Unmai Vilakkam - Pathi
from Saiva Siddhanta Hosted by suresh babu
ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை வேறு ஒருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும் ஒன்று ஒன்றாய் நாடி உணர்ந்து ஓதில் அதில் உற்று அறிவாய் நின்ற பொருள் தானேகாண் நீ. குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு பொன்றாத நும் உருவம் போதியீர் -- நின்று அருக்கன் கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனது அறிவில் நண்ணி அறிவித்திடுவோம் நாம். அன்றியும்கேள் ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா இவை என்ன -- நின்றதுபோல் ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன் அறிவில் மேவாமல் மேவி நாமே.
Embed this episode
No transcript yet.