறது. இன்னும் ஏராளமான பெண்கள் இந்த நாவலில் உண்டு. அவர்கள் அனைவரும் பெயரின்றியே தோன்றுவதும் ஒரு சமநோக்க விமரிசனமே.அசோகமித்திரனுடைய படைப்புகள் பல இந்திய மொழிகளிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளியாகியிருக்கின்றன. 'தண்ணீர்' ஆங்கிலத்தில் இங்கிலாந்தில் வெளியாகி விசேட கவனம் பெற்றது. அசோகமித்திரனுக்கு 1996ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது அளிக்கப்பட்டது.
Embed this episode
NOW PLAYING
தண்ணீர் | காகிதக் காதல் | Athavan Radio
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.