Skip to content
செய்வோம், மேலாண்மை! podcast artwork

PODCAST · education

செய்வோம், மேலாண்மை!

by DIET SALEM

இந்த வலையொலி பணியாளர் மேலாண்மை செய்யும் கலையை சிறப்பாக விளங்கி கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதை பேசுகிறது. படைப்பு முனைவர் திரு.மு.செல்வம், முதல்வர்.

Publisher-supplied feed metadata · PodParley refreshed Mar 28, 2022 · Source feed

Episodes

  1. மௌன அறிவு

    ஒருவர் செய்யக்கூடிய பணியில் அவருக்கு ஏற்படும் அனுபவங்களே, அவருடை பணி சிறப்படைய காரணமாகிறது. சில நேரங்களில் ஒருவர் பெறும் விழிப்புணர்வு செயலை சிறப்பாக செய்ய உதவுகிறது. இந்த மவுன அறிவு குறித்து விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. ஆக்கம் முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  2. உயர்நிலை சுயம்

    பல திறமைகள் இருந்தும் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைய உயர்நிலை சுயம் தேவைப்படுகிறது. அது குறித்து விளக்கி வாழ்வில் முன்னேற்றமடைவது எவ்வாறு என அற்புதமாக விளக்குகிறது இன்றைய வலைபொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  3. ஓணான் - தவளை மனப்பாங்கு

    கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளை எவ்வாறு களைவது, அச்சமயங்களில் பணியளர்களை எவ்வாறு வழிநடத்தி நிறுவன வெற்றிக்கு செயல்பட வைப்பது என்பது குறித்து அழகாக விளக்குகிறது இன்றைய வலையொலி. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  4. மன மென்பொருள்

    ”செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு எய்த உணரந்து செயல்” - திருக்குறள் 517. ஒரு நிறுவனத்தின் முன்னேற்றம் அடைய பணியாளர்கள் தன்னார்வத்துடன் வெற்றிக்கான பணியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு பணியாளர்களை வழிநடத்திட தேவையான, மிக முக்கியமாக மனதில் இருக்கவேண்டிய மென்பொருள் குறித்து பேசுகிறது இன்றைய வலையொலி...

  5. வியூகக் கலவை

    ஒரு நிறுவனம் தனது வளர்ச்சிக்காக பல செயல்பாடுகளை ஒரே நேரத்தில் செய்ய நேரிடும். முன்னேற்றம், ஆராய்ச்சி மற்றும் தனது எல்லைகள் பற்றியும் தேவைகள் குறித்தும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் நிறுவன உத்திகள் குறித்து பேசுகிறது இன்றைய வலையொலி பதிவு. ஆக்கம் முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  6. ஜீ பூம்பா

    ஒரு நிறுவனம் வளர அதிலுள்ள பணியாளர்களின் மனப்பாங்கு மிக முக்கியமானது.இங்கு வெற்றிக்கான மாற்றங்களை எளிதாக நிகழ்த்த முடியும். இதற்கான மிக எளிய சுயபரிசோதனைக்கான வழிமுறை பற்றி விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு.ஆக்கம் முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  7. புற வளமூலம்

    ஒரு நிறுவனத்தின் பயன் விளைவிக்கும் செயல்பாடுகளையும் ஆற்றலையும் அதிகரிக்க உதவும் வழிமுறைகளில் ஒன்றான புற வள மூலம் என்ற கருத்தினை விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  8. தன்னுறுதி மேலாண்மை

    எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் வெற்றி காண்பதற்காக பலருடன் இணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. அவர்களின் நம்பிக்கை மற்றும் தன்னுறுதியை எவ்வாறு ஆராய்ந்து அதற்கேற்றார் போல் வெற்றியை நோக்கி நகர நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என விளக்குகிறது இன்றைய மேலாண்மை பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  9. மதிப்புக் கட்டாண்மை

    ஒரு பொருளை ஒரு உற்பத்தி நிறுவனம் தயாரிக்கும் பொழுது அதன் மதிப்பை கூட்டி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறது. இதில் பயன்படும் உத்திகள் சிலவற்றை விளக்கி அதனைக் கொண்டு நாம் வெற்றி காண்பது எவ்வாறு என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  10. வருமிடர் மேலாண்மை

    ஒவ்வொரு நாளும் நாம் தினசரி பல்வேறு வகையான இடர்களை சந்தித்து வெற்றி காணவேண்டியுள்ளது. இடர்களை சந்திக்கும் பொழுது அவற்றை வெற்றி காணும் வகையில் நேர்மறை அணுகுமுறையைக் கையாண்டு நமது இலட்சியத்தை நோக்கி முன்னேறுவது எவ்வாறு என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  11. உடல் / உயிர்க் கடிகாரம்

    ஒரு நிகழ்வையோ அல்லது செயலையோ நமது மனது எவ்வாறு காட்சிபடுத்துகிறதோ அதன் வழி நமது உடல் செயல்பட தொடங்குகிறது. இந்த இயற்கை நிகழ்வை கொண்டு நமது செயல்களை எவ்வாறு வெற்றிப்பாதையில் செலுத்துவது குறித்து விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. ஆக்கம் முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  12. உயர்தரக்குறி அடையாளம்

    ஒரு நிறுவனம் வளர அது மேன்மேலும் தனது தரத்தை உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கான சீராய்வு நடவடிக்கைகளில் ஒன்றான உயர்தரக்குறி அடையாளம் பற்றியும் அதன் அவசியம் பற்றியும் விளக்குகிறது இன்றைய வலையொலி. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  13. நானே தானே மேலாண்மை

    நம் உயர்விற்கும் தாழ்விற்கும் நமது சுயம்தான் காரணம். நாம் வெற்றியடைய நம்மிடம் ஏற்கனவே இருப்பவற்றில் அவசியமானவற்றை விட்டுவிடாமல் இருப்பதும், தேவையானவற்றை தேடி அதனை பழகிக் கொள்ளவதும் ஒரு வெற்றியாளருக்கு மிக அவசியம். அதனை எவ்வாறு கண்டு, தொடர்ந்து கடைபிடிப்பது என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு....

  14. பாம்பி விளைவு

    ஒரு நிறுவனம் பாகுபாடு இன்றி சமமாக எல்லா வளங்களையும் நிர்வகிப்பதிலும், பயன்படுத்துவதிலும் சிறந்து விளங்கிடுமேயானால் அதன் வெற்றி விரைவில் உறுதிப்படுத்தப்படுகிறது. இது எவ்வாறு என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  15. சூழ்ச்சித்திட்டம்

    வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற தன்முனைப்போடும் முயற்சியோடும் எவ்வாறு செயல்பட்டு வெற்றிபாதையை அடைய வேண்டும் என்றும் அதற்காக சூழ்ச்சித்திட்டமிட்டு வெற்றியடைவது எவ்வாறு என்றும் விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. கருத்து முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  16. வெற்றிக்கணிப்பான்

    பல சமயங்களில் வெற்றிக்கான எல்லா நுண்ணறிவுக் காரணிகள் இருந்தும் வெற்றி கைநழுவிச் செல்வதைக் கண்டிருப்போம். அச்சூழல்களில் நிச்சயமான வெற்றி கிடைக்கும் என்பதற்கான, தவறவிடக் கூடாத, ஒரு மிக முக்கியமான காரணி பற்றி விவாதிக்கிறது இன்றைய வலையொலி பதிவு.

  17. மார்ஷ்மெல்லோ ஆய்வு

    எந்த ஒரு செயலையும் வெற்றியை நோக்கி செயலாற்றி, வெற்றியடையும் பொழுது அதற்கு வெளிப்புற காரணிகளைக் காட்டிலும், உட்புற காரணிகளே அதற்கு மிகப்பெரிய அடிப்படை காரணமாக விளங்குவதை காண இயலும். அது எவ்வாறு என விளக்கி உரைக்கிறது இன்றைய வலையொலி பதிவு. கருத்து முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  18. நம்ப வைக்கும் மேலாண்மை

    ஒரு நிறுவன மேலாளர் தனது பணியாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவர்களின் முழுத்திறன் வெளிக்கொணர பயன்படுகிறது. அதற்கான பயன்படக்கூடிய மேலாண்மை நுணுக்கங்களை விவரிக்கிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  19. மூளை உரிமை மேலாண்மை

    வெற்றிகரமாக ஒரு செயலை செய்து முடிப்பதற்கு நாம் பலவிதமான கோணங்களில் சிந்தித்தல் அவசியமாகிறது. நமக்குள்ள காரண காரிய சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் முழுமையான அணுகுமுறை ஆகியவை நமது வெற்றியை உறுதிப்படுத்த உதவுகின்றன. இதனை நமது வெற்றிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு....

  20. இருமைவாத இசைவு மேலாண்மை

    எந்த நிறுவன சூழலிலும் கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் எனப்படும் இரு கூறுகள் இருப்பது மிக அவசியம். இந்த இரு அமைப்புகளிலும் இசைவான சூழலை ஏற்படுத்தி வெற்றி காண்பது எவ்வாறு என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. கருத்து முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  21. பிக்மாலியன் மேலாண்மை

    ”எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்...” எனக் கூறும் தெய்வப்புலவரின் வாக்கைப்போல நாம் நல்லெண்ணங்களைக் கொண்டு எவ்வாறு பணியாளர்களை மேலாண்மை செய்வது என பிக்மாலியன் சம்பவத்தை சுட்டிக்காட்டி சுவைபட விளக்குகிறது இன்றைய வலையொலி. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  22. தாக்காற்றல் பகுப்பாய்வு

    ஒரு நிறுவனத்தில் ஒரு புதிய மாற்றத்தை புகுத்தும் பொழுது அதனை ஏற்றுக்கொள்ள மறுப்போர், பின்பு நிறுவன நோக்கம் அறிந்து அதனை உளமாற ஏற்று மாற்றத்தை செயல்படுத்துவர். அவர்கள் பற்றி அறிந்து கொண்டு நிறுவன தலைவர் தாக்காற்றல் பகுப்பாய்வு பயன்படுத்து வெற்றி காண்பது எவ்வாறு என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு....

  23. உருவாகும் தலைமைத்துவம்

    ஒரு தலைவர் தனது பணிகள் சார்ந்து சார்ந்து தனது பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெறும்பொழுது வெற்றியடைகிறார். இதிலிருக்கும் இருவகையான பண்புகளான பொறுப்பு மற்றும் அதிகாரம் பற்றி விளக்கி எவ்வாறு செயல்பட்டால் வெற்றியடைய இயலும் என அழகாக விளக்குகிறது இன்றைய வலையொலி. கருத்தாக்கம் முனைவர் மு.செல்வம்,...

  24. நிலைமாற்ற மேலாண்மை

    எந்த ஒரு வளரும் நிறுவனமும் காலத்திற்கு தகுந்தாற்போல் முன்னேறிச் செல்லுதல் வேண்டும். இதற்கு மிக அவசியமான பின்வரும் மாற்றங்களை முன்பே கருத்தில் கொள்ளும் நிலைமாற்ற தலைமையையும், அதற்கு மாறான தொழில் நடைமுறை தலைமையையும் விளக்குகிறது இன்றைய வலையொலி. கருத்தாக்கம் முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  25. கெய்சன் மேலாண்மை

    ஒரு நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் முதல் தலைமை நிர்வாகி வரை அந்நத நிறுவன முன்னேற்றத்திற்கான அவசியமும் அதற்கான வழிமுறையும் எவ்வாறு மனதில் கொள்ள வேண்டும் என்பதை உலகளவில் புகழ்பெற்ற கெய்சன் மேலாண்மை தத்துவத்தை சுட்டிக்காட்டி விளக்குகிறது இன்றைய பதிவு. கருத்தாக்கம் முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  26. செயற்படுமுறை மேலாண்மை

    எந்தவொரு நிறுவனமோ அல்லது தனி மனிதனோ வெற்றிக்கான முன்னேற்றப்பாதையில் செல்ல துணியும் போது அதற்கான நான்கு வகையான பாதைகளில் ஒன்றை தானாக பயன்படுத்துகின்றனர். தானாக செயல்படுதல், காரண காரியமறிதல், மையப்படுத்தல் மற்றும் சமமாக பாவித்தல் எனப்படும் இந்த வழிகளைப் பற்றி விளக்குகிறது இன்றைய செய்வோம் மேலாண்மை....

  27. வளர்ச்சி மேலாண்மை

    வளர்ச்சிக்கான செயல்பாடு எனப்படும் முன்னேற்றத்திற்கான மேலாண்மை செயல்பாடு கூறுகளில் திட்டமிடல், ஒன்றுபடுத்தல். தகவல் பரிமாற்றம் மற்றும் மேற்பார்வையிடல் போன்றவை அவசியமாகும். அது எவ்வாறு என எளிமையாக விளக்குகிறது இன்றைய வலையொலி. பதிவு முனைவர் மு.செல்வம்,முதல்வர்.

  28. வைர பணியாளர் மேலாண்மை

    ஒரு நிறுவனத்தின் பணியாளர் சாதாரண நிலையிலிருந்து மிகச்சிறந்த முன்மாதிரியாகவும், எல்லோருக்கும் முன்னோடியாகவும் உயர இயலும். இதற்கான ரகசியம் என்ன என்பது குறித்து விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  29. திறன் மேலாண்மை

    ஒரு பணியை செய்து முடிக்க உதவும் நமக்குள்ளான திறமைகளை குறிப்பிடுவது வேலைக்கான திறன் எனப்படுகிறது. திறன் மேலாண்மை என்றால் என்ன, அதனைக் கொண்டு நமக்கான வேலைகளை தரமானதாக முடித்திட என்ன மேலாண்மை தத்துவத்தை பயன்படுத்த வேண்டும என விளக்குகிறது இன்றைய வலையொலி. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  30. சிறப்பு நிலை மேலாண்மை

    ஒரு நிறுவனம் தனது பணியாளர்களுடன் சமூகத்திற்கு பயன்தரக்கூடிய செயல்களையும் மேற்கொண்டால் அதன் பணியாளர்கள் மேம்பட்ட செயல்திறனுடன் புதுமை படைப்பவராக மாறுவார்கள். அதனால் அந்நிறுவன முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது. அது எவ்வாறு என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  31. எம்பதி சிம்பதி மேலாண்மை

    ஒரு நிறுவனத்தில் அதன் மேலாளர் ஒருவருக்கொருவருடான பணி சார்ந்த உறவை மேம்படுத்துவதன் மூலமாக நிறுவனத்தின் முன்னேற்றத்தினை உறுதிப்படுத்த இயலும். அது நடைமுறையில் செயல்படும் பொழுது அந்த மேலாண்மை தத்துவம் எவ்வாறு வெற்றியை உறுதிப்படுத்துகிறது என்பதை விளக்குகிறது இன்றைய வலையொலி. படைப்பு முனைவர் மு.செல்வம்,...

  32. குண்டக்க மண்டக்க மேலாண்மை

    எந்தவொரு பொருளையும் அதற்குரிய இடத்திலும் சமயத்திலும் வைப்பதிலும் கூட ஒரு நுணுக்கம் உள்ளது. மாற்றி வைக்கப்பட்ட பொருளோ அல்லது தகவல்களோ மீட்டு எடுக்க பல மணி நேரம் கூட ஆகலாம். இதனை எவ்வாறு நமக்கு பயனுள்ள வகையில் மாற்றி பயன்படுத்துவது என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம்,...

  33. நெருக்கடி மேலாண்மை

    சில நேரங்களில் வெகு சாதாரணமாக தோன்றும் சிறிய அளவிலான பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டியவை. சமயங்களில், அவை சரியாக தீர்க்கப்படாவிடில், பல நெருக்கடிகளை அது தோற்றுவிக்கலாம். அவை தீர்க்கப்பட, எவ்வாறு அணுகப்பட வேண்டும் என விளக்குகிறது இன்றைய வலையொலி. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  34. மீன்கொத்தி மேலாண்மை

    இயற்கையில் நாம் காணும் பல வடிவங்கள் மிக நுணுக்கமானவை. அதிசயமானவை. இயற்கையை உற்றுநோக்கினால், வாழ்வதற்கான எல்லா உத்திகளும் மேலாண்மை தத்துவங்களும் நமக்கு புலப்படும். அதனை சரியான எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு- முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  35. தோன்றி உடன் மறையும் மேலாண்மை

    ”நேரம்” - எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. சமமானது. விதிவிலக்கற்றது. நேரத்தை சரியான கணித்து, அதற்கேற்றவாறு தனது வாழ்வு முறைமையை பயன்படுத்துவது மிக மிக முக்கியமானது. நேரத்தை பயன்படுத்தி எந்த செயலையும் செய்து முடிக்க குறுகிய காலத்தில் உடனடியாக திட்டம் தீட்டி செயல்படுத்துவது எவ்வாறு என…

    more
  36. சங்கிலி மேலாண்மை

    ஒரு நிறுவனத்திலோ அல்லது ஒரு செயல்திட்டத்திலோ நோக்கத்தை அடைய, கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை சீரான சங்கிலி தொடர்பு தேவைப்படுகிறது. அது எவ்வாறு எந்த வரிசையில் அமைந்திருக்க வேண்டும் என விவரிக்கிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  37. எட்டு முகன்

    ஒவ்வொருவரும் தன்னை அறிவதும் தமது பலம் மற்றும் பலவீனம் பற்றி அறிந்து அதனை சூழலுக்குத் தகுந்தவாறு பயன்படுத்துவது வெற்றிக்கு மிக மிக அவசியமானதும் காரணியாகவும் அமைந்துள்ளது. அது ஒரு உலகறிந்த வெற்றியாளருக்கு எவ்வாறு பயன்பட்டுள்ளது என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம்,...

  38. மறுசீரமைப்பு மேலாண்மை

    ஒரு நிறுவனத்திற்கான மறுசீரமைப்பு விதிகள் என்னென்ன, மற்றும் அவற்றை எப்பொழுது மேற்கொள்ள வேண்டும் என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. கருத்து முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  39. பணிக் கலாச்சாரம்

    பணி புரியும் இடத்தில் நாம் நமக்கு அமையும் சூழல்களுக்கு ஏற்ப, சூழலை உள்ளாரந்து கவனித்து, கருத்துணர்ந்து மேம்படுத்தி கொள்ள உதவும் கலாச்சார உத்திகள் பற்றி விளக்குகிறது இன்றைய வலையொலி. ஆக்கம் முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  40. முடிவெடுத்தல் மேலாண்மை

    ஒரு நிறுவனத்தில் எடுத்த முடிவு வெற்றி பெற உத்திகளும் அதற்கான செயல்படுத்தும் முறைகளும் அவசியம் இருத்தல் வேண்டும். அதற்கான வழிமுறைகளைப் பற்றி விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  41. அக்குவேர் ஆணிவேர் மேலாண்மை

    எந்தவொரு செயலையும், எதிர்காலத்திற்கான தேடலோடு கூடிய அணுகுமுறையை அமைத்துக் கொள்ளும் பொழுது அது உண்மையில் மிகச்சிறப்பான திட்டமாக அமைந்துவிடுகிறது. அதற்கான ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டை சுட்டிக்காட்டி மேலாண்மை நுணுக்கத்தை விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  42. சிலந்தி - மேலாண்மை

    பட்டுநூலை விட மென்மையாக வலையமைக்கும் சிலந்தி கூட தன் இரை பிடிக்க தனித்துவமான உத்திகளை பயன்படுத்துகிறது. எனில் அதிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் மேலாண்மை நுணுக்கங்களைப் பற்றி விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. ஆக்கம் முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  43. ஜப்பானின் தத்துவம்

    எந்த ஒரு பணியை செய்தாலும் அதில் மிக நேர்த்தியையும் துல்லியத்தையும் கடைபிடிப்பது ஜப்பானின் மிகச்சிறப்பான கலாச்சாரம் ஆகும். அந்நாட்டினர் கடைபிடிக்கும் சுய ஒழுங்கு எவ்வாறு மேம்பட்ட நிலையை அடைகின்றனர் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மேலாண்மை கோட்பாடுகள் என்னென்ன என விவரிக்கிறது இன்றைய...

  44. மனஅலைவு மேலாண்மை

    பல நேரங்களில் நாம் சிந்திக்கும் திறனையும், செயல்படும் திறனையும் பாதிக்கும் மன அழுத்தம் எனப்படும் தற்காலிக மன அலைவை எவ்வாறு கட்டுக்குள் வைப்பது மற்றும் அதனை தாண்டி நாம் எவ்வாறு வெற்றியடைவது என விளக்குகிறது இன்றைய வலையொலி. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  45. ஆணைப்பேராண்மை

    ஒரு நிறுவனத்தலைவராக இருப்பவர் எத்தொழிலை எவரிடம் வழங்கவேண்டும் என எவ்வாறு ஆய்ந்தறிந்து பணியை வழங்க வேண்டும் என்பதை நுணுக்கமாக விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  46. நிறுவன கற்றல்

    தானாக வளரும் ஒரு நிறுவனம் தொடர்ந்து தனது வழிமுறைகளில் மேலும் சிறந்த முன்னேற்றத்தை அடைவதற்காக தொடர்ந்து கற்றலில் ஈடுபட வேண்டும். அது எவ்வாறு என்பது குறித்தும், அதிலுள்ள மேலாண்மை நுணுக்கம் குறித்தும் விவரிக்கிறது இன்றையவலையொலி பதிவு. ஆக்கம் முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  47. வினைஞராட்சி மேலாண்மை

    எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் மிக முக்கியமானவர்களே. அவர்களது ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு நிறுவனம் முன்னேற்றம் குறித்து செயல்படும் பொழுது அது உறுதியாக வெற்றியை நோக்கி செல்லும். அது எவ்வாறு என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. கருத்து முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  48. விழிப்புநிலை மேலாண்மை

    தன் உணர்வுநிலை மற்றும் விழிப்புணர்வு ஆகிய இரண்டையும் சரியாக கைக்கொள்ளும் ஒருவரால், தான் செய்யும் செயல்களில் வெற்றியடைய இயலும். நமக்கு அமையும் சூழலில் எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என விளக்குகிறது இன்றைய வலையொலி பதிவு. முனைவர் மு.செல்வம், முதல்வர்.

  49. தான் தோன்றி மகாராஜா

    திட்டமிடல், ஊகித்தல், பகுப்பாய்வு, மாற்றுக் கருத்து கொள்ளுதல் மற்றும் புதுமைகளை புகுத்துதல் ஆகியவற்றை கொண்டிருந்த, ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகநீண்ட பேரரசை அமைத்த, மங்கோலிய பேரரசரின் அணுகுமுறைகளைப் பற்றி விளக்கி அதிலிருந்த மேலாண்மை நுணுக்கங்களைப் பற்றி விளக்குகிறது இன்றைய வலைப்பதிவு. கருத்து...

  50. சுயம்புத் தலைவன்

    அரசன் குடிமக்களைப் போல இருந்தால், மக்கள் அரசனைப் போல வாழ்வார்கள் என்ற கருத்தை நடைமுறைப் படுத்திய ஒரு பேரரசனின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய கருத்துகளைப் பற்றி எடுத்துரைக்கிறது இன்றைய வலையொலி. படைப்பு முனைவர் மு.செல்வம், முதல்வர்.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

இந்த வலையொலி பணியாளர் மேலாண்மை செய்யும் கலையை சிறப்பாக விளங்கி கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதை பேசுகிறது. படைப்பு முனைவர் திரு.மு.செல்வம், முதல்வர்.

HOSTED BY

DIET SALEM

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does செய்வோம், மேலாண்மை! have?

செய்வோம், மேலாண்மை! currently has 95 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is செய்வோம், மேலாண்மை! about?

இந்த வலையொலி பணியாளர் மேலாண்மை செய்யும் கலையை சிறப்பாக விளங்கி கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதை பேசுகிறது. படைப்பு முனைவர் திரு.மு.செல்வம், முதல்வர்.

How often does செய்வோம், மேலாண்மை! release new episodes?

செய்வோம், மேலாண்மை! has 95 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to செய்வோம், மேலாண்மை!?

You can listen to செய்வோம், மேலாண்மை! on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts செய்வோம், மேலாண்மை!?

செய்வோம், மேலாண்மை! is created and hosted by DIET SALEM.
URL copied to clipboard!