EPISODE · Apr 13, 2023 · 3 MIN
Your Career Blueprint
from saitechinfo · host saitechinfo
உங்கள் தொழில் வரைபடத் திட்டம். மாணவ மணிகளே! பள்ளிகள் , கல்லூரிகள் மட்டுமே நமக்கு முழுமையான கல்வியை தராது. உங்களுடைய இலக்கு என்ன என்பதை இப்பொழுதே தீர்மானம் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய இயற்கையான அல்லது குடும்பத்தின் வழி வந்த திறமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவைகளை உங்கள் பிரத்தியேக திறன்கள் ஆக மேம்பாடு அடைய பயிற்சி செய்து கொள்ளுங்கள். உங்கள் திறன்களுக்கு ஏற்ற வாய்ப்புகள் உங்களைச் சுற்றி என்னென்ன இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள திறன்கள் + வெளியில் கிடைக்கும் வாய்ப்புகள் = இதுதான் உங்கள் தொழில் அல்லது வியாபாரம் அல்லது பதவி. உங்களுக்கு தோசை வேண்டுமா அல்லது சப்பாத்தி வேண்டுமா என்பதை தீர்மானிப்பது உங்களிடம் உள்ள அரிசி மாவா அல்லது கோதுமை மாவா? அரிசி மாவை வைத்துக்கொண்டு சப்பாத்தி சுடுவீர்களா? சற்று சிந்தியுங்கள். உங்கள் திறமைகளும் திறன்களும் தான் உங்கள் கல்வி மற்றும் தொழிலை தேர்ந்தெடுக்க முடியும். கவர்ச்சியான கல்வி மற்றும் வியாபார ஏய்ப்புகளையும், விளம்பரங்களையும் கண்டு ஏமாறாதீர்கள். நீங்கள் சதா சர்வ காலமும் உங்களை சுற்றிய ஒரு குறுகிய வட்டத்திலேயே குடிகொண்டு உங்கள் அருமையான பொற்காலங்களை வீணாக்குகின்றீர்கள். வீணர்களின் வெட்டி பேச்சு வட்டத்திலிருந்து வெளிவாருங்கள். உங்கள் உடலை அழகுப்படுத்த உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வதில்லையா? மனதை பண்படுத்த ஆலயங்களுக்கு செல்வதில்லையா? புத்தியை கூர்மைப்படுத்த மேலும் புத்தியை விசாலமடைய நல்ல பயிற்றரங்களுக்கும், நூலகங்களுக்கும் போக வேண்டாமா? வாட்ஸ் அப் குப்பைகளையும், செல்ஃபி அலங்கோலங்களையும், வெட்டி தரவுகளையும் உங்கள் உள்ளங்கை செல்லினுள் டவுன்லோட் செய்கிறீர்கள். உங்கள் உடல் முழுவதும் வியாபித்திருக்கும் தசைகளின் உயிர் செல்களில் உலகத்திற்கு உபயோகப்படும் திறன்களை வளர்த்துக் கொண்டீர்களா? சற்றே சிந்தியுங்கள் எனதருமை மாணவ மணிகளே ! ஒவ்வொரு நூலகத்திலும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் வரவுக்காக காத்திருக்கின்றன. நீங்கள் அவைகளை தீண்டாவிட்டால், பிணங்களை வரிசையாக அடுக்கி வைத்தது போலல்லவா காட்சியளிக்கும்? வெறுமனே அரசு மேற்பதவிகளுக்கும், உயர் பதவிகளுக்கும், மேற்படிப்புகளுக்கும் , சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கும் ஆசைப்பட்டால் போதுமா? அதற்கான தொழிற்சார்ந்த உங்களுடைய வாழ்க்கையின் வரைபடத் திட்டம் (blueprint) என்ன என்பதை என்றாவது யோசித்தீர்களா? காலம் கனிந்திருக்கும் போதே, நற்சான்றோர்களும் பெரியோர்களும் பெற்றோர்களும் கூட இருக்கும்போதே உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் 40 வயசு தாண்டியும் நிலையில்லாமலும் நல்ல வேலையில்லாமலும் புலம்ப வேண்டிய நிலையில் தள்ளப்படுவீர்கள்! இன்றே புறப்படுங்கள் நல்ல ஆசானை நோக்கி! ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்திடுங்கள். 60 வருட வாழ்க்கையில் கௌரவமாக நிலைத்திருப்பீர்கள். உங்கள் திறன் சார்ந்த தகுதிக்கேற்ற பயிற்சி பெறுங்கள். வெற்றிதான் இனி உங்களுக்கு! Dr E. Ramanathan PhD 9444929163
What this episode covers

NOW PLAYING
Your Career Blueprint
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.